- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஜனவரி 18 2024 மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

ஜனவரி 18 2024 மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

- Advertisement -

கடன் பிரச்சனையில் விழி பிதுங்கி கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையக்கூடிய, வரப்பிரசாதமான நேரம் தான் இந்த மைத்ரேய முகூர்த்தம். சித்தர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரம் இந்த மைத்ரேய முகூர்த்த நேரம். கைநீட்டி கடன் வாங்கிய தொகையிலிருந்து ஒரு சின்ன தொகையை, இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் திருப்பிக் கொடுத்துப் பாருங்கள்.

அந்த கடன் சீக்கிரம் அடைய உண்டான வாய்ப்புகளை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். மைத்ரேய முகூர்த்த நேரத்தை பற்றிய இன்னும் நிறைய தகவல்கள் ஆன்மீகத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதெல்லாம் நமக்கு இப்போது தேவையில்லை. நாளைய தினம் மைத்ரேய முகூர்த்தம் எந்த நேரத்தில் வருகிறது. அந்த நேரத்தை எப்படி நாம் பயன்படுத்துவது என்பதை பற்றிய சில ஆன்மீகம் சார்ந்த தகவல்களை மட்டும் இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

நாளை ஜனவரி 18 மைத்ரேய முகூர்த்த நேரம்

நாளை காலை 11:41 மணியிலிருந்து மதியம் 1:21 மணி வரை இந்த மைத்ரேய முகூர்த்த நேரம் இருக்கிறது. இந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் நீங்கள் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு லட்சம் கடன் இருக்கிறது. ஆனால், கையில் தற்போது அவ்வளவு பணம் இல்லை. என்றாலும் சரி, நாளை குறிப்பிட்ட இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுங்கள். யாரிடம் நீங்கள் கைநீட்டி கடன் வாங்கினீர்களோ, அவர்களிடம் இந்த ஆயிரம் ரூபாயை கொடுக்கலாம். அவர்கள் வங்கி கணக்கில் கூட போடலாம்.

ஆனால் கடன் தொகை ரொம்ப பெருசு. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அவர்கள் வாங்க மாட்டார்கள் எனும் பட்சத்தில், என்ன செய்வது. ஒரு மொய் கவர் எடுத்துக்கோங்க. அந்தக் கவருக்கு மேலே நீங்க யாரிடம் கடன் வாங்கி இருக்கீங்களா, அவருடைய பெயரை எழுதுங்கள். அந்த கவருக்கு உள்ளே 1000 ரூபாயை வைத்து மடித்து உங்களுடைய வீட்டின் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த கவருக்கு உள்ளே ஒரு பிரியாணி இலையை வைத்து மூடி வைக்கவும். வாங்கிய கடனை சீக்கிரம் திருப்பி தர கையில் காசு சேர வேண்டும் என்று, இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இப்படி செய்தால், நீங்க யாரிடம் கைநீட்டி கடன் வாங்கினீர்களோ அவர்களிடம் இந்த கடனை திருப்பிக் கொடுத்ததாக அர்த்தம். அப்படித்தான் இந்த பிரபஞ்சமும் நினைத்துக் கொள்ளும்.

இதே போல நீங்கள் நிறைய பேரிடம், நிறைய கடன் வாங்கி இருக்கிறீர்களா. இரண்டு அல்லது மூன்று மொய் கவர் வாங்கி, அதன் மேலே, நீங்கள் யார்யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அவர் பெயரை எழுதி, தனி தனியாக பணத்தை போட்டு வைக்கலாம். கடனை திருப்பித் தரும்போது இந்த பணத்தையும் அந்த கடனோடு சேர்த்து திருப்பிக் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதே போலத்தான் வங்கியில் கடன் வாங்கி இருக்கீங்க. லோன் போட்டு இருக்கீங்க. அந்த கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்றாலும்,  அந்த மொய் கவருக்கு மேலே, வங்கி பெயரை எழுதி, உள்ளே ஒரு குறிப்பிட்ட தொகையை போடும்போது, உங்களுடைய லோன் மொத்தத்தையும் ஒரே தவணையில் கட்டக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

வருடகணக்கில் இழுக்கும் கடன், வட்டி குறைந்து சீக்கிரத்தில் அடையும். இதில் நம்பிக்கை உள்ளவர்கள் நிறைய பேர் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் கடனை திருப்பிக் கொடுத்து, பெரிய பெரிய கடன் பிரச்சனையிலிருந்து சுலபமாக வெளிவந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முழு நம்பிக்கையோடு மேல் சொன்ன பரிகாரத்தை குலதெய்வத்தை நினைத்து செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: சோதனைகளை கடந்து செல்ல பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு

நிச்சயம் உங்களுக்கு கடன் தொல்லை குறையும். நாளை வியாழக்கிழமையோடு சேர்ந்து இந்த மைத்ரேய முகூர்த்தம் வந்திருப்பதால், இந்த நாள் இன்னும் சிறப்பு. வியாழக்கிழமை குபேரருக்கு உரிய தினம். அதுமட்டுமில்லாமல் நாளை குரு பகவானுக்கு உரிய தினமும் கூட. ஆகவே இந்த நாளை யாரும் தவற விட வேண்டாம் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்