ஜூன் மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லியமான கணிப்பு!

june-month-rasi-palan

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு எதிர்பார்ப்போடு தான் ஆரம்பிக்கிறது. ஜோதிட ரீதியாக ஒவ்வொரு மாதத்திலும் 12 ராசிகளுக்கான பலன்கள் கணிக்கப்படுகின்றன. பொதுப்படையாக ஒவ்வொரு ராசிக்கும் இப்படியான பலன்கள் ஏற்படும் என்று நவ கிரகங்களின் அடிப்படையில் பொதுவான பலன்கள் கூறப்படும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமையில் துவங்க இருக்கும் ஜூன் மாதத்தில் 12 ராசிகளுக்கும் எப்படியான பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றி உங்களுக்குத்தான் கிடைக்கும். இந்த மாதம் புத்திசாலித்தனமாகவும் அறிவுக்கூர்மையுடனும் நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சமயோஜித புத்தியுடன் செயல்பட்டால் அனைவரிடமும் பாராட்டுக்களை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் நல் உறவை மேம்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ சில விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. திடீர் அதிர்ஷ்டங்கள் ஒரு சிலருக்கு ஏற்படும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான பலன்கள் இருப்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது எச்சரிக்கை தேவை. ஸ்ரீ கிருஷ்ணரை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக அமைய இருக்கிறது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றி உங்கள் பக்கம் திரும்பும். புதிய முயற்சிகள் அனுகூலமான பலன்களை கொடுக்கும். குடும்பத்தில் அமைதியும் அன்பும் அதிகரிக்கும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் இனி புரிந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் லட்சிய பாதையை நோக்கிய பயணம் தொடரும். உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இம்மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. காலம் தாழ்ந்து எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் விரயத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேச்சில் தன்னம்பிக்கை தெரியவரும். புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். நண்பர்களின் ஆதரவு அவர்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தன்னுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உரிய காலம் வரும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நல்லிணக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் நடக்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மனதில் நினைத்த விஷயங்கள் நிறைவேறுவதற்கு உரிய மாதமாக இருக்கும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகள் ஜெயம் காணும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதில் எச்சரிக்கை தேவை. எதையும் ஒரு முறைக்கு இரு முறை ஆலோசனை செய்து விட்டு முடிவெடுப்பது நல்லது. சகோதர சகோதரிகள் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. நவகிரக வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.

சிம்மம்
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தொடர்ந்து பதட்டம் நீடிக்க வாய்ப்புகள் உண்டு. பணி சுமை கூடும் என்பதால் தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நாணயமும், பேச்சில் கவனமும் தேவை. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் எனினும் கூடுமானவரை தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதால் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. முருக வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

கன்னி
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிலும் ஜெயம் காணலாம். புதிதாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நிலுவையில் இருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும் என்பதால் கூடுமானவரை பணியில் கவனமுடன் இருப்பது நல்லது. உங்கள் திறமைக்கு உரிய ஊதியம் கிடைக்கும். மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர புதிய யுக்திகளை கையாளுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ கூடுமானவரை அனுசரித்து செல்வது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் வெற்றி காணலாம். ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். சனி பகவான் வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் நீங்கள் பல நாள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் அமையும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியில் முடியும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் வரவுக்கு மீறி ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்த்து கொள்ளலாம். பணியிடங்களில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவி உறவில் இணக்கம் ஏற்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம்
Virichigam Rasi
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். தெளிவான ஒரு பாதையை வடிவமைத்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்துகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெரிய தொகையை முதலீடாக ஈடுபடுத்தும் முன்னர் கவனம் தேவை. பெரிய மனிதர்களின் ஆலோசனை கேட்டு முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் உத்வேகம் இருக்கும். சக பணியாளர்கள் இடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய தொழில் முயற்சிகள் அனுகூல பலன் தரும். கணவன் மனைவிக்கு இடையே நடந்து வந்த பனிப்போர் நீங்கும். ஆரோக்கியம் சீராக இருக்க கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எடுக்கும் முயற்சியில் கூடுதல் பயிற்சி தேவைப்படும். ஆரோகி ரீதியான விஷயங்களில் வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத பணவரவு உற்சாகத்தை அளிக்கும். பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கை பிறக்கும். மனைவி வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியிடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது உத்தமம். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். குரு பகவானை வழிபட்டு வர நன்மைகள் நடக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் துணிச்சலுடன் முடிவு எடுப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். எதிலும் வெற்றி காண வேங்கடவனை வழிபடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரியும் பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படும். எதிர்பார்க்கும் சில விஷயங்களில் காலதாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பொறுமையுடன் யோகா போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளில் மூன்றாம் மனிதர்களின் தலையீடு இருப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பணவரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் அமைதி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையற்ற ஒப்பந்தங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் குடும்பத்தில் இருக்கும் நபர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள், பதவி உயர்வுகள் கிடைப்பதில் சாதகமான பலன்கள் உண்டாகும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும் என்பதால் மனதில் உளைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம் அமைதி காணலாம். ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும்.

மீனம்
Meenam Rasi
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக அமைய இருக்கிறது. இதுவரை இருந்து வந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிணக்குகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கு மீறிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய நினைவுகளை அசை போடுவதற்கு உரிய நேரமாக இருக்கும். அதிகம் பதட்டப்படாமல் மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்வது நல்லது. உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். சங்கடங்கள் தீர விநாயகரை வழிபட்டு வாருங்கள்.