இன்று கார்த்திகை மாத அம்மாவாசை தினம். மாத இறுதி நாளில் வந்திருக்கிறது. சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. அதாவது 30.11.2024 காலை 11:00 மணி அளவில் அம்மாவாசை திதியானது பிறக்கிறது. ஆகவே அமாவாசை திதி தர்ப்பண வழிபாட்டு முறைகளை நீங்கள் இன்று காலை 11:00 மணிக்கு பிறகு செய்வது சிறப்பான பலனை தரும். இதோடு சேர்த்து நேர்மறை ஆற்றல், முன்னோர்களின் ஆசி, குலதெய்வத்தின் ஆற்றல் நிறைந்து இருக்கக்கூடிய இந்த அமாவாசை திதியில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் பல மடங்கு வெற்றியைத் தரும்.
இந்த நாளில் வைக்கக் கூடிய வேண்டுதல் உடனடியாக பலிக்கும். உங்களுடைய வாழ்வில் இருக்கும் தீராத கடன் சுமை, தீராத பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் இன்றைய தினம் நாம் செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
கார்த்திகை அமாவாசை பரிகாரம்
நமக்கு பிரச்சனைகள் வருவதற்கு முதல் காரணம் நம்முடைய உடம்பை ஒட்டி இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி. நம் உடம்பை சுற்றி இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி. நம்முடைய ஆரா சுத்தப்படுத்தப்பட்டால், நம் வாழ்வில் பிரச்சனைகள் இருக்காது. அந்த வகையில் உங்களை நீங்களே இன்று சுத்தப்படுத்திக் கொள்ள, செய்ய வேண்டிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரம் தான் இது. நம்பிக்கை இருப்பவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
ஒரு அகலமான பிளாஸ்டிக் பக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குளிக்க பயன்படுத்துவது, துணி துவைக்க பயன்படுத்துவது, எதுவாக இருந்தாலும் சரி. அதில் உங்களுடைய கணுக்கால் மூழ்கும் அளவுக்கு வெதுவெதுப்பான நீர் எடுத்துக் கொள்ளுங்கள். அது அப்படியே இருக்கட்டும். 2 உள்ளங்கைகளிலும் கல் உப்பை நிரம்ப எடுத்துக்கொண்டு, அந்த கல்லுப்பை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும்.
உங்கள் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் உங்களை விட்டு விலக வேண்டும் என்று பிராத்தனை வைக்க வேண்டும். உங்களுக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனையை இப்போது ரொம்பவும் உச்சத்தில் இருக்கிறது. அந்த பிரச்சனை நீங்க வேண்டும் என்று குலதெய்வத்தையும் முன்னோர்களையும் நினைத்து பிரார்த்தனை வைத்து கையில் இருக்கும் உப்பை தயாராக எடுத்து வைத்திருக்கும் வெதுவெதுப்பான பக்கெட் நீரில் அப்படியே போட்டு கரைத்து விடுங்கள்.
உங்களுடைய இரண்டு உள்ளங்கால்களையும் எடுத்து அந்த தண்ணீருக்குள் விட வேண்டும். ஒரு நாற்காலி போட்டு காலை கீழே தொங்கவிட்டு, அந்த பக்கெட்டில் இருக்கும் நீரில் உங்களுடைய பாதங்களை 5 நிமிடம் அப்படியே பதிய வையுங்கள். உங்கள் மனதிற்குள் நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் உடம்பை பிடித்த பீடை தரித்திரம் எல்லாம் அந்த பாதத்தின் வழியாக, அந்த உப்பு தண்ணீருக்குள் வெளியேறி செல்வது போல நினைக்க வேண்டும். அதேபோலத்தான் கடன் சுமையும், உங்களை விட்டு வெளியேறுவது போல நினைத்துக் கொள்ளுங்கள். தீராத நோய் இருந்தால் அந்த நோயும் உங்களை விட்டு விலகி விட்டதாக மனதார நினைத்துக் கொள்ளுங்கள்.
கண்களை மூடி குலதெய்வத்தை நினைத்து அமைதியாக ஒரு ஐந்து நிமிடம் அப்படியே அமருங்கள். ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் இருந்து காலை எடுத்து விட்டு குளியல் அறைக்கு சென்று கால்களை ஒரு முறை கழுவிக் கொள்ளுங்கள். முகம் கை கால் கழுவிக்கொண்டு பிறகு பூஜை அறையில் வந்து குலதெய்வத்தையும் முன்னோர்களையும் நினைத்து இன்றோடு என்னுடைய கஷ்டம் தீருவதற்கு ஒரு வழி பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தால், நிச்சயம் உங்களுடைய கஷ்டங்கள் தீரும்.
அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. எதிர்மறை ஆற்றல் என்பது மீண்டும் மீண்டும் நம்முடைய உடம்பில் சேருவது ஆகவே ஒவ்வொரு அமாவாசை திதியிலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்வது சிறப்பு. நம்பிக்கையின் அடிப்படையில் செய்யக்கூடிய தாந்திரீக பரிகாரம் இது. குலதெய்வத்தையும் முன்னோர்களையும் நினைத்து இன்று இதை செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே: நோய்கள் நீங்க தீப வழிபாடு
இன்று காலை 11 மணிக்கு மேல், இன்று இரவு 10 மணிக்கு முன்பு எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து உங்களுக்கு நல்ல காலம் தான். அனைவருக்கும் முன்னோர்களின் ஆசியும் குலதெய்வத்தின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்க பிரார்த்தனை வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.