- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தெரியாமல் கூட இந்தத் திதிகள் வரும் கிழமையில் கடன் வாங்கி விடாதீர்கள்....

எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தெரியாமல் கூட இந்தத் திதிகள் வரும் கிழமையில் கடன் வாங்கி விடாதீர்கள். வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் சிரமப்படுவீர்கள்.

- Advertisement -

இந்த கடன் பிரச்சனை இன்று பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது என்றே சொல்லலாம். இன்று சாதாரண மனிதர்கள் முதல் மிகப் பெரிய மனிதர்கள் வரை அனைவருமே ஏதாவது ஒரு வகையில் கடன் வாங்கி தான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவரவரின் பொருளாதாரத்திற்கு ஏற்றபடி கடன் இருக்கிறதே அன்றி கடனே இல்லாமல் யாரும் இருப்பதில்லை. இந்த கடனானது ஒரு சில திதிகளில் வாங்கும் போது நிச்சயமாக திருப்பி அடைக்கும் வாய்ப்பே வராது என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடம்பர தேவைக்காக பணத்தை செலவு செய்து நம்முடைய கடன் சுமையை அதிகப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. சில சமயங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கடன் வாங்கி விடுவோம். அதிலும் தொழில் நடத்துபவர்கள் எல்லாம் கண்டிப்பாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணத்தை கடனாக கொடுத்து வாங்க செய்ய வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். இப்படி எந்த காரணத்தினால் பணத்தை கடனாக வாங்கினாலும் சரி சில தினங்களில் வரும் திதிகளில் வாங்க கூடாது என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

கடன் வாங்க கொடுக்க கூடாத நாட்கள்
முதலாக தினமுமே வரும் ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களில் கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். அதிலும் குறிப்பாக குளிகை நேரத்தில் கடன் வாங்கவே கூடாது. அதே போல் சனிக் கிழமைகளில் வரும் சனி ஓரைகளில் கடன் வாங்கவும், கொடுக்கவும் கூடாது. இப்படி கடன் வாங்குவதால் கடன் அடையாமல் போவதுடன், கடன் பல மடங்கு பெருகி பல துன்பத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் சொல்லப்படுகிறது.

அதே போல் அமாவாசை திதியிலும் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது என்று சொல்லப்படுகிறது. அமாவாசை திதி என்பது நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடனை தீர்க்கும் நாள். அந்த நாளில் நாம் புதிதாக கடன் வாங்கவோ, கொடுக்கவோ செய்தால் அது நம் குடும்பத்திற்கு நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இது மட்டும் இன்றி வெள்ளி, செவ்வாய் போன்ற தினங்களிலும் கடன் வாங்கும், கொடுக்கவும் கூடாது. வெள்ளி, செவ்வாய் 2 தினமும் முருகர், மகாலட்சுமி தாயார் உகந்த நாள். அதே போல் செவ்வாய், வெள்ளி இந்த இரண்டு தினங்களும் செவ்வாய் சுக்கிரன் இந்த இரண்டு கிரங்களுக்கான தினம். இந்த இரண்டு கிரகங்களுமே பணத்திற்கான முக்கியமான கிரகங்கள். இந்த நாட்களின் கொடுக்கும் பணமும் நமக்கு திரும்ப வராமல் தொடர்ந்து கொண்டே இருப்பதோடு, நாம் யாருக்கேனும் இந்த தினங்களில் பணத்தை கொடுத்தால் அது நமக்கு திரும்ப வராது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சகல பாவங்களும் தீர இந்த 1 பொருளால் விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் போதுமே! தீராத கஷ்டம் எல்லாம் தீரும்.

கடன் வாங்குவதே மிகவும் கஷ்டமான ஒன்று தான். அதையும் இது போன்ற சமயங்களில் வாங்கி மேலும் நம் துன்பத்தை அதிகரித்துக் கொள்ளாமல், இனியும் அவசரத்திற்கு கடன் வாங்கினாலும் இது போன்ற சமயங்களில் மட்டும் வாங்காமல் பார்த்துக் கொண்டு கடன் என்னும் பெரிய சுமையில் இருந்து மீள வழி தேடுவோம்.

சற்று முன்