இட்லி மாவு இல்லையா? சட்டுனு சூப்பரான பஞ்சு போல இட்லி தயாரிக்க வீட்டில் ஜவ்வரிசி இருந்தா போதும்! மாவு அரைக்க வேணாம் அரைமணியில் தயார் செய்துவிடலாம்.

javvarisi-idli1_tamil
- Advertisement -

ஜவ்வரிசியும், ரவையும் இருந்தால் போதும் அரை மணி நேரத்தில் மணக்க மணக்க மல்லிப்பூ மாதிரி ஒரு இட்லி தயாரித்து அசத்திடலாம். இட்லி மாவு இல்லாத சமயங்களில் இது போல கொஞ்ச நேரத்தில் செய்து அசத்தக்கூடிய ரெசிபிக்கள் ஏராளம்! அந்த வகையில் ஜவ்வரிசி ரவை வைத்து மிருதுவான இட்லி எப்படி தயாரிக்கப் போகிறோம்? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

மாவு ஜவ்வரிசி – 100g, ரவை – ஒன்றரை கப், உப்பு – தேவையான அளவு. அரைக்க: கேரட் – 1, புதினா இலை – அரை கைப்பிடி, கருவேப்பிலை – அரை கைப்பிடி, பச்சை மிளகாய் – 2, சோம்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன். தயிர் – அரை கப், தண்ணீர் – ஒன்றரை கப், இஞ்சி – 1 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, நறுக்கிய குடைமிளகாய் – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை

முதலில் மாவு ஜவ்வரிசி 100 கிராம் அளவிற்கு எடுத்து மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் ஒன்றை கப் அளவிற்கு வறுத்த அல்லது வறுக்காத ரவை ஏதேனும் ஒன்றை சேர்த்து நன்கு நைசாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த இந்த பவுடரை ஒரு மிக்ஸிங் பௌலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். புதினா மற்றும் கறிவேப்பிலை இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் புதினா இலைகளும், கருவேப்பிலை இலைகளும் சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு தேவையான அளவிற்கு பச்சை மிளகாயை காம்பு நீக்கி போடுங்கள்.

- Advertisement -

பின் சீரகம் மற்றும் சோம்பை சேர்த்து, ஒரே ஒரு மீடியம் சைஸ் கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அரைத்து எடுத்த இந்த பேஸ்ட்டை மாவுடன் சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் அரைக்கப் அளவிற்கு கெட்டியான புளிக்காத தயிர் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருமுறை நன்கு கலைந்து வையுங்கள். ரவை தண்ணீரை நன்கு உரிய வேண்டும், அதனால் அப்படியே இருபது நிமிடம் ஊற விட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
மாவடு ஊறுகாய் போடுவது இவ்வளவு ஈஸியா? ஐயர் வீட்டு, மாவடுவை, நம்முடைய வீட்டிலும் சுலபமாக செய்யலாம் வாங்க.

பின்னர் இதனுடன் துருவிய இஞ்சி ஒரு ஸ்பூன், பொடிப்பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, விருப்பப்பட்டால் ஒரு கைப்பிடி அளவிற்கு குடைமிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேருங்கள். பின்னர் இட்லி மாவு போல கெட்டியான பதத்திற்கு வர தேவைக்கு ஏற்ப கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இட்லி தட்டில் ஒரு துணியை விரித்து அதில் ஒவ்வொரு குழிகளிலும் இந்த மாவை ஊற்றி பத்து நிமிடம் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வேக வைத்து எடுத்த இந்த இட்லியை அப்படியே சட்னி வெச்சி சாப்பிடலாம் அல்லது உதிர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை, கடலை பருப்பு ஆகியவற்றை போட்டு தாளித்து இட்லி பொடியை தூவி அப்படியே பொடிமாஸ் செய்தும் சாப்பிடலாம் சூப்பராக இருக்கும்.

- Advertisement -