கடன் தீர பைரவர் தீப வழிபாடு

bhairavar dheepam
- Advertisement -

இந்த பைரவர் ஆனவர் அனைத்து சிவாலயத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தில் அமைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார் காரணம் இவர் சிவனின் மறு உருவமாகவே கருதப்படுகிறார் இவர் சிவனின் மெய்காப்பலானாகவும் இருக்கிறார். ஆகையால் தான் அனைத்து சிவாலயத்திலும் நிச்சயம் பைரவர் என சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் இருக்கும்.

அதுமட்டுமின்றி நவகிரகங்களில் பாதிப்பிலிருந்து விடுபடவும் பைரவ வழிபாடு துணை புரியும். குறிப்பாக சனி தோஷத்திலிருந்து விடுபட பைரவ வழிபாடு மிகவும் நல்லது.அத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவரை நம்முடைய கடன் பிரச்சனை தீர எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம்.அது எந்த நாளில் செய்ய வேண்டும் என்பதை பற்றி எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.

- Advertisement -

கடன் தீர பைரவ வழிபாடு

பொதுவாக பைரவ வழிபாடு எனும் போது அதை அஷ்டமி திதிகளில் தான் செய்வோம். நம்முடைய துன்பங்கள் தீர தேய்பிறை அஷ்டமியிலும் வாழ்க்கையில் வளம் சேர வளர்பிறை அஷ்டமியிலும் வைர வரை வழிபாடு செய்வது நல்லது ஆனால் கடன் தீர செவ்வாய்க்கிழமையில் பைரவரை வணங்குவது மிகவும் நல்ல பலனை தருவதாக இருக்கும்.

அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் இவரை வழிபடுவது மிகவும் சிறப்பு. செவ்வாய்க்கிழமை என்றாலே துர்க்கை, முருகர் அனைவருக்கும் உகந்த தினம். அத்துடன் சேர்த்து பைரவரையும் அன்றைய தினம் வழிபாடு செய்யும் போது நம்முடைய தீர்க்க முடியாத கடன் பிரச்சனை தீரும் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்று பார்க்கலாம்.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டை ஆலயத்தில் சென்று தான் செய்ய வேண்டும். அதுவும் ராகுகால நேரத்தில் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். ஆலயத்திற்கு செல்லும் முன்பாக வீட்டில் இருந்து 11 அகல் விளக்கை சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டிட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நெய் தீபம் ஏற்றினால் சிறப்பு, முடியாதவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். சிகப்பு நிற காட்டன் துணியை சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு துணியிலும் ஒன்பது மிளகு வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். மொத்தம் 11 மிளகு மூட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் பைரவருக்கு நெய்வேத்தியமாக புளி சாதம், தயிர் சாதம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பைரவருக்கு சாற்ற செவ்வரளி பூக்களையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஆலயத்திற்கு சென்று பைரவருக்கு முன்பாக 9 அகல் விளக்கை வைத்து அதற்கு செவ்வரளி பூக்களை வைத்து விடுங்கள். அதன் பிறகு விளக்கில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி மிளகு மூட்டையை வைத்து தீபம் ஏற்றி விடுங்கள். இப்போது தீபத்தின் முன் அமர்ந்து உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று பைரவர் பிராத்தனை செய்து கொண்டு ஆலயத்தை சுற்றி வந்து வேண்டுதலை முடித்துக் கொள்ளுங்கள்.

இந்த நெய்வேத்தியத்தை ஆலயத்தில் வருபவருக்கு தானமாக கொடுங்கள். அதன் பிறகு ஆலயத்தில் இருந்து வெளியே வந்த பிறகு நாய்களுக்கு கட்டாயமாக பிஸ்கட் வாங்கி கொடுக்க வேண்டும். நாய்கள் பைரவருடைய வாகனமாக கருதப்படுகிறது. எனவே இதை செய்வது மிகவும் முக்கியம்.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லை நீங்க மந்திரம்

உங்களால் ராகுகால நேரத்தில் இந்த தீபத்தை ஏற்ற முடியவில்லை என்றால் மாலை 6 மணிக்கு இரவு 8 மணிக்குள்ளாக ஏற்று விடுங்கள்.இந்த முறையில் பைரவரை 21 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வரும் பொழுது உங்கள் தீராத கடன் தொல்லை நிச்சயமாக தீரும்.

- Advertisement -