இந்த வார்த்தையை அடிக்கடி பேசினாலும் கடன் வரும். அடிக்கடி பயன்படுத்தக் கூடாத அந்த வார்த்தை எது?

thinking-cash
- Advertisement -

பொதுவாக நம்முடைய வாயிலிருந்து கெட்ட வார்த்தை வரக்கூடாது. எதிர்மறையான வார்த்தைகள் வரும் போது, எதிர்மறையான எண்ணங்களும் எதிர்மறையான ஆற்றலும் நம்மை சூழ்ந்து கொள்ளும். அதன் பின்பு நமக்கு எந்த நல்லதும் நடக்காது என்ற ஒரு கூற்று உள்ளது. நேர்மறையாக சிந்திக்க வேண்டும், நேர்மறையாக நடந்து கொள்ளவேண்டும், நேர்மறையான வார்த்தைகளையே பேச வேண்டும். இயல்பாகவே நேர்மறை ஆற்றலை உங்களுக்குள் கொண்டு வந்து விட்டால், உங்களுடைய வாழ்க்கையே நல்ல விதமாக சந்தோஷமாக இருக்கும்.

பெரும்பாலும் இப்போது நிறைய பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை கடன் பிரச்சனை. நம்முடைய வாழ்க்கையில் இந்த கடன் பிரச்சனையை உண்டாக்கக்கூடிய எதிர்மறையான வார்த்தை எது? இந்த வார்த்தையை பேசினால் உங்களுக்கு கடன் பிரச்சனை வரும். எதிர்மறை வார்த்தை என்றால் கெட்ட வார்த்தை தான். கெட்ட வார்த்தைகளின் வரிசையில் நிறைய வார்த்தைகள் உள்ளது. சண்டை வரும் போது காது கொடுத்து கேட்க முடியாதபடி, ஒருவர் மற்றவரை திட்டுவது மட்டும்தான் கெட்ட வார்த்தை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

- Advertisement -

ஆனால் அன்றாடம் இயல்பாகப் பேசக்கூடிய சில வார்த்தைகளில் நமக்கு கெட்ட வார்த்தைகளாக மாறிவிடுகின்றது. அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேர் பயன்படுத்தக்கூடிய வார்த்தை, அடிக்கடி பயன்படுத்தக் கூடாத வார்த்தை இது. ‘என்னால் முடியாது! எனக்கு எந்த நல்லதும் நடக்காது! எனக்கு இது கிடைக்காது! இது எனக்கு சரிப்பட்டு வராது! ஆகாது! இயலாது!’ இப்படிப்பட்ட வார்த்தைகள் தாங்க அந்த வார்த்தைகள்.

ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொள்ளும் என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லவா. நல்ல சொல் நமக்கு வெற்றியை கொடுக்கும். கெட்ட சொல் நமக்கு வரக்கூடிய நல்லதை செல்வதை தடுக்கும். அவ்வளவு தான். நம்முடைய மனதுக்கு எது நல்லது எது கெட்டது என்று தெரியாது. நாம் எதை அடிக்கடி நினைத்துக் கொண்டே பேசிக் கொண்டே இருக்கின்றோமோ, அதை செயல்படுத்தி விடும்.

- Advertisement -

சண்டை போட்டு கெட்ட வார்த்தை பேசுவதை கூட மாதத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாள் தான் பேசுவோம். ஆனால் நம்முடைய முன்னேற்றத்தை தடைப்படுத்தக்கூடிய இப்படிப்பட்ட எதிர்மறையான வார்த்தைகளை தினம் தினம் பேசுகின்றோம். இனி உங்களுடைய பேச்சில் சில மாற்றங்களை கொண்டு வந்து பாருங்கள். எல்லாவற்றையும் நேர்மறையாக பேசுங்கள்.

உங்களுக்கு ஒரு சில நாட்களில் நல்லது மட்டுமே நடப்பதை உணர்வீர்கள். செல்வம் தானாக உங்கள் வீடு தேடி வரும். கடன் தானாக மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு உங்கள் வீட்டை விட்டு காலி செய்துவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை முயற்சி செய்து பார்த்து, பின்பற்றி வாருங்கள். நிறைவான வாழ்க்கையை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -