கடன் தீர கார்த்திகை சோமவாரத்தில் செய்ய வேண்டிய வழிபாடு

sivan1
- Advertisement -

கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கார்த்திகை சோமவாரம்தான். அதாவது கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமையை தான் கார்த்திகை சோமவாரம் நாள் என்று சொல்லுவார்கள். ஆனால் கார்த்திகை மாதம் என்றால் ஐயப்பன், முருகன், பெருமாள், சிவன், என்று இப்படி பல தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளும் கூட.

ஆமாங்க, கார்த்திகை சோமவாரம் என்றால், சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் ஐயப்ப பக்தர்கள் இந்த மாதத்தில் மாலை போடுவார்கள். முருகனுக்கு கார்த்திகை மாத கிருத்திகை சிறப்பு. கார்த்திகை மாதத்தில் வரும் துவாதிசி திதியில் விஷ்ணு பகவான் துளசி தேவியை மனம் முடித்ததாக சாஸ்திரங்கள் சொல்லுகிறது.

- Advertisement -

இப்படி நிறைய ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் இந்த கார்த்திகை மாதத்தில் பின்பற்றப்படுகிறது. ஆகவே இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வழிபாட்டு முறைகளை யாரும் தவற விடாதிங்க. சரி இப்போது கார்த்திகை மாதத்தில் கடன் தீர நாம் செய்ய வேண்டிய சிவ வழிபாடு என்ன என்பதை மட்டும் இந்த ஆன்மீகம் பதிவில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

கடன் தீர கார்த்திகை மாத சிவன் வழிபாடு

இந்த கார்த்திகை மாதத்தில் 5 திங்கட்கிழமைகள் வருகின்றது. இந்த ஐந்து திங்கள்கிழமைகளிலும் விரதம் இருந்து அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்வது கோடி புண்ணியத்தை தரும். வீட்டில் இருக்கும் கடன் பிரச்சனையை தீர்க்க, கணவன் மனைவி சேர்ந்து சந்தோஷத்துடன் வாழ, நோய்கள் பிணிகள் தீர, இந்த கார்த்திகை சோமவார சிவன் வழிபாடு உங்களுக்கு கை மேல் பலனை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒவ்வொரு கார்த்திகை மாதம் வரக்கூடிய திங்கட்கிழமைகளிலும் சிவன் கோவிலில் சிறப்பான அபிஷேக முறைகளும் பூஜைகளும் நடக்கும். அதில் நீங்கள் கலந்து கொள்ளுங்கள். இந்த பூஜையின் போது வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், நெல்லிக்கனி, ஒரு பூ, இதை தாம்பூலமாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

5 தாம்பூல செட், அல்லது 11 அல்லது 21 உங்களுடைய கணக்கு தான். எத்தனை பேருக்கு இதை வாங்க முடியுமோ, அந்த எண்ணிக்கையில் வாங்கி ஒரு தாம்பல தட்டில் அழகாக அடுக்கி வைத்து சிவன் பாதங்களில் வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளவும். எனக்கு இருக்கும் பணக்கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும். கடன் சுமை குறைய வேண்டும்.

- Advertisement -

செல்வ செழிப்பு கொழிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து நீங்கள் வாங்கி வந்த இந்த தாம்பூலத்தை அப்படியே நெல்லிக்காயோடு சேர்த்து சிவன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு உங்கள் கையால் தானம் கொடுக்க வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய இந்த நெல்லிக்காய் தானம் உங்களுடைய பண கஷ்டத்தை எல்லாம் தீர்த்துவிடும்.

கார்த்திகை சோமவாரம் ஐந்து வாரங்கள் இருக்கிறது அல்லவா. அந்த ஐந்து திங்கட்கிழமைகளில் உங்களால் எந்த திங்கட்கிழமை இந்த பரிகாரத்தை செய்ய முடியுமோ செய்யுங்க. அல்லது ஐந்து திங்கள் கிழமையும் என்னால் இந்த வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள முடியும் என்பவர்கள் மேற்கொள்ளலாம் தவறு கிடையாது.

வீட்டில் இருக்கும் பெண்கள் கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் வீட்டை சுத்தபத்தமாக துடைத்துவிட்டு பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, விளக்கு ஏற்றி ‘ஓம் நமசிவாய’ சொல்லி குடும்பம் சிறப்பாக இருக்க வழிபாடு செய்தாலே உங்கள் குடும்ப சுபிட்சம் பெறும், கணவன் மனைவி ஒற்றுமை பல பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும் கோஷ்டாஷ்டமி நாள் இன்று.

சாப்பிடாமல் விரதம் எடுக்க முடியும் என்பவர்கள் இந்த கார்த்திகை சோமவாரத்தில் நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து, அந்த நாள் இறுதியில் பால் பழம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வது என்பது அவரவர் ஆரோக்கியத்தை பொறுத்தது பாத்துக்கோங்க. இந்த கார்த்திகை சோமவார வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -