தீராத கடன் தீர இன்று முருகப்பெருமானுக்கு உகந்த இந்த ஐந்து பொருளைகளை மறக்காமல் வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள். கடன் தீர்ந்து பண வரவை அதிகரிக்கும் வழிபாடு.

- Advertisement -

காக்கும் கடவுளான கந்த கடவுளுக்கு பல பெயர்கள் இருந்தாலும் அவருக்கு முதலில் தோன்றிய பெயராக கார்த்திகேயன் என்றே சொல்வார்கள். இதற்கு காரணம் இவர் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதே. அதனால் தான் கிருத்திகை நட்சத்திரமும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இந்த நட்சத்திர நாளில் நாம் விரதம் இருந்து இவரை வழிபடும் போது நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும். கிருத்திகை தினமே இத்தனை விசேஷம் எனும் போது ஆடி மாதத்தில் வரும் இந்த கிருத்திகை இன்னும் பல விசேஷ பலன்களை தரக் கூடியது.

கிருத்திகைகளிலே ஆடி, தை இந்த இரண்டு கிருத்திகை தான் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் கிருத்திகை விரதம் இருப்பவர்கள் ஆடி கிருத்திகையில் தொடங்கி ஆறு மாத காலம் தொடர்ந்து கிருத்திகை விரதத்தை அனுஷ்டித்து தை மாதத்தில் நிறைவு செய்யும் போது என்ன வேண்டுதலுக்காக இந்த விரதத்தை தொடங்குகிறார்களோ அது நிச்சயம் நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கிருத்திகை நாளில் முருகனுக்கு உகந்த இந்த பொருள்களை வாங்கி வைத்து வணங்கும் போது நம்முடைய கடன் தீரும் என்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றியதொரு விளக்கத்தை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர கிருத்திகை விரத வழிபாடு
இந்த வழிபாடு விரதம் இருந்து செய்பவர்கள் செய்யலாம். அப்படி இருக்க முடியாதவர்கள் அசைவத்தை தவிர்த்து விட்டு எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். இவருக்கு செவ்வரளி மலர் மாலை போட்டு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து உங்களால் இயன்ற ஏதேனும் ஒரு நெய்வேத்தியத்தை படைத்து முருகருடைய நாமத்தை ஜெபித்து நாள் முழுவதும் அவரை நினைத்து வழிபாடு செய்தாலே போதும். இத்துடன் இந்த பொருட்களையும் வாங்கி பூஜையறையில் வைக்க வேண்டும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த வழிபாட்டு நாளில் சில பொருட்களை வாங்கும் பொழுது நம்முடைய கஷ்ட நிலை மாறி விடும் என்று சொல்லப்படுகிறது அது மட்டும் இன்றி கடன் தீர்ந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக வீண் விரயங்களை தடுப்பதற்கு துவரையை வாங்க வேண்டும் என்று சொல்வார்கள். முருகனுக்கு உகந்த பொருளும் துவரையே எனவே சிறிதளவது இன்றைய தினத்தில் துவரை வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் செம்பு, செண்பக மலர், இதையும் இன்றைய தினத்தில் வாங்குவது சிறப்பு.

- Advertisement -

அடுத்து முருகருக்கு உகந்த நிறம் சிவப்பு. இந்த நாளில் ஒரு சிறிய சிகப்பு நிறத்திலான துணி வாங்கி முருகர் படத்திற்கு முன் வைத்து வழிபடலாம். அதே போல் இவற்றுடன் சந்தனம் இதிலும் சிறிதளவது இன்றைய நாளில் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை எல்லாம் இந்த நாளில் நீங்கள் வாங்கும் போது உங்களுடைய பணவரவு அதிகரித்து கடன் அடைவதற்கான வாய்ப்பு பெருகும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வேலை இல்லையா? நல்ல வேலை வேண்டுமா? வேலையில் பிரச்சனையா? விநாயகருக்கு இந்த மாலையை சாற்றுங்கள். வேலை சம்பந்தப்பட்ட அனைத்து வேண்டுதல்களையும் அவர் நிறைவேற்றுவார்.

கடன் தீர்ந்து நோய் நொடியின்றி நிம்மதியான வாழ்க்கை வாழ முருகர் வழிபாடு மிகவும் சிறந்தது. அதுவும் இன்றைய சிறப்பு வாய்ந்த தினத்தில் இந்த வழிபாட்டை செய்து வாழ்க்கையில் எல்லா வளமும் பெற கந்தக் கடவுளை வேண்டிக் கொள்வோம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -