பிரமாஸ்திரம் நாகாஸ்திரம் போன்றவரை பழங்கால ஆஸ்திரேலியாவில் சோதிக்கப்பட்டதா ?

asthiram

இன்று உலகம் முழுதும் பல்வேறு நாடுகள், மொழிகள், இனங்கள், மதங்கள், நிறங்கள் என அனைத்து வகைகளிலும் உலகெங்கும் வாழும் மனிதர்கள் பிரிந்திருக்கிறார்கள். ஆனால் இன்றும் உலக மக்களின் வாழ்வு மற்றும் கலாச்சாரத்தை ஆராயும் போது அவர்கள் அனைவரிடமும் எல்லா விடயத்திலும் ஏதாவது ஒரு ஒற்றுமை இருக்கிறது. நமது பாரதம் உலகின் மிக பழமையான மதத்தையும், பண்பாட்டையும் கொண்டது என்று நாம் அறிவோம். இந்த மதத்தின் தாக்கம் ஆஸ்திரேலியா கண்டத்தில் எப்படி ஏற்பட்டது என்பதை இங்கு அறிந்து கொள்வோம்.

globe

இந்த “ஆஸ்திரேலியா” தீவு அல்லது கண்டம் இன்று உலகின் கிழக்கு பகுதியில் இருக்கிறது. ஆனால் ஒரு சில புவியியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்து படி பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னாள் இந்த பூமியில் இருந்த அனைத்து கண்டங்களும் ஒன்றாக இணைந்திருந்த போது, அந்த ஒட்டுமொத்த நிலப்பரப்பும் “கோண்ட்வான” நிலப்பரப்பு என அழைக்கப்பட்டது. அப்போது இந்த ஆஸ்திரேலியா கண்ட நிலப்பகுதி “லெமூரியா” எனப்படும் தென்னிந்திய நிலப்பரப்புக்கு கீழே இருந்த பகுதியுடன் இணைந்திருந்ததாகவும், பிறகு பல கோடி ஆண்டுகள் இயற்கைமாறுதல்களால் இந்த ஆஸ்திரேலியா கண்டம் லெமூரியா கண்டத்தில் இருந்து கடல் நீரால் பிரிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

நமது ஆன்மீக பெரியோர்கள் சிலரின் கூற்று படி இந்த ஆஸ்திரேலியா கண்டம் என்பது நம் புராணங்களில் “அஸ்திர ஆலயா” என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். புராண காலத்திலேயே மனிதர்கள் மிக குறைவாக வாழும் பகுதியாக இக்கண்டத்தை அறிந்த, பல அமானுஷ்ய சக்திகள் கைவரப் பெற்ற இதிகாச மனிதர்கள் சிலர், இக்கண்டத்தில் “பிரமாஸ்திரம், நாகாஸ்திரம்” போன்ற சக்தி மிக்க அஸ்திர ஆயுதங்களை சோதித்து பார்த்துள்ளனர். எனவே தான் இது “அஸ்திர ஆலயா” என பெயரிடப்பட்டது.

tribe

ஆஸ்திரேலிய கண்டத்தில் மிகப்பழங்காலம் தொட்டு இன்று வரை பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பல பழக்கவழக்கங்கள் நமது நாட்டின் வாழ்க்கை முறை மற்றும் பண்பாட்டை ஒத்திருக்கின்றன. நமது இந்து மதத்தினர் போலவே இவர்களும் அந்நாட்டில் இருக்கும் ஒரு மலையை இறைவனாக எண்ணி வழிபடுகின்றனர். மேலும் இவர்கள் இனத்தின் இறைவழிபாட்டிற்குரிய தினத்தில் உடல் மற்றும் நெற்றியில் திருநீறு போன்ற ஒரு வெள்ளை நிற பொடியை பூசிக்கொண்டு, ஆகாயத்தை தங்களின் தந்தையாக போற்றி வழிபடுகின்றனர். இது சைவ சித்தர்களின் இறை வழிபாட்டை ஒத்திருக்கிறது.

tribe

அங்கு யாராவது நோய்வாய்பட்டிருந்தால் சில கட்டைகளை போட்டு தீமூட்டி, அதில் சில மூலிகைகளை இட்டு இறைவனை வணங்கி, அருள் பெற்று நோயாளிகளின் நோய்களை போக்குகின்றனர். இவர்கள் பேசும் மொழியில் மிக பழங்கால தமிழை ஒத்திருக்கும் சில வார்த்தைகள் இருக்கின்றன.”டிங்கோ” எனப்படும் ஆஸ்திரேலிய காட்டு நாய் மற்ற எந்த கண்டத்தின் நாயை விடவும் நம் இந்திய நாட்டின் நாயின் தோற்றத்தையும், உடலமைப்பையும் கொண்டிருக்கிறது. இது போன்ற பல்வேறு ஒற்றுமைகள் இந்தியர்களுக்கும் அந்த பழங்குடி இனத்தவருக்கும் உள்ளன.

தெய்வீகம் வீடியோ : Kovil
இதையும் படிக்கலாமே:
மலை குகையில் 32,000 வருட பழமையான நரசிம்மர் சிலை கண்டுபிடிப்பு

இது போன்ற மேலும் பல தகவல்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.