உங்களுக்கும் கடனுக்கும் அவ்வளவு நெருக்கும். இந்த மாதம் பழைய கடனை திருப்பி அடைத்தால், அடுத்த மாதம் புது கடன் வாங்குவதற்கு, புது செலவு, வாசல் கதவை தட்டும். இப்படிப்பட்ட ஒரு பந்தம் உங்களுக்கும் கடனுக்கும் இடையில் நெருக்கமாக இருக்கிறதா. உங்களையும் கடனையும் வேறு வேறாக பிரிக்கவே முடியவில்லையா. இந்த எளிமையான பரிகாரம் உங்களுக்கு தான்.
முருகப்பெருமானை வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய கஷ்டமும் தூசு போல காணாமல் போய்விடும். அதேபோலத்தான் உங்களுடைய கஷ்டங்களும் கடன் சுமையும் காணாமல் தேய்ந்து போக இன்றைய தினம் தேய்பிறை சஷ்டி நாளில் செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கடன் தீர தேய்பிறை சஷ்டி வழிபாடு
வழக்கம்போல சஷ்டி, கிருத்திகை என்றால் நீங்கள் முருகரை எப்படி எல்லாம் வழிபாடு செய்வீர்களோ, அப்படி எல்லாம் வழிபாடு செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை இன்று இரவு 8 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். காரணம் இன்று இரவு 8 மணி வரை தான் சஷ்டி திதி இருக்கிறது. ஆக நீங்கள் மாலை 6 மணிக்கு உங்களுடைய பூஜையை துவங்கினாலும் போதும்.
அது அரை மணி நேரத்திற்குள் முடிந்து விடும். ஒரு நாள் வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு அரை மணி நேரம் சுவாமிக்காக செலவு செய்வதில் தவறு கிடையாது. இன்று மாலை முருகர் வழிபாட்டின் போது ஸஉங்கள் கடன் சுமை குறைய துவரம் பருப்பு டப்பாவில் எந்த பொருளை வைக்க வேண்டும்.
ஆறு 1 ரூபாய் நாணயங்களை உங்களுடைய வலது கையில் வைத்துக் கொள்ளுங்கள். முருகனை மனம் உருகி வேண்டுங்கள். இந்த கடன் சுமை இன்றோடு என்னை விட்டு விலக வேண்டும். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையை எனக்கு வரக்கூடாது. அதற்காக வருமானத்தை பெருக்கிக் கொடுக்கக் கூடிய வேலையை நீ தான் செய்ய வேண்டும் என்று சரணாகதையோடு பிரார்த்தனை செய்துகொண்டு, கையில் இருக்கும் ஆறு ஒரு ரூபாயை முருகனின் பாதத்தை தொடுங்கள்.
அந்த ஒரு ரூபாய் நாணயங்கள் முருகனின் பாதத்தை தொடட்டும். இந்த ஒரு ரூபாயை கொண்டு போய் துவரம் பருப்பு டப்பாவில் மறைத்து வையுங்கள். டப்பாவில் நிரம்ப பருப்பு இருக்கும். இந்த ஆறு ஒரு ரூபாயை அதற்கு உள்ளே புதைத்து வைத்து விடுங்கள். ஒவ்வொரு ரூபாயாக துவரம் பருப்பில் வைக்கும் போதும் ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை ஒவ்வொரு முறை சொல்லுங்கள். மொத்தம் 6 முறை கணக்கு வரும். அவ்வளவுதான் அடுத்த சஷ்டி திதிக்குள் உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்திருக்கிறீர்கள்.
இந்த பிரச்சனையில் இருந்தெல்லாம் வெளிவருவதற்கு ஏதாவது ஒரு ரூபத்தில் முருகப்பெருமான் உங்களுக்கு வழியை காண்பித்துக் கொடுத்திருப்பான். ‘எனக்கு பிரச்சனை தீரவில்லை ஒரு மாதத்தில்’ என்ற வார்த்தையை எல்லாம் சொல்லக்கூடாது. நன்றாக கவனித்து பாருங்கள். ஏதோ ஒரு சின்ன வழியையாவது முருகன் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பான்.
ஒரு லட்ச ரூபாய் கடனை திருப்பி அடைக்க வருமானம் பெறுக ஏதாவது ஒரு வெளிச்சம் உங்கள் கண்ணுக்கு நிச்சயம் தெரியும். இது ஒரு உதாரணத்துக்காக சொல்லப்பட்டுள்ள விஷயம் தான். உங்க கடன் தொகைக்கு ஏற்ப அந்த கடனிலிருந்து விடுபட நிச்சயம் ஏதாவது ஒரு வழி கிடைக்கும்.
அடுத்த சஷ்டி திதிக்கு துவரம் பருப்பு டப்பாவில் வைத்த அந்த ஒரு ரூபாயில் நாணயங்களை கொண்டு போய் வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று அந்த உண்டியலில் போட்டுவிட்டு வரவேண்டும். வெறும் கையை வீசிக்கொண்டு செல்லக்கூடாது. இந்த ஆறு ஒரு ரூபாய் நாணயத்தோடு சேர்த்து முருகனுக்கு செவ்வரளி பூக்கள் வாங்கி கொடுங்கள்.
இதையும் படிக்கலாமே: இறைவழிபாட்டில் தடை வராமல் இருக்க
இரண்டு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு வாருங்கள். நிச்சயம் உங்களை கடன் கஷ்டத்தில் இருந்து அந்த முருகன் கொஞ்சம் கொஞ்சமாக காப்பாற்றிக்கொண்டே வருவான். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். கடன் இல்லாத வாழ்வும் உங்களை தேடி வரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.