மூட்டுவலி, முதுகுவலி, கை கால் வலியால் ரொம்ப அவதிப்பட்டு வருகிறீர்களா? இந்த எண்ணெயை இத்தனை நாளா தடவாமல் விட்டுட்டீங்களே! ஒரே நாளில் நிவாரணம் தரும், 1 ஸ்பூன் எண்ணெய்!

pain
- Advertisement -

சில பேருக்கெல்லாம் மூட்டு வலி, முதுகு வலி, கை கால் வலி, இடுப்பு வலியால் தரையில் உட்கார்ந்து கூட எழுந்திருக்க முடியாத அளவிற்கு வேதனையைக் கொடுக்கும். இதற்கு காரணம் உடலில் சரியான ஊட்டச்சத்து இல்லாததுதான். எலும்பு தேய்மானம் இப்போதெல்லாம் சீக்கிரமே வந்துவிடுகிறது. 90 வயது பாட்டி கூட சுறுசுறுப்பாக வேலையைச் செய்யும். 30 வயது உள்ள பெண்ணால் அந்த வேலையை செய்ய முடியாது. என்னசெய்வது காலமும் சூழ்நிலையும் மாறி விட்டது. நாம் சாப்பிடும் சாப்பாட்டில் ஊட்டச்சத்து இல்லை. செயற்கையான முறையில், பதம் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதும் இப்படிப்பட்ட வலிகள் வருவதற்கு ஒரு காரணமாக இருந்து வருகிறது.

mudakathan-4

வெறும் அரிசி சம்பந்தப்பட்ட உணவை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, மற்ற தானிய வகைகளையும் நம் உணவோடு சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் மேன்மை அடையும். சரி, இப்போது மூட்டுவலி, இடுப்பு வலி, கைகால் வலி வந்துவிட்டது என்ன செய்வது? கடைகளில் விற்கும் ஏதாவது ஒரு தைலத்தை வாங்கி வலி உள்ள இடத்தில் தேய்த்து கொடுக்கின்றோம். அதிலும் கட்டாயம் கெமிக்கல் கலந்திருக்கும். எந்த வகை செயற்கை பொருட்களும் சேர்க்காத, நம் கையாலேயே இந்த எண்ணையை தயாரித்து, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வலி உள்ள இடத்தில் தேய்த்து கொடுத்தாலே போதும். வலி மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். அது எந்த எண்ணெய்? அந்த எண்ணெயை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இந்த எண்ணெயை செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம். நல்லெண்ணெய் –  200 ml, முடக்கத்தான் கீரை – 2 கைப்பிடி அளவு, சிறிய துண்டு இஞ்சி, பூண்டு – 6 பல், லவங்கம் – 5, பட்டை – 2 துண்டு, கற்பூரம் – ஒரு சிறிய கட்டி (ஒரு ஸ்பூன் கற்பூரத் தூள் வருமளவிற்கு போதும்), மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்.

nallennai

ஒரு மிக்ஸி பௌலில் இந்த பொருட்களை எல்லாம் போட்டு, கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரிவர்ஸ் பட்டன் வைத்து பொடி செய்து கொண்டால் போதும். கற்பூரத்தூளையும் மஞ்சள் தூளையும் மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் 200ml சுத்தமான நல்லெண்ணெயை ஊற்றி சூடு படுத்திக் கொள்ளுங்கள். அது கொஞ்சம் சூடான பின்பு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை சேர்த்து, எண்ணெயில் சிடுசிடுப்பு அடங்கும் வரை கொதிக்கவிட்டு, அதன் பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, இறுதியாக கற்பூரத்தையும், மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

அடுத்தபடியாக ஒரு வெள்ளை காட்டன் துணியில் இந்த எண்ணெயை நன்றாக வடிகட்டி பிழிந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெயிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து எந்த இடத்தில் வலி உள்ளதோ அந்த இடத்தில் லேசாக தடவவேண்டும். அழுத்தி மசாஜ் செய்து விடாதீர்கள். லேசாக தடவி கொடுத்தாலே போதும்.

- Advertisement -

backbonepain

காலை ஒரு முறை, மாலை ஒரு முறை இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். நிச்சயமாக மூட்டு வலியா இருந்தாலும், இடுப்பு வழியாக இருந்தாலும், கழுத்து வழியாக இருந்தாலும் அந்த வலி நிரந்தரமாக, படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும். ஒவ்வொரு முறை இந்த எண்ணெயைப் பயன்படுத்தும் போதும் நன்றாக குலுக்கி விட்டு பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த எண்ணையை தடவுவதன் மூலம், 100 சதவிகிதம் எந்த ஒரு பக்கவிளைவும் வராது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படிக்கலாமே
மண்ணே இல்லாமல் வெறும் தண்ணீரில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி? கொத்தமல்லி தழை, புதினா இலை, இஞ்சி போன்றவற்றை அதிக நாட்கள் வரை பராமரிப்பது எப்படி தெரியுமா?

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -