தங்கம் வாங்க முடியவில்லையே என்ற கவலை இனி வேண்டாம். குலதெய்வத்திற்கு இந்த பூஜையை செய்தால் தங்கம் தானாகவே வந்து உங்கள் வீட்டில் தங்கும்.

mahalakshmi-selvam-gold-coins

இன்றைய சூழ்நிலையில் தங்கம் விற்கும் விலையில் எங்கிருந்து தங்கத்தை வாங்குவது? என்ற கேள்வி, இந்த தலைப்பை படித்தவர்களது மனதிலும் கட்டாயம் இன்நேரம் எழுந்திருக்கும். ஆனால், சில சுபகாரியங்களை தங்கம் இல்லாமல் நிகழ்தவே முடியாது. அந்த வரிசையில் முதலில் நிற்பது திருமணம். திருமணத்திற்கு திருமாங்கல்யம் தங்கத்தில் தான் வாங்க வேண்டும். ‘மஞ்சள் கிழங்கிலும் தாலி கட்டலாம்’. உங்களுடைய வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால், அந்தக் குழந்தைக்கு தங்க நகை வாங்கி சேர்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தால், உங்க குல தெய்வத்திடம் இந்த வேண்டுதலை வைத்து, இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். நிச்சயம் அடுத்து வரக்கூடிய சில நாட்களிலேயே உங்கள் வீட்டில் சுவர்ணலட்சுமி நிரந்தரமாக குடி வந்துவிடுவாள் என்பதில் ஒரு துளியும் சந்தேகமில்லை.

kamatchi-amman

நாம் எந்த ஒரு நல்ல காரியத்தை நம் வீட்டில் தொடங்குவதற்கு முன்பாகவும், குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும். இது நம்மில் பல பேருக்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால் சில சமயங்களில் குலதெய்வத்தை சிலபேர் மறப்பதும் இயல்பாகத்தான் உள்ளது. இனி குலதெய்வத்தை மறக்காதீர்கள் என்று, உங்கள் குலதெய்வத்தை நினைவு கூர்ந்து இந்தப் பதிவை படிப்பதற்கு தொடரலாம்.

முதலில் உங்களிடம் இருக்கும் ஒரு குண்டுமணி தங்கம் ஆக இருந்தாலும், அந்த தங்கத்தை குலதெய்வ கோவிலுக்கு எடுத்துச் சென்று, குலதெய்வத்தின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பின்பு அந்த நகையை நீங்கள் அணிந்து கொண்டால் வீட்டில் இருக்கும் தங்கநகை அடமானம் போகாமல் இருக்கும். மேலும் மேலும் தங்கம் வாங்கும் யோகமும் உங்களுக்கு அமையும்.

poojai arai

இதோடு மட்டுமல்லாமல் அமாவாசைக்கு நாலாவது நாள் வரக்கூடிய திரிதியை திதி அன்று, உங்களுடைய வீட்டில் குலதெய்வத்தை மனதார வேண்டி, ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை அரிசியை நிரப்பி, அந்த பச்சரிசிக்குள், உங்கள் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு தங்க நகையை புதைத்து வைத்து, குலதெய்வத்திடம் மேலும் மேலும் தங்கம் சேர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, அன்றைய நாள் முழுவதும் நகையை பச்சரிசிகுள்ளேயே விட்டுவிட வேண்டும்.

- Advertisement -

அடுத்த நாள் காலை அந்த நகையை எடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு அணிவிக்கலாம். பெண் குழந்தைகள் இல்லை என்றால், அந்த வீட்டின் குடும்பத் தலைவி அந்த நகையை அணிந்து கொள்ளலாம். இப்படி ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தால் கூட போதும். உங்களுடைய வீட்டில் தங்கம் தங்க எந்த தடையையும் குலதெய்வம் விட்டுவைக்காது, தங்கத்தை வாரிக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதாவது நம் தகுதிக்கு ஏற்றவாறு பிரார்த்தனையை வைத்துக்கொள்ள வேண்டும். சில சமயம் வீட்டிலிருக்கும் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கும். நம்முடைய சொத்தை விற்றோ, அல்லது வேறு எங்கேயாவது பணத்தைப் புரட்டி திருமணத்திற்கு நகை வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆனால் ஏதோ ஒரு பிரச்சினை, ஏதோ ஒரு தடை அந்த பணத்தை நம் கைக்கு வர விடாமல் தடுக்கும். இப்படிப்பட்ட தேவையற்ற தடைகளை தகர்த்தெறிந்து, அந்தப் பணம் தடையில்லாமல் நம் கைக்கு வந்து, தங்கத்தை வாங்க வைக்கும் சக்தியும் இந்த பரிகாரத்திற்க்கு உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சென்னையில் அரச மரத்தில் சுயம்புவாக தோன்றிய விநாயகர்! இவரை வணங்கினால் 6 வாரத்தில் நினைத்தது நினைத்தபடியே நடக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.