அடிக்கிற வெயிலுக்கு உடலை குளிர்ச்சியா வச்சுக்கணும்னா இப்படி சப்பாத்தி செய்து சாப்பிடுங்க. நாள் முழுவதும் டயர்டே ஆகாம ரொம்பவும் ஹெல்தியா இருக்க இந்த சப்பாத்திய கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.

chapathi
- Advertisement -

நம் ஆரோக்கியத்தை சரியாக பாதுகாத்துக் கொள்ள உணவை விட ஒரு சிறந்த வழி கிடையாது. உணவை சரியான முறையில் எடுத்துக் கொண்டாலே நாம் நீண்ட நாட்கள் வரை எந்த நோய் நொடியும் இன்றி ஆரோக்கியமாக இருக்க முடியும். அந்த வகையில் சப்பாத்தி எப்போதுமே நல்ல ஒரு ஹெல்தியான உணவு தான். அந்த சப்பாத்தி ரொம்பவும் வித்தியாசமாக இன்னும் ஹெல்தியாக எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த சப்பாத்தி செய்ய முதலில் ஒரு சிறிய சைஸ் சுரைக்காயை மேல் தோல் நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்தடன் 10 பல் பூண்டு தோல் உரித்தது, 1 சிறிய துண்டு இஞ்சி, 4 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் சீரகம் இவை அனைத்தையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அரைத்த இந்தமாவை ஒரு பவுலில் சேர்த்த பின்பு ஒரு கைப்பிடி கொத்தமல்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக 11/2 கப் கோதுமை மாவை சேர்த்து 1/4 டீஸ்பூன் உப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

மாவை பிசைவதற்கு நாம் அரைத்து இருக்கும் விழுதில் இருக்கும் தண்ணீரே போதும். ஒரு வேளை உங்களுக்கு மாவு கொஞ்சம் தளர்வாக இருப்பது போல் தோன்றினால் இன்னும் கொஞ்சம் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். மாவு கெட்டியாக இருப்பதாக தோன்றினால் லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளுங்கள். பிசைந்த இந்த மாவின் மேலே எண்ணெய் தடவி 20 நிமிடம் வரை அப்படியே மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது மாவை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதற்குள்ளாக அடுப்பில் தோசை கல் போட்டு அதை ஒரு புறம் சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு திரட்டி வைத்திருக்கும் உருண்டை எடுத்து சப்பாத்தி திரட்டும் கட்டையில் லேசாக மாவை போட்டு உருண்டைகளை வைத்து சப்பாத்தி கொஞ்சம் மெலிதாக திரட்டிக் கொள்ளுங்கள். ஏனெனில் சுரைக்காய் பச்சையாக அரைத்து சேர்த்திருக்கிறோம் மாவை தடிமனாக திரட்டி விட்டால் சரியாக வேகாது பச்சை வாடை வரும்.

இப்போது அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும் தோசை கால்லில் தேய்த்த சப்பாத்தியை சேர்த்து இரண்டு புறமும் மாற்றி மாற்றி திருப்பி போடுங்கள். இந்த சமயத்தில் அடுப்பை லோ பிளேமிற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சப்பாத்தி ஓரளவுக்கு சிவந்து வந்த பிறகு எண்ணெய் அல்லது நெய் ஏதேனும் ஒன்றை லேசாக தடவி நன்றாக சிவந்து வந்த பிறகு எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வழுவழுப்பு இல்லாத வெண்டைக்காய் பொரியல் எப்படி சுலபமாக செய்வது? இது தெரிஞ்சா இனி அடிக்கடி வெண்டைக்காய் பொரியல் தான் உங்க வீட்டில்!

இந்த வெயில் காலத்தில் நம் உடம்பில் இருக்கும் சூட்டை தணித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நீர்ச்சத்து மிக்க இந்த சுரைக்காய் பெரிதும் உதவி செய்யும். அதை வைத்து செய்யப்படும் இந்த சப்பாத்தியை காலை உணவாக எடுத்துக் கொள்ளும் போது அன்றைய நாள் முழுவதுமே நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியும். நீங்களும் இந்த ஒரு ஆரோக்கியமான சப்பாத்தி ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -