துன்பங்கள் தூரம் ஓட, உங்களை பிடித்த பீடை நீங்க, பிரம்ம முகூர்த்தத்தில் காலில் இந்த கயிறை கட்டிக் கொள்ளுங்கள்! அதன் பிறகு வெற்றிகள் குவியும் பாருங்கள்.

anjaneyar-karuppu-kayiru
- Advertisement -

நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கு பின்னாலும், ஒவ்வொரு விதமான பலன்கள் கிட்டும் என்கிறது சாஸ்திரங்கள். அதனால் தான் புண்ணிய காரியங்கள் செய்ய வலியுறுத்தப்படுகின்றன ஆனால் இன்று கலியுகத்தில் ஒவ்வொருவரும் பாவங்களை தான் அடுக்கி சேர்த்துக் கொண்டு இருக்கிறோம். இதன் விளைவு ஒரு சிலருக்கு அந்தந்த சமயங்களில் கிடைத்தாலும், ஒரு சிலருக்கு பின் நாட்களில் தான் கிடைக்கும்.

நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பாவங்களும், துன்பங்களும் நம்மை பின் தொடர்கின்றன. இந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு முதலில் நம்முடைய மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை தூக்கி எறிய வேண்டும். எவ்வளவு தான் உங்களை இந்த பிரபஞ்சம் கெட்டதை செய்ய தூண்டினாலும், நீங்கள் நல்லதை செய்வதற்கு முழு முயற்சியும் செய்ய வேண்டும். நம்மை பிடித்த பீடை நம்மை விட்டு ஒழிந்தால் தான் நம்முடைய எண்ணங்களும் சரியாக இருக்கும். இதை செய்வதற்கு பிரம்ம முகூர்த்தத்தில் காலில் இந்த கயிறை கட்டிக் கொள்ள வேண்டும். அது என்ன கயிறு? எப்படி அணிய வேண்டும்? இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்கிற ஆன்மீக தகவலை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

பொதுவாக காலில் கருப்பு கயிறு அணிந்து கொண்டிருக்கும் சிலரை நாம் பார்த்திருக்கிறோம். காலில் கருப்பு கயிறு அணிவதால் நம்மை துஷ்ட சக்திகளும், தீய சக்திகளும் அண்டாது என்பது தான் நியதி! நம்மிடம் இருக்கும் பீடைகளும், தரித்திரங்களும் ஒழிந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்க இது போல் காலில் கயிறு கட்டிக் கொள்ளலாம். இந்த கயிறை எப்படி கட்டிக் கொள்ள வேண்டும் என்பதிலும் முறைகள் உண்டு எனவே அந்த முறைகளை சரியாக பின்பற்றி கருப்பு கயிறு காலில் அணிந்து கொள்வதால் கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம்.

கருப்பு கயிறு காலில் முதன் முதலில் அணிந்து கொள்பவர்கள் சனிக்கிழமைகளில் அணிந்து கொள்ள வேண்டும். வலது காலில் மட்டுமே இந்த கருப்பு கயிறை அணிந்து கொள்ள வேண்டும். ஆண், பெண் இருபாலரும் எவர் வேண்டுமானாலும் கருப்பு கயிறு தாராளமாக அணிந்து கொள்ளலாம். இந்த கருப்பு கயிற்றில் ஒன்பது முடிச்சுகள் இட்டுக் கொள்ள வேண்டும். ஒன்பது முடிச்சுகளும் நவகிரகங்களை குறிக்கிறது. நவகிரகங்களின் ஆற்றல்களை கட்டுப்படுத்தி, நமக்கு நற்பலன்களை கொடுக்கவே இதுபோல கயிறுகள் கட்டப்படுகிறது.

- Advertisement -

மேலும் வலது காலில் கயிறு கட்டுவதால் தரித்திரம், பீடை போன்றவை நம் உடலில் இருந்து நீங்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு. சனிக்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கொள்ளுங்கள். அப்படி பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியாதவர்கள், நண்பகல் 12 மணிக்கு சரியாக இந்த பரிகாரத்தை செய்யலாம். சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஒன்பது முடிச்சுகள் இடப்பட்ட கருப்பு கயிறு ஒன்றை அவருடைய பாதத்தில் வைத்து வணங்கி, நீங்கள் கட்டிக் கொள்ளலாம்.

கயிறு கட்டும் பொழுது துர்கா தேவி மந்திரம் அல்லது ஸ்ரீ ராமஜெயம் போன்ற மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இது அந்த கயிற்றுக்கு சக்திகளை கொடுக்கும். மேலும் கருப்பு கயிறு கட்டி கொண்ட பின்பு அதை அவிழ்ந்து விடாமல் பத்திரமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை கட்டிய கயிறை 48 நாட்கள் வரை மாற்றக்கூடாது. இப்படி முறையாக நீங்கள் கருப்பு கயிறு உங்களுடைய காலில் கட்டி பாருங்கள், உங்களிடம் இருக்கும் பிரச்சினைகளும் நீங்கி, யோகம் வருவதை காணலாம்.

- Advertisement -