- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு

கடன் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு

- Advertisement -

ஒருவருக்கு ஏற்படக்கூடிய கடன் பிரச்சினையாக இருந்தாலும் உடல் உபாதையாக இருந்தாலும் அது அவர்களின் முன் ஜென்ம கர்ம வினைகளை பொறுத்தே ஏற்படுகிறது என்று ஜாதக ரீதியாக கூறப்படுகிறது. பொதுவாக நவகிரகங்களால் தான் இந்த கடன் பிரச்சினை என்பது உண்டாகும். நவகிரகங்கள் நம்முடைய கர்ம வினைகளை பொறுத்துதான் பலன்களை தரும் என்பதால் கடன் தொடர்பான பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அவர்களுடைய கர்ம வினையை தீர்க்க வேண்டும். அப்பொழுதுதான் கடன் பிரச்சினையும் தீரும். அந்த வகையில் கர்ம வினைகளையும் கடன் பிரச்சனையையும் தீர்ப்பதற்கு குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம் குலத்தையே காக்கக்கூடிய தெய்வத்தை நாம் கண்டிப்பான முறையில் வழிபட வேண்டும். அப்படி வழிபட்டால்தான் நாம் செய்யக்கூடிய செயலில் நமக்கு வெற்றிகள் உண்டாகும், தடைகள் விலகும், மேலும் குலதெய்வத்தின் அருளோடு முன்னோர்களின் அருளையும் மற்ற பிற தெய்வங்களின் அருளையும் நம்மால் பெற முடியும். அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். குலதெய்வத்தை வழிபடுவதால் நம்முடைய கர்ம வினைகள் தீருமாம், கர்ம வினைகள் தீந்தால் கடன் பிரச்சனையும் தீரும் அல்லவா? அப்படிப்பட்ட கர்ம வினையை தீர்ப்பதற்குரிய ஒரு வழிபாட்டை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த குலதெய்வ வழிபாட்டை பௌர்ணமி நாளில் தான் செய்ய வேண்டும். பௌர்ணமி நாளன்று குலதெய்வ ஆலயத்திற்கு சென்று உங்களுடைய குலதெய்வத்திற்கு பாரம்பரிய முறைப்படி எப்படி பூஜை செய்ய வேண்டுமோ அப்படி பூஜை செய்ய வேண்டும். ஒரு சிலருக்கு குலதெய்வத்திற்கு அசைவ படையல் போடும் வழக்கம் இருக்கும். ஒரு சில குலதெய்வத்திற்கு சைவப் படையல் போடும் வழக்கம் இருக்கும். இன்னும் சில குல தெய்வங்களுக்கு சுருட்டு போன்றவற்றை சமர்ப்பணம் செய்ய வேண்டும். இன்னும் சில பெண் தெய்வங்களுக்கு அபிஷேகத்திற்கான பொருட்களையும் புடவையையும் வாங்கி சாற்ற வேண்டும். சில குலதெய்வத்திற்கு பொங்கல் வைக்கும் பழக்கம் இருக்கும். இப்படி ஒவ்வொரு குலதெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான வழக்கம் இருக்கும். தங்களுடைய குல தெய்வத்திற்கு எது வழக்கமோ அந்த வழக்கப்படி பூஜை செய்ய வேண்டும்.

பூஜை செய்து முடித்த பிறகு பச்சரிசி மாவினால் தயார் செய்த மாவிளக்கை குலதெய்வத்திற்கு முன்பாக ஏற்ற வேண்டும். 12 எண்ணிக்கையில் பச்சரிசி மாவால் செய்யப்பட்ட மாவிளக்கை குலதெய்வத்திற்கு முன்பாக வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். பிறகு நேராக குலதெய்வ சன்னதிக்கு சென்று தங்களின் பெயரிலும் தங்கள் குடும்பத்தின் பெயரிலும் அர்ச்சனை செய்து கர்ம வினைகளும் கடன் பிரச்சினையும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை பௌர்ணமி நாள் அன்று பகல் 11 மணிக்குள் செய்துவிட வேண்டும். யார் ஒருவர் பௌர்ணமி நாளில் 12 தீபங்களை ஏற்றி வைத்து 11 மணிக்குள் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய கர்ம வினைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் அதன் மூலம் கடன் பிரச்சனையும் குறையும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க ஏற்ற வேண்டிய தீபம்

சக்தி வாய்ந்த குலதெய்வ வழிபாட்டை அனுதினமும் மேற்கொள்ள வேண்டும். அதுவும் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கடன் பிரச்சனையும் கர்ம வினையும் குறைய ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்