வெள்ளிக்கிழமை தோறும் இதை செய்து வரும் பெண்களின் முகம் எப்போதும் லட்சுமி கடாட்சத்தோடு தான் இருக்கும். பெண்கள் முகம் பொலிவோடு இருக்க இதை செய்தாலே போதும்!

mahalakshmil

பெண்களின் முகமானது எப்போதுமே மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாகக் தான் இருக்க வேண்டும். அழகு, நிறம் இதையும் தாண்டி, முகப் பொலிவு, வசீகரம், தேஜஸ், என்பதும் இருக்கின்றது. இயற்கையாகவே இது எல்லோருக்கும் அமைந்து விடாது. சில பேருக்கு முகம் எப்போதுமே பொலிவிழந்து வாடியது போல,  போல இருட்டு அடைந்தது போல இருக்கும். இப்படிப்பட்டவர்கள் எவ்வளவு தான் அழகு சாதன பொருட்களை முகத்தில் போட்டுக்கொண்டாலும், அவர்களுக்கு வசீகரத் தன்மை வரவே வராது. அதாவது முகத்தில் பொலிவு இருக்காது. கலை இருக்காது.

mahalakshmi3

சரி, ஆன்மீக ரீதியாக பெண்களின் முகம் எப்போதும் மங்களகரமாக, வசீகர தன்மையுடன் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றால், என்ன செய்வது என்பதைப் பற்றிய ஒரு சின்ன தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்தால் முகத்தில் லட்சுமி கடாட்சம் வருவதோடு, உங்களுடைய வீட்டிலும் ஐஸ்வரியத்திற்கும் எந்த குறையும் வராது.

முடிந்தவரை பெண்கள் வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டுமாவது கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அதுவும் குறிப்பாக, மகாலட்சுமியின் சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு சென்று, மகாலட்சுமிக்கு உங்களது பெயரை சொல்லி அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக வைத்து, அந்த பிரசாதத்தை உங்கள் கைகளாலேயே அந்த கோவிலுக்கு வருகை தரும் பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும். நிறைய பேருக்கு பிரசாதம் செய்து கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 3 பெண்களுக்கு கொடுத்தாலும் மனநிறைவோடு கொடுக்க வேண்டும்.

pongal3

அதிலும் குறிப்பாக கன்னிப் பெண்களுக்கு தானம் கொடுப்பது, மேலும் சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. இதோடு பெண்கள் எப்போதுமே மனநிறைவோடு சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். ஆயிரம் கவலைகள் பிரச்சினைகள் குடும்பத்தில் இருந்தாலும், அதையெல்லாம் எதிர்கொள்ளலாம், என்ற மன வலிமையோடு முகத்தில் எப்போதுமே புன்னகையையும், பூரிப்பையும் வைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் வசிக்கும் வீட்டில் மகாலட்சுமியும் குடியிருப்பாள்.

- Advertisement -

அழகும் தேஜஸும் பெண்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. ஆண்களும் எப்போதும் தங்களது மனதை சந்தோஷமாக வைத்துக் கொண்டு, முகத்தில் சிரிப்பை வைத்துக்கொண்டு நெற்றியில் விபூதி அல்லது சந்தனம் இட்டு கொண்டு பொறாமை குணத்தை தவிர்த்துவிட்டு குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களிடம் அன்போடு இருக்கும் பட்சத்தில், ஆண்களின் முகமும் எப்போதும் பொலிவுடன் இருக்கும்.

mahalashmi3

இன்னும் சுலபமாக சொல்லப்போனால் மகாலட்சுமி ஸ்வரூபமாக, எந்த வீட்டில் பெண் புன்னகையுடன் முகப் பொலிவுடன் இருக்கின்றாலோ, அந்த வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு முகம் தானாகவே வசீகரிக்கும் என்றும் கூட சொல்லலாம். இன்று வெள்ளிக்கிழமை! இன்றைய தினம் முடிந்தால் மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று, பிரசாதத்தை அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு நிவேதனமாக பெண்கள் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால், உங்கள் வீட்டிலேயே மகாலட்சுமிக்கு பிரசாதமாக, சர்க்கரைப் பொங்கலை வைத்து, அந்த பிரசாதத்தை உங்கள் வீட்டின் அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுப்பதிலும் தவறு இல்லை என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த வேர் உங்களிடம் இருந்தால் பணத்திற்கு பஞ்சமே வராது! கையில் தாராளமாக பணம் புழங்கும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.