ஜப்பான் நாட்டின் சரஸ்வதி வழிபாடு

saraswati-compressed

மனிதர்களுக்கு ஞானம் என்கிற ஒன்றை குறித்து உலகிற்கு முதலில் கூறியது பாரத நாடு. பண்டைய காலம் முதலே பல புண்ணிய சீலர்கள் இந்த நாட்டில் தோன்றி, பல தத்துவ உபதேசங்களை வழங்கியுள்ளனர். அவர்கள் வழங்கிய அந்த ஞானோபதேசங்கள் கடல் கடந்து பிற தேசத்தவர்களையும் கவர்ந்துள்ளது. இந்த ஞானக்கருத்துக்களை நம் நாட்டவர்கள் அவர்கள் தேசத்திற்கு கொண்டு செல்லும் போது நமது நாட்டின் மதம், வழிபாட்டு முறைகள் மற்றும் இதர சடங்குகளும் அவர்கள் நாட்டிற்கு சென்றுள்ளன. அந்த வகையில் “ஜப்பான்” நாட்டில் கல்வி கடவுளான “சரஸ்வதி” தேவியின் வழிபாடு பற்றி இங்கு நம் அறிந்து கொள்ளலாம்.

இன்று மேற்கத்திய நாகரீகங்களுக்கு நிகரான நவீன விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பொருளாதார வளத்தையும் பெற்றிருக்கும் அதே நேரத்தில் தங்களின் பாரம்பரிய கலாச்சாரத்தையும் தற்காலத்திலும் காத்து வருகின்றனர். ஜப்பான் நாடு சுமார் நான்கு பெரும் தீவுகள் மற்றும் 6000 திற்கும் அதிகமான தீவுகள் கொண்ட ஒரு நாடாகும். பூகம்பம், கடல் சீற்றம் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஜப்பான் நாடும் ஒன்று.

ஜப்பான் நாட்டு வரலாறு மற்றும் புராணங்களின் படி “சூரிய” குலத்தில் தோன்றிய “யமாடோ” வம்ச சக்கரவர்த்திகள் தான் ஜப்பான் நாட்டின் அனைத்து பகுதிகளையும், ஒரே நாடாக இணைத்து ஆட்சி புரிந்தவர்கள் என கூறுகிறது. அவர்கள் காலத்தில் ஜப்பான் நாட்டின் மதம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சியும் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் பெரும்பான்மை மதங்களாக முன்னோர்கள் மற்றும் இயற்கை வழிபாடுகள், சடங்குகள் அதிகம் இருக்கும் “ஷிண்டோ” மதமும், “புத்த” மதமும் இருக்கின்றன. இந்த இரண்டு மதங்கள் மற்றும் அது சார்ந்த அனைத்தும் இந்தியாவில் இருந்து வந்த துறவிகளால் ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன என்று அவர்கள் நாட்டின் வரலாறு கூறுகிறது.

இந்து மதத்தில் கல்வி, ஞானம் ஆகியவற்றிற்கு கடவுளான சரஸ்வதி தேவி புத்த மதத்திலும் ஞானம் அருளும் பெண் தெய்வமாக வழிபடப்படுகிறாள். இந்தியாவில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு புத்த மதம் பரவிய போது, இந்த சரஸ்வதி தேவி வழிபாடும் அந்த நாட்டில் புத்த மதம் மற்றும் ஷிண்டோ மதத்தினரால் ஏற்றுக்கொள்ள பட்டு இன்றும் ஜப்பான் மக்கள் வழிபடுகின்றனர். ஜப்பானிய மொழியில் சரஸ்வதி தேவி “பென்சாய்டன்” எனஅழைக்கப்பட்டு வழிபடப்படுகிறாள்.

- Advertisement -

இந்த பென்சாய்டனும் நமது நாட்டின் சரஸ்வதி தேவி கையில் வீணை வைத்திருப்பதை போன்ற, தந்தி மீட்டும் இசைக்கருவியை வைத்திருக்கும் நிலையிலேயே சிற்பங்களும், ஓவியங்களும் இருக்கின்றன. ஜப்பான் நாட்டு மக்கள் தங்களின் பிள்ளைகள் கல்வி, கலைகளில் சிறக்கவும், முக்கிய தேர்வுகளில் சிறந்த முறையில் வெற்றி பெறவும் பென்சாய்டன் கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். ஜப்பானிய நாட்டின் பாரம்பரிய விழாக்காலங்களில் பென்சாய்டன் தெய்வத்திற்கு சிறப்பான பூஜை சடங்குகளை செய்து வழிபடுகின்றனர்.

இதையும் படிக்கலாமே:
பழங்கால பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் ஆஸ்திரேலியாவில் சோதிக்கப்பட்டதா

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான கட்டுரைகள் படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have details of Saraswati puja in Japan in Tamil.