சிறந்த ஜோதிடர் ஆவதற்கான ஜாதக அமைப்பு

jodhidam-astrology
- Advertisement -

ஜோதிடம் என்பது வானியல் விஞ்ஞானம் சார்ந்த ஒரு கலையாகும். பழங்காலந்தொட்டே நமது பாரத நாட்டில் ஜோதிட கலை மற்ற எல்லா கலைகளையும் போலவே போற்றப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது. அக்காலத்தில் மன்னர்களின் அரண்மனையில் அனுபவம் வாய்ந்த ஒரு ஜோதிடர் ஒருவர் எப்போதும் இருப்பார். நாட்டில் வாழும் மக்களின் நன்மைக்காக செய்யும் எந்த ஒரு காரியத்தையும் ஜோதிடரிடம் கேட்டபிறகே செய்தனர். உன்னதமான இந்த ஜோதிட கலையில் தேர்ச்சி பெற்று நாமும் சிறந்த ஜோதிடர் ஆக முடியுமா? என்கிற கேள்விக்கான பதில்களை இங்கு காண்போம்.

astrology

நமது பண்டைய பாரத நாட்டில் மட்டுமல்ல பழங்கால “எகிப்திய, சீன, கிரேக்க, ரோமானிய” நாடுகளிலும் இத்தகைய அரசவை ஜோதிடர்கள் இருந்தனர். அந்த ஜோதிடர்கள் அனைவருமே தங்களின் ஜோதிட திறனில் மிக சிறந்தவர்களாக இருந்ததால் அவர்கள் கூறிய பலன்கள் அனைத்தும் சரியாக இருந்தன. இந்த ஜோதிட கலையை பயன்படுத்தி அக்கால மன்னர்கள் பலர் பல சிறப்புகளையும், வெற்றிகளையும் பெற்றிருக்கின்றனர்.

- Advertisement -

ஜோதிடம் பற்றி கேள்விப்படும்போது நம்மில் பலருக்கும் எழும் கேள்வி நாமும் ஜோதிட கலையில் தேர்ந்து ஜோதிடர் ஆக முடியுமா என்பது தான். தற்காலங்களில் ஜோதிடம் பற்றி பல புத்தகங்களும், வலைத்தளங்களில் பல கட்டுரைகள், தகவல்களை அறிந்து கொள்வதால் மட்டுமே ஜோதிட கலையில் தேர்ந்து விட்டதாக சிலர் கருதுகின்றனர். இறைவனின் அருள் மற்றும் ஜோதிட கலையை கற்று தரும் அனுபவம் வாய்ந்த குரு வாய்க்கப்பெற்றால் யாரும் சிறந்த ஜோதிடர் ஆகலாம். ஆனால் ஒரு சிறந்த ஜோதிடர் ஆவதற்கான ஜாதக அமைப்பு பற்றி ஜோதிட கலையின் பிதாமகர்கள் கூறியுள்ளனர். அவற்றில் முக்கியமானவை குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

ஜோதிடம் என்பது வானியல் மற்றும் கணிதம் சம்பந்தபட்ட ஒரு கலையாகும். ஒரு மனிதனுக்கு சிறந்த கணித திறன் அருள்பவர் நவகிரகங்களில் அறிவு மற்றும் கல்வி புலமைக்கு காரகனாகிய புதன் பகவான் ஆவார். எனவே எந்த ஒரு நபரின் ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றாலும் அல்லது புதன் சுப கிரக பார்வை பெற்றாலும், அந்த ஜாதகருக்கு இயற்கையிலேயே ஜோதிட கலையின் மீது ஆர்வம் ஏற்படும். மேலும் அவர் கணிக்கும் ஜாதகத்தின் பலன்கள் துல்லியமானதாக இருக்கும்.

- Advertisement -

kethu

ஜோதிட கலையில் புதனின் அனுகிரகம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவிற்கு நிழற்கிரகங்களான ராகு – கேதுவில், கேது கிரகம் அந்நபரின் ஜாதகத்தில் அமைந்திருக்கும் நிலை குறித்தும் ஆராய வேண்டும். கேது பகவான் நமது சாஸ்திரங்களில் ஞானகாரகன் என அழைக்கப்படுகிறார். புதனின் பலம் கொண்டு ஒருவருக்கு பலன்களை கணித்து விடலாம், ஆனால் நாம் கூறும் பலன்கள் பலிதம் ஆவதற்கு நமது ஜாதகத்தில் கேது பலம் பெற்றிருக்க வேண்டும். கேது ஜாதகத்தில் சிறப்பான நிலையில் உள்ள ஒரு சில ஜோதிடர்களால் பலன் கேட்க வருபவர்களின் முகத்தை கொண்டே பலன்களை கூறவும் இயலும்.

இதையும் படிக்கலாமே:
பாச யோக பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Jothida kalai in Tamil. It is also called Jothidam parka in Tamil or Jathagam parka in Tamil or Jothidam karka in Tamil or Jothidar aavadhu eppadi in Tamil.

- Advertisement -