கடன் வாங்காத மனிதர்களையோ, கடன் இல்லாத மனிதர்களையோ நம்மால் பார்க்கவே முடியாது. அது எப்படி கடன் வாங்காத மனிதர்களை பார்க்க முடியாது எத்தனையோ பேர் கடன் இல்லாமல் இருக்க தானே செய்கிறார்கள் என்று நினைக்கலாம். கடன் என்பது நம்முடைய வாழும் காலத்தில் வாங்கும் பணம், நகை, நிலம் தொடர்பான கடன் மட்டும் கிடையாது.
நம்முடைய பிறவி கடன், கர்மா என்ற ஒன்று உள்ளது. அதுவும் நம்முடைய கடன் என்ற வகையில் தான் சேரும். பலரும் இன்றைய காலக்கட்டத்தில் கடனால் அவதிப்படுவதற்கு இந்த கர்மாவே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஒருவரின் ஊழ்வினையை தீர்க்கக் கூடிய காலக்கட்டத்தில் இது போன்ற கடன் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
இப்படி கடனால் சிக்கித் தவிர்க்க கூடியவர்கள் செய்யக் கூடிய எளிமையான ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
கடன் தீர பைரவருக்கு ஏற்ற வேண்டிய தீபம்
கடன் தீர நாம் எந்த பரிகாரங்களையும் வழிபாடுகளையும் செய்வதற்கு முன்பாக கடன் தீருவதற்கான வழிமுறைகளை நாம் கட்டாயமாக மேற் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை செய்யாமல் இந்த பரிகாரங்கள் மட்டும் எந்த பலனையும் தராது என்பதையும் கருத்தில் கொண்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
இந்த பரிகாரம் செய்வதற்கு திங்கட்கிழமை இரவு நீங்கள் உறங்குவதற்கு முன்பாக ஒரு சிகப்பு நிற துணியில் 27 மிளகாய் மூட்டையாக கட்டி உங்கள் தலையணை அடியில் வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் யார் பேரில் அதிக அளவு கடன் இருக்கிறதோ அவர்கள் தான் இதை செய்ய வேண்டும்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு மிளகு மூட்டை, அகல், எண்ணெய், திரி என அனைத்தையும் கொண்டு செல்லுங்கள் சிவாலயத்தில் உள்ள பைரவருக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி இந்த மிளகு முடிச்சை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
அப்போது நீங்கள் யாருக்கு கடன் தர வேண்டுமோ அவர்கள் நினைத்து அவர்களுடைய கடன் விரைவில் அடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு பைரவரை வர வேண்டும். கடைசியாக சிவபெருமானையும் வலம் வந்து வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
இது போல 9 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து இதை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை முதல் முதலில் துவங்குவது தேய்பிறை அஷ்டமி நாளில் செய்தால் இன்னும் சிறந்த பலனை பெறலாம். நம்முடைய கர்மாக்கள், கடன்கள் போன்றவவை தேய தேய்பிறை அஷ்டமி வழிபாடு மிகவும் சிறந்தது.
இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்க துளசி வழிபாடு
இந்த வழிபாடு செய்வதோடு கடன் அடைவதற்கான உங்கள் முயற்சியும் மேற்கொள்ளுங்கள் நிச்சயம் பலன் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாடு செய்யுங்கள்.