கடக லக்னகாரர்களுக்கு இந்த கிரகங்களால் வருமானம் பெருகும் தெரியுமா?

kadagam

சுறுசுறுப்பாக இயங்கும் மனிதனுக்கு மட்டுமே வாழ்வில் அனைத்து வகையான செல்வங்களும் சேரும் சுறுசுறுப்பாகவும் உற்சாகத்துடனும் நாம் செய்கின்ற எந்த ஒரு வேலையிலும் நமக்கு மகிழ்ச்சியையும் நல்ல ஒரு வரவையும் தருவதாக இருக்கிறது ஜோதிட சாஸ்திரத்தின்படி மிகுந்த உற்சாகமாக செயல்படும் ராசியினர் என கடக ராசியினர் குறிப்பிடப்படுகின்றனர். அந்த கடக ராசியினருக்குரிய சந்திர பகவானை மனோகாரகன் என்றும் கூறுவர். ஒரு மனிதனின் மனதிற்கு காரகனாக சந்திர பகவான் இருக்கிறார். கடக ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களின் ஜாதக படி அமையும் வேலை மற்றும் தொழில்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Kadagam

“கடகம்” என்ற வார்த்தை “கர்க்கடகம்” எனப்படும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவான ஒன்றாகும். இந்த வார்த்தையின் பொருள் “நண்டு” ஆகும். நண்டு பொதுவாக நீரில் வசிக்கும் ஓரு உயிரனமாகும். பஞ்சபூதத்தில் நீரை ஆளும் கிரகமாக “சந்திர பகவான்” இருக்கிறார். எனவே சந்திர பகவானின் “சொந்த”
ராசியாக கடக ராசி இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

கடக ராசி மட்டும் லக்னக்காரர்களுக்கு செல்வத்தை அள்ளித் தரும் கிரகமாக சூரியன் இருக்கிறார். எனவே ஜாதகத்தில் சூரியனுடன் சந்திரன் கிரகங்கள் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வழக்கறிஞர், தந்தை வழி வருமானம், மருத்துவர், சணல் கயிறு தயாரிப்பு மற்றும் விற்பனை போன்ற தொழில்கள் மூலம் நல்ல வருமானம் உண்டாகும். கடக ராசி மற்றும் லக்னக்காரர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் சூரியன், புதன் கிரகத்தோடு சேர்ந்திருந்தால் அரசு பள்ளியில் கணித ஆசிரியர், அரசு மருத்துவக் கல்லூரியில் அதிகாரி போன்ற பணிகளின் மூலம் வருமானம் உண்டாகும்.

sukran

கடக ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் கிரகத்துடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் அரசாங்க கட்டிட பொறியாளர், அரசு வேளாண்மை துறை, போக்குவரத்து துறை, சுற்றுலாத்துறை நிதி நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம் நல்ல பண வரவுகள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் கிரகத்துடன் சேர்ந்திருந்தால் பத்திரப்பதிவுத்துறை, அரசு சட்டக் கல்லூரி, பேராசிரியர், காவல்துறை, ராணுவம் அரசு கிடங்கு மற்றும் குழந்தைகள் தொடர்பான தொழில்கள், அரசு மருத்துவமனை பணி போன்ற வேலைகளில் மூலம் வருமானம் ஏற்படும்.

- Advertisement -

Sani Bagavan

கடக ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சூரியன் கிரகத்தோடு குருவும் சேர்க்கை பெற்றால் அறநிலையத்துறை அதிகாரி, அரசு கடன் பத்திரம், அரசு சேவைத்துறை, எலும்பு முறிவு மருத்துவர், அரசு சட்ட ஆலோசகர் போன்ற பணிகளில் சிறந்து விளங்க முடியும். அதேபோன்று ஜாதகத்தில் சூரியனுடன், சனி கிரக சேர்க்கை பெற்றால் திருமண வரன் பார்க்கும் தொழில், காப்பீட்டுத் துறை, இரும்பு பொருட்கள் சம்பந்தமான தொழில்கள் போன்றவற்றின் மூலம் சராசரியான வருமானம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
துலாம் லக்னக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் வழிமுறைகள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kadagam varumanam in Tamil. It is also called as Kadaga rasi palan in Tamil or Kadaga lagnam palan in Tamil or Jathaga palangal in Tamil or Kadaga rasi Kadaga lagnam in Tamil.