எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் அந்த பணம் கையில் சேமிப்பாக தாங்குவதில்லை. வந்த பணம் சுப செலவுக்காக பயன்படுத்தப்படுவது கிடையாது. ஏதாவது ஒரு வீண் விரைய செலவு வந்து கையில் இருக்கும் பணம் எதற்குமே பிரயோஜனப்படாமல் போகிறது. இப்படி ஒரு கஷ்டம், ஒரு மனிதனுக்கு இருந்தால், எவ்வளவு ஒரு பெரிய கவலை அவனுக்கு இருக்கும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும்.
ஏனென்றால் நம் ஒவ்வொருவரும் இதுபோல பிரச்சனையை நிச்சயம் சந்தித்திருப்போம். நாம் சம்பாதித்த பணம் அத்தனையும் நல்ல விதத்தில் தான் செலவாகிறது என்று சொல்லவே முடியாது. 100 ரூபாய், வருமானம் வந்தால், பத்து ரூபாய் நல்ல விதத்தில் செலவானால், மீதம் இருக்கும் 90 ரூபாயும் வீண் விரைய செலவுக்குத்தான் போகிறது. இந்த பிரச்சினையிலிருந்து விடுபட வேண்டும்.
இந்த மாதம் வரக்கூடிய சம்பளம் எனக்கு பிரயோஜனமாக செலவாக வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்வது. பிள்ளையாரை நினைத்து இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்களேன். உங்கள் வருமானம் நிலையாக உங்களிடத்தில் தங்கும். வருமானம் வீண் விரைய செலவு ஆகாது. இன்று ஜூலை மாதத்தின் முதல் தேதி. இன்று இந்த பரிகாரத்தை துவங்குவது அதிசிறப்பான பலனை கொடுக்கும்.
பிள்ளையார் வழிபாடு
ஒன்றுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை. பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி பூஜையறையில் வழிபாட்டை மேற்கொள்வீர்கள். அதுபோல வழக்கம் போல பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து பன்னீரில் சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மஞ்சள் நிற துணியில் இந்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து முடிந்து உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, குலதெய்வத்தையும் பிள்ளையாரும் மனதார வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வீண் விரைய செலவு இனி வரக்கூடாது. பணம் கையில் தங்க வேண்டும். என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, அந்த ஒரு ரூபாய் முடிச்சை பூஜை அறையில் வைத்து விடுங்கள். சரியாக 11 நாள் தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி இந்த வேண்டுதலை தொடர்ந்து விநாயகரிடம் வைக்க வேண்டும்.
ஒரு பரிகாரம் செய்யும் பட்சத்தில், ஒரே நாளில் பலன் கிடைக்க வேண்டும் என்றால் அது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒரு பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு 11 நாள் செய்யும்போது அதற்கு கிடைக்கக்கூடிய பலன் அபரிவிதமாக இருக்கும். அதை மனதில் வைத்துக் கொண்டு 11 நாள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி இந்த பிரார்த்தனையை செய்து, பதினோராவது நாள் அந்த ஒரு ரூபாய் முடிச்சை கொண்டு போய் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள்.
இதை செய்தாலே போதும். வீண் விரைய செலவுகள் இந்த மாதத்தில் இருந்து குறைய தொடங்கும். இந்த மாதம் நிறைய பேருக்கு 3ம் தேதி சம்பளம், 5ஆம் தேதி சம்பளம், 10தேதி சம்பளம் இப்படி எல்லாம் நிச்சயம் வரும் அல்லவா. இப்படி இந்த மாதம் வரக்கூடிய சம்பளம் எப்படி செலவாகிறது அந்த சம்பளத்திலிருந்து எவ்வளவு மிச்சம் பிடித்தீர்கள்? எவ்வளவு மருத்துவமனைக்கு கொடுத்தீர்கள் என்ற கணத்தை பார்த்தாலே தெரிந்துவிடும். இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கக்கூடிய சக்தி.
இதையும் படிக்கலாமே: இன்று அதிசக்தி வாய்ந்த சஷ்டி திதி வழிபாடு
அதிசக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை இன்று மாலை தவறாமல் வீட்டில் செய்து விடுங்கள். ஆண்கள் பெண்கள் உங்களுடைய பிள்ளைகள் யார் வேண்டும் என்றாலும் பூஜையறையில் இந்த பரிகாரத்தை செய்து பிரார்த்தனை வைக்கலாம். உங்கள் குடும்பத்திற்கே நல்லது நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.