கடன் அடைய உப்பு தீபம்

amavasai uppu dheepam
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் அமாவாசை பௌர்ணமி இந்த இரண்டு திதிகளும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. அமாவாசை தினத்தில் பித்ருகளை வழிபடுவதோடு அம்மன் வழிபாடு செய்வது பரிகாரங்கள் செய்வது போன்றவை எல்லாம் சிறந்த பலனை தரும். அதே போல பௌர்ணமி அன்றும் இந்த அம்மன் வழிபாடு செய்யலாம். குலதெய்வ வழிபாடு செய்வதற்கு இன்றைய தினம் மிகவும் உகந்தது.

அந்த வகையில் இன்று அமாவாசை திங்கட்கிழமை அன்று வந்திருக்கிறது. இதை சோமவார அமாவாசை என்று சொல்வார்கள். திங்கள் கிழமையில் அமாவாசை வருவது மிகவும் சிறந்த பலனை தரும் என்றும் சொல்லப்படுகிறது. இன்றைய தினத்தில் நம்முடைய கடன் அடைய இந்த தீப வழிபாட்டு முறையை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் அது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் அடைய அமாவாசை உப்பு தீபம்

இந்த தீப பரிகாரத்தை இன்றைய நாள் முழுவதிலும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரம் உப்பு தீபம் ஏற்றுவது தான். உப்பு தீபம் ஏற்றுவது பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும் தெரியாதவர்கள் முதலில் உப்பு தீபம் எப்படி ஏற்றுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் ஒரு அகலமான அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கிற்கு மஞ்சள் தடவி குங்குமப்பொட்டு வைத்து விடுங்கள். அதே போல் இரண்டு சிறிய அகலை எடுத்து அதற்கும் மஞ்சள் தடவி குங்குமப் பொட்டு வைத்து விடுங்கள். இப்போது முதலில் எடுத்து பெரிய அகல் விளக்கு முழுவதுமாக உப்பு நிரப்ப வேண்டும்.

- Advertisement -

அதற்கு மேல் ஒரு சிறிய அகலை வையுங்கள் அதற்கு மேல் மற்றொரு அகலை வைத்து பஞ்சத்தை இரண்டாக திரித்து ஒரே திரியாக போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். உப்பின் மேல் இரண்டு அகல் வைப்பதற்கு காரணம் ஒரு அகல் மட்டும் வைத்தால் அதிலிருந்து என்னை உப்பில் இறங்கி சீக்கிரம் உப்பு கரைந்து விடும். இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து எரிய வேண்டும்.

இந்த விளக்கை சுற்றி பூக்கள் வைத்து அலங்காரம் செய்து அதன் பிறகு மகாலட்சுமி தாயார்க்கு முன் வைத்து ஏற்ற வேண்டும். ஏனெனில் உப்பிற்கு வீட்டின் எதிர்மறை ஆற்றலை எடுத்து கொண்டு நேர்மறை ஆற்றலை தரக் கூடிய சக்தி உண்டு. அது மட்டும் இன்றி பண ஈர்ப்பை அதிகரித்து கொடுக்கும். இவை அனைத்திலும் விட மகாலட்சுமி தாயார் உப்பில் வாசம் செய்வதாகவும் ஐதீகம் உண்டு.

- Advertisement -

இந்த தீபம் இன்று நாள் முழுவதும் எரிய வேண்டும். அதாவது இன்றைய நாளில் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றலாம். மாலை 6 மணிக்கு கூட இந்த தீபத்தை ஏற்றலாம். ஆனால் இது மறுநாள் ஆறு மணி வரை அணையாமல் எரிய வேண்டும். இப்படி அமாவாசை தினத்தில் முழுவதுமாக இந்த தீபம் எரியும் பொழுது கடன் முழுவதுமாக நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

அப்படி நாள் முழுவதும் ஏற்ற முடியவில்லை என்பவர்கள் இந்த தீபத்தை 48 நாட்கள் தொடர்ந்து ஏற்றலாம். இன்று தொடங்கி இந்த தீபத்தை 48 நாட்களும் தொடர்ந்து ஏற்ற வேண்டும். 48 நாட்கள் ஏற்றுபவர்கள் முழு நேரம் இந்த தீபத்தை ஏற்ற வேண்டாம். சிறிது நேரம் பூஜை அறையில் இந்த தீபம் எரிந்தாலே போதும். அதன் பிறகு குளிர விட்டு விடலாம்.

இந்த தீபத்தை 48 நாட்களும் தொடர்ந்து ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.பெண்கள் ஏற்ற முடியாத சமயங்களில் வீட்டில் உள்ளவர்களை கொண்டு இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யலாம். இப்படி செய்வதன் மூலமும் தாயாரின் அனுகிரகத்தோடு செல்வ வளம் அதிகரித்து கடன் நீங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: சிவபெருமானின் அருள் ஆசியை வீட்டிலிருந்தே பெற வழிபாடு

அது மட்டும் இன்றி வீட்டிற்கு நல்ல நேர்மறை ஆற்றல் அதிகரித்து நல்ல பல மங்களகரமான விஷயங்கள் தொடர்ந்து நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த தீபத்தை ஏற்றி பலன் அடையுங்கள்.

- Advertisement -