அமாவாசை நாளில் உங்கள் வீட்டில் மறக்காமல் இவற்றை செய்திடுங்கள். கண் திருஷ்டி, கடன் தொல்லை காணாமல் போய்விடும்.

amavasai
- Advertisement -

மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரனாகிய சூரியனும் ஒரே நேர்கோட்டில் இணையும் காலமே அமாவாசை எனப்படும். இந்நாளில் இயற்கைச் சூழலான வெப்பம் மற்றும் காற்று ஏற்றத்தாழ்வுடனே இருக்கும். இன்று நமது வீட்டின் வாசலில் எள், தண்ணீருக்காக நமது முன்னோர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு படையலிட்டு அவர்களின் ஆசிகளை பெறுவதற்கு அமாவாசை தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதுபோல கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை, இவற்றிர்காகவும் இன்று சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். அவ்வாறு அமாவாசை தினத்தன்று செய்யக்கூடிய பரிகாரங்களை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kadan

இல்லாதவன் இருக்கிறவனை பார்த்து பெருமூச்சு விடுவதும், ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமை படுவதும் கண்திருஷ்டி எனப்படும். கிராமப்புறங்களில் இதனை கண்ணேறு என்பார்கள். இன்றைய தினத்தன்று தவறாமல் சில பரிகாரங்களை செய்வது நமக்கும் நமது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.

- Advertisement -

முதலில் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொண்டு அதனை இரண்டாக அறிந்து, அவற்றின்மேல் குங்குமத்தை பூசிவிட்டு வீட்டின் நிலை வாசலுக்கு வெளிப்புறம் இடது புறம் ஒன்றும் வலது புறம் ஒன்றுமாக வைத்துவிட வேண்டும். இதனால் எவ்வித தீய சக்திகளும் உள்ளே நுழையாமல் நமது வீடு பாதுகாப்புடன் இருக்கும்.

lemon

வீட்டில் கண் திருஷ்டியினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விடுபட முச்சந்தியில் இருந்து கொஞ்சம் மண் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒன்பது காய்ந்தமிளகாய், சிறிதளவு கல்லுப்பு இவை மூன்றையும் கையில் எடுத்துக் கொண்டு வீட்டில் உள்ள அனைவரையும் கிழக்கு நோக்கி நிற்க வைத்து, இடது பக்கம் மூன்றுமுறை அதேபோல் வலது புறம் மூன்றுமுறை சுற்றிவிட்டு கையில் இருக்கும் பொருட்களை விறகடுப்பை பற்ற வைத்து அதில் போட்டு விட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு செய்ய முடியவில்லை என்றாலும் சிறிது அளவு உப்பினை மட்டுமாவது கையில் எடுத்துக்கொண்டு இதே முறையில் வீட்டில் உள்ள அனைவரையும் நிற்கவைத்து சுற்றி போட்டு அந்த உப்பினை சிறிதளவு தண்ணீரில் போட்டு விட வேண்டும்.

uppu

மஞ்சள் கலந்த நீரில் தேங்காயை கழுவிவிட்டு அதன்மீது கற்பூரம் வைத்து ஏற்றி, வீட்டை மூன்று முறை சுற்றி விட்டு அதன் பின்னர் தேங்காயை வாசலில் உடைத்து விடவேண்டும். இவ்வாறு செய்வதினால் கண் திருஷ்டிகள் அனைத்தும் தேங்காய் சிதறுவது போல சிதறிவிடும்.

- Advertisement -

மாதந்தோறும் அமாவாசை அன்று பூசணிக்காய் ஒன்றை வாங்கி வந்து அதனை உங்கள் வீட்டின் வாசலில் மற்றவர்கள் கண் படுமாறு வைத்து விட வேண்டும். மறு அமாவாசை வரும்பொழுது அந்த பூசணிக்காயை வீட்டை சுற்றி உடைத்துவிட்டு புதிய பூசணிக்காய் வாங்கி வைத்துவிட வேண்டும். இந்த பூசணிக்காய் உங்கள் வீட்டின் மீது மற்றவரின் தீய பார்வையினால் கெடுதல் உண்டாகாமல் கவசம் போன்று பாதுகாக்கும்.

thirusti poosani

அதேபோல் ஒரு கருப்பு கம்பளி கயிறில் சிறியதுண்டு படிகாரம், ஒரு எலுமிச்சை பழம், 5 பச்சைமிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து கட்டி நிலை வாசலின் வெளிப்புறம் தொங்கவிட வேண்டும். இதனையும் அமாவாசை தோறும் புதியதாக மாற்றி விட வேண்டும். இயல்பாகவே படிகாரத்திற்கு எதிர்மறை சக்திகளை அழித்து நேர்மறை ஆற்றலை தரக்கூடிய வல்லமை இருக்கிறது.

padikaram1

இவ்வாறான எளிய பரிகாரங்களை இன்றைய நாளில் தவறாமல் செய்து உங்களுக்கு இருக்கும் கண்திருஷ்டிகள் அகற்றி, கடன் பிரச்சனையிலிருந்து விடுபட மனதார இறைவனை வேண்டி இப்பதிவினை நிறைவு செய்து கொள்கின்றோம்.

- Advertisement -