செல்வத்துக்கு அதிபதியாக திகழக்கூடிய பெருமாளை இதை வைத்து வழிபட்டு பாருங்கள். உங்களுடைய கடன்கள் அனைத்தும் விரைவில் தீர்ந்து, செல்வ செழிப்புடன் நம்மை வாழ வைப்பார்.

perumal prayer money
- Advertisement -

பணக்கார கடவுள் என்று கூறப்படும் கடவுளே பெருமாள். அதுவும் குறிப்பாக திருப்பதி ஏழுமலையானை நாம் பணக்கார கடவுள் என்று தான் கூறுகிறோம். செல்வத்திற்கு அதிபதியாக விளங்க கூடிய மகாலட்சுமி தாயாரை தன் நெஞ்சிலேயே வைத்திருக்கும் பெருமாளை நாம் சகல செல்வங்களுக்கும் அதிபதியாகவே கருத வேண்டும். அப்படிப்பட்ட பெருமாளை நாம் வழிபடுவதால் நம்முடைய கடன் சுமை தீரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவரை எப்படி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்தும் ஆற்றல் மிக்கவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும். காரணம் கடன் என்ற ஒரு வார்த்தை நம் வாழ்க்கையில் வந்து விட்டால், நாம் மட்டும் அல்லாமல் நம்முடைய குடும்பத்தாரும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகி நிம்மதி இன்றி, தூக்கமின்றி மிகவும் சிரமப்படுவார்கள். நமக்கு கஷ்டங்களை மட்டுமே தரக்கூடிய இந்த கடனை நாம் பிறரிடம் இருந்து வாங்காமல் இருக்க வேண்டும். அதையும் மீறி வாங்கும் பொழுது அதனை திருப்பி அடைப்பதற்கான பரிகாரங்களையும், முழு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டு முறையை நாம் நல்ல நாள் பார்த்து தொடங்க வேண்டும். பெருமாளுக்கு உரிய சனிக்கிழமையில் கூட இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். அனைவரின் இல்லங்களிலும் பெருமாளின் புகைப்படம் இருக்கும். அதுவும் திருப்பதி வெங்கடாசலபதி புகைப்படமாக இருந்தால் அது மிகவும் சிறந்தது. ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த துணியை பெருமாளின் புகைப்படத்திற்கு முன்பாக விரித்து வைக்க வேண்டும்.

அந்த மஞ்சள் துணியில் 7 ஒரு ரூபாய் நாணயங்களை வைக்க வேண்டும். பிறகு ஒரு விரலி மஞ்சள், ஒரு கொட்டை பாக்கையும் வைக்க வேண்டும். பெருமாளுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்ற வேண்டும். அவருக்கு மிகவும் பிடித்தமான சர்க்கரை, வெல்லம், பசும்பால், சக்கரை பொங்கல், புளியோதரை போன்ற பிரசாதங்களில் ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு பெருமாளுக்கு வாசனை மிகுந்த மலர்களையும், துளசியையும் சூட்டி கற்பூர தீப ஆராதனை காட்ட வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்த மஞ்சள் நிற துணியை மூட்டையாக கட்ட வேண்டும். அவ்வாறு கட்டும் பொழுது “எனக்கு இருக்கக் கூடிய கடன் தொல்லைகள் அனைத்தும் விரைவில் தீர வேண்டும்” என்று வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு இந்த மூட்டையை அப்படியே பெருமாளின் புகைப்படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். நம்முடைய கடன் பிரச்சனை தீரும் வரை இந்த மூட்டை பெருமாளின் திருவடியில் இருக்குமாறு வைக்க வேண்டும்.

நம்முடைய கடன்கள் அடைந்த பிறகு நாம் இந்த மூட்டையில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களையும், மஞ்சளையும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் உண்டியலில் போட வேண்டும். திருப்பதிக்கு செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று இதை செய்யலாம். அந்த மூட்டையில் இருக்கும் கொட்டைப்பாக்கை வாயில் போட்டு சிறிது நின்று துப்பி விட வேண்டும். சாப்பிட முடிந்தவர்கள் முழுமையாக கூட சாப்பிடலாம். அந்த மஞ்சள் துணியை உண்டியலிலும் சேர்க்கலாம் அல்லது வீட்டிற்கு கொண்டுவந்து கால் படாத இடத்திலும் வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: சிவ சிவ! தூங்கி எழுந்தவுடன் உங்கள் தலை மேல் இருக்கும் எல்லா பிரச்சனையும் சரியாக வேண்டுமா? தூங்கும் போது தலைக்கு மேலே இதை மட்டும் வைத்து தூங்குங்க போதும்.

இவ்வாறு நாம் பெருமாளை வணங்குவதன் மூலம் கடன் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். அவருக்கு பிடித்த நெய்வேத்தியத்தை வைத்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வோம்.

- Advertisement -