பும்ரா இந்திய அணியில் விளையாட நானே காரணம் ஏன் தெரியுமா – ஜான் ரைட்

john

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இளம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா திகழ்ந்தார். அவர் இந்த போட்டியில் இரு இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசி 9 விக்கட்டுகளை சாய்த்தார்.

pujara

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : இந்திய அணியில் நிச்சயம் பும்ரா இடம்பெற்று மிகச்சிறந்த பந்துவீச்சாளராக உருவெடுப்பார் என்று நான் முன்பே கணித்தேன். அதனாலே அவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்க பரிந்துரைத்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைத்தேன்.

2013ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடந்த போட்டி ஒன்றில் பும்ராவினை முதன்முறையாக பார்த்தேன். அவரது வழக்கத்திற்கு மாறான பவுலிங் ஸ்டைல், பக்கா யார்க்கர் என்னை மிகவும் கவர்ந்தது. அதே வேளையில் சர்வதேச போட்டிகளுக்கு தேவையான வேகமும் அவரிடம் இருந்ததை நான் உணர்ந்தேன். அதனாலே 2013ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆலோசகராக இருந்த நான் அவரை ஏலம் எடுக்க அணி உரிமையாளருக்கு பரிந்துரைத்தேன்.

bumrah

நான் நினைத்தது போலவே IPL போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக கடைசி டெத் ஓவர்களில் அபாரமான அவரது பவுலிங் ஸ்டைல் வெளிப்பட்டது. இதன் காரணமாகவே இந்திய அணியில் அவர் விரைவில் இடம்பிடித்து என்று சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். என்று கூறி பேட்டியை முடித்தார் ஜான் ரைட்.

இதையும் படிக்கலாமே :

பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரரின் மனைவி மரணம்.! வருத்தத்தில் மூழ்கிய அணி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்