மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்க துளசி வழிபாடு

mahalakshmi valamburi sangu
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் காலை மாலை விளக்கேற்றுவது முதல் ஒவ்வொரு பூஜை, புனஸ்காரங்களையும் முறையாகவும் சிரத்தையாகவும் செய்வது தாயாரின் கடைக்கண் பார்வை கிடைப்பதற்கு தான். மனிதர்கள் மட்டுமல்ல தேவர்கள் முதற் கொண்டு அனைவருமே தாயாரின் கடைக்கண் பார்வைக்காக காத்திருப்பார்கள் என்பது ஐதீகம். ஏனெனில் ஒருவர் வளமுடனும் செல்வ செழிப்புடனும் வாழ வேண்டும் எனில் தாயாரின் அனுகிரகம் நிச்சயமாக தேவை.

அந்த அனுகிரகத்தை பெறுவது அத்தனை எளிதான காரியம் கிடையாது. அதற்கு நாம் ஒவ்வொரு காரியத்தையும் கவனமாக கையாண்டு தாயாரின் அனுகிரகத்தை பெற வேண்டும். அந்த வகையில் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தாயாரின் அனுகிரகத்தை பெறக் கூடிய ஒரு எளிய வழிபாட்டு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாரின் அனுகிரகத்தை பெற சங்கு வழிபாடு

இந்த வழிபாடு செய்வதற்கு நம் வீட்டில் சங்கு மற்றும் துளசி செடி வைத்திருக்க வேண்டும். அது இருந்தால் தான் இந்த வழிபாட்டை செய்ய முடியும். இதற்கு வலம்புரி சங்கு இடம்புரி சங்கு என எதை வேண்டுமானாலும் நீங்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சங்கானது மகாலட்சுமி தாயார் பெருமாள் இருவருக்கும் உகந்த பொருளாக பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்றி இது ஐஸ்வர்யத்தை அளிக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது.

ஆகையால் ஒவ்வொரு வீட்டிலும் இந்த சங்கை வைத்து வழிபாடு செய்வதை நம் வீட்டில் செல்வ நிலையை உயர்த்த நாம் செய்யும் வழிபாடாகும். அதே போல் இந்த சங்கை வாங்கி வைத்தால் மட்டும் போதாது. அதை முறையாக நாம் கையாள வேண்டும். சங்கின் முனையானது எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு தான் இருக்க வேண்டும். அதே போல் சங்கில் தண்ணீரை ஊற்றும் பகுதி வானத்தை நோக்கி தான் இருக்க வேண்டும். அது தலைகீழாக இருக்கக் கூடாது.

- Advertisement -

சங்கு தரையில் வைக்காமல் ஒரு தட்டோ அல்லது அதற்குரிய ஸ்டாண்டை வாங்கி வைத்தது தான் வைக்க வேண்டும். சங்கில் எப்போதும் தண்ணீர், அரிசி போன்ற ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். வெறும் சண்டை வைத்திருக்கக் கூடாது. இப்போது இந்த சங்கு வழிப்பாட்டை பார்க்கலாம். இந்த பூஜையை எந்த கிழமையில் வேண்டுமானாலும் தொடங்கலாம். இதை தூங்குவதற்கு முதல் நாள் பூஜை அறையில் இருக்கும் சங்கில் தண்ணீரை ஊற்றி வைத்து விடுங்கள்.

மறுநாள் காலையில் உங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடிக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். அதன் பிறகு சங்கில் ஊற்றி வைத்திருக்கும் தண்ணீரை கொண்டு துளசிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வளவு தான் வழிபாடு. நீங்கள் பூஜை அறையில் தண்ணீர் ஊற்றி வைக்கும் போது ஒரு தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு ஊற்றுங்கள்.

இதையும் படிக்கலாமே: தங்கம் சேர குரு பகவான் வழிபாடு

அதே போல் துளசி மாடத்திற்கு ஊற்றும் போதும் அங்கும் ஒரு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்த பிறகு ஊற்றுங்கள். இப்படி 48 நாட்கள் எவரொருவர் தொடர்ந்து செய்து வருகிறார்களோ அவர்கள் இல்லத்தை தேடி மகாலட்சுமி தாயார் வந்து அருள் புரிவார் என்று சொல்லப்படுகிறது. தாயாரின் அனுகிரகத்தை பெற்று தரக் கூடிய எளிய இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -