இந்த பவுடர் உங்க வீட்டில் இருக்கிறதா? இருந்தா ரொம்ப சுலபமாக இது போல புதுமையான இனிப்பு நொடியிலே செஞ்சு பாருங்க எல்லோருமே பாராட்டுவாங்க!

javvarisi-sweet
- Advertisement -

விதவிதமான இனிப்பு வகைகளில் இது போல ஜவ்வரிசி கொண்டு செய்யப்படும் இனிப்பிற்கு அமோக வரவேற்பு இருக்கும். ஜவ்வரிசி கொண்டு பாயாசம் செய்வதை பார்த்திருப்போம். அது போல இதுவும் ஒரு வகையான பாயாசம் தான் ஆனால் இதில் சேர்க்கப்படும் வெண்ணிலா கஸ்டர்ட் பவுடர் ரொம்பவே சூப்பரான சுவையைப் கொடுக்கப் போகிறது. குறைந்த செலவில் ரிச் லெவல் ஜவ்வரிசி இனிப்பு எப்படி செய்யலாம்? என்பதை இனி இந்த பதிவின் மூலம் நீங்கள் கற்றுக் கொள்ள போகிறீர்கள்.

ஜவ்வரிசி இனிப்பு செய்ய தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – ஒரு கப், சர்க்கரை – ஒன்றரை கப், வெண்ணிலா கஸ்டர்டு பவுடர் – ஒரு கப், பால் – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – ஒரு ஸ்பூன், பாதாம் – 6.

- Advertisement -

ஜவ்வரிசி இனிப்பு செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் அளவிற்கு ஜவ்வரிசியை எடுத்து சுத்தம் செய்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் வேக வைத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடம் ஜவ்வரிசி நன்கு வேக வேண்டும். அதற்குள் ஒரு சிறிய பாத்திரத்தில் வெண்ணிலா கஸ்டர்டு பவுடர் ஒரு கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் பால் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். கட்டிகள் இல்லாமல் இவற்றை நன்கு கலந்து விட்ட பின்பு ஜவ்வரிசி வெந்து விட்டதா? என்று பாருங்கள்.

ஜவ்வரிசி பத்து நிமிடத்தில் நன்கு வேகும், அதன் பிறகு நீங்கள் கரைத்து வைத்துள்ள இந்த வெண்ணிலா கஸ்டர்ட் பவுடரையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். ஒரு கொதி வரும் வரை காத்திருங்கள். அதன் பிறகு ஒன்றரை கப் அளவிற்கு சர்க்கரை அளந்து சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த இனிப்பு ஓரளவிற்கு நீர்க்க இருக்க வேண்டும், எனவே இந்த பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கழுவி அந்த தண்ணீரையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஜவ்வரிசி இனிப்பு நன்கு கொதித்து வர வேண்டும். நைசாக பொடித்து வைத்துள்ள ஏலக்காய் தூள் அரை ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து விடுங்கள். ஜவ்வரிசியுடன் இந்த இனிப்பு நல்ல வாசமாக இருக்கும். நன்கு ஜவ்வரிசி இனிப்பு கொதித்து வரும் பொழுது அடுப்பை அணைத்து அதை உங்களுக்கு தேவையான டம்ளர்களில் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் பொடித்த பாதாம் துண்டுகளை அதன் மீது அலங்காரம் செய்யுங்கள். அவ்வளவுதான் சுடச்சுட ஒரு ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு டேஸ்டியாக இருக்கும்.

ரிச் லெவல் ஜவ்வரிசி இனிப்பு வித்தியாசமான முறையில் நீங்களும் இதே போல உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள். நீங்கள் தான் செய்தீர்களா? என்று ஆச்சர்யப்பட்டு போவார்கள். விதவிதமான இனிப்பு வகைகள் செய்ய விரும்புவோர் இது போல குறைந்த செலவில் புதுமையான இனிப்பு வகைகளை ட்ரை பண்ணிப் பார்க்கலாம். இந்த ஜவ்வரிசி பாயாசம் இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, உங்க வீட்டில் இருப்பவர்களையும் அசத்தி விடலாம்.

- Advertisement -