48 நாட்கள் தொடர்ந்து இந்த எலுமிச்சம்பழத்தை உங்கள் தலையைச் சுற்றிப் போடுங்கள். 48 வது நாள் உங்களுடைய அத்தனை கடனும் காணாமல் போவது உறுதி.

kadan

தீராத கடனை தீர்ப்பதற்கு தாந்திரீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நமக்கு பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் சில பரிகாரங்கள், சிலருக்கு பலன் தராது. சில பரிகாரங்கள் சில பேருக்கு சீக்கிரமே கைமேல் பலனை கொடுத்துவிடும். அது, அவரவர் பரிகாரம் செய்யும் நம்பிக்கையைப் பொறுத்தது. மன உறுதியை பொறுத்தது. கட்டாயம் நடக்கும், கட்டாயம் முடியும் என்ற நம்பிக்கையோடு செய்யும் பரிகாரங்கள் பலனளிக்காமல் போனது கிடையாது. எந்த பரிகாரத்தை செய்தாலும் நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் பலன் உண்டு. அந்த வரிசையில்  எல்லோருக்கும் கைமேல் பலனை தரக்கூடிய ஒரு வழிபாட்டு முறை யோடு சேர்ந்த, பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம், இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பரிகாரத்திற்கு கட்டாயமாக மிருகத்தின் தலையும், மனித ரூபத்தில் உடலும் சேர்ந்து இருக்கும் ஒரு தெய்வத்தை மனதார நினைத்து செய்ய வேண்டும். நரசிம்மர், வாராஹி அம்மன், பிரத்தியங்கிரா தேவி, இப்படி உக்கிரமாக இருக்கக்கூடிய தெய்வங்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். சிலர் லக்ஷ்மி நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் வைத்துள்ளார்கள். சிலபேர் வாராஹி அம்மனை கூட வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்துள்ளார்கள்.

உங்களுடைய வீட்டில் இந்த தெய்வங்களின் திருவுருவப்படம் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அந்த தீபச்சுடரில், உக்கிரமான தெய்வங்களை ஆவாகனம் செய்து, இந்த பரிகாரத்தை செய்யலாம். இரவு தூங்க செல்வதற்கு முன்பு பூஜை அறைக்குச் செல்லுங்கள். ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, ஒரு எலுமிச்சம் பழத்தை உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும். மனதார உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனமுருகி 5 நிமிடங்கள் வரை வேண்டுதல் வையுங்கள். வேண்டுதல் வைக்கும் போது உங்கள் வலது உள்ளங்கைகளில் எலுமிச்சம்பழம் கட்டாயம் இருக்க வேண்டும். (தினந்தோறும் கடைக்கு சென்று புதியதாக எலுமிச்சம் பழம் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு 5 லிருந்து 6 ஆறு எலுமிச்சம் பழங்களை நீங்கள் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.தினமும் ஒவ்வொன்றாக எடுத்து பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.)

lemon

வேண்டுதல் முடிந்த பின்பு கையில் இருக்கும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் லட்சுமி நரசிம்மர் படம் அல்லது வரஹி அம்மனின் படம் இருந்தால் அந்த படத்தின் காலடியில் அந்த எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் பூஜை மாடத்திலேயே இந்த எலுமிச்சம் பழத்தை வைத்து விடுங்கள்.

மறுநாள் காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று, தீபமேற்றி வைத்து விட்டு குலதெய்வத்தை மனதார நினைத்து கொண்டு, பூஜை அறையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை எடுத்து உங்களது தலையை மூன்று முறை சுற்றி அந்த பழத்தை கால் படாத இடங்களில் போட்டுவிடுங்கள். எலுமிச்சம்பழத்தை தலையை சுற்றும் போது உங்கள் கடன் உங்களை விட்டுப் போக வேண்டும் என்று மனதார நினைக்க வேண்டும். உங்களால் வெளியில் கொண்டுபோய் இந்த பழத்தை போடக் கூடிய சூழ்நிலை இல்லை என்றால், குப்பைத் தொட்டியில் ஒரு பேப்பரில் மடித்து தாராளமாக போட்டு விடலாம்.

varahi-amman

48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும், எப்படிப்பட்ட பண கஷ்டமாக இருந்தாலும், அதை தீர்த்து வைப்பதற்கு நிச்சயமாக அந்த ஆண்டவன் ஏதாவது ஒரு ரூபத்தில் ஒரு வழியைக் காட்டுவான். அது எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் சரி, உங்களுக்கு விடிவுகாலம் பிறப்பது என்பது மட்டும் நிச்சயம். உங்கள் கையில் நீங்கள் எலுமிச்சம்பழத்தை வைத்துக்கொண்டு என்ன நினைக்கிறீர்களோ அதை நடத்தி தரக்கூடிய சக்தி இந்த உக்கிர தெய்வ வழிபாட்டிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்க விஷயம். நம்பிக்கையோடு செய்தால் தீராத கடன் பிரச்சினைக்கு 48 நாட்களில் தீர்வு. முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.