கடன்கள் தீர மார்கழி சஷ்டி வழிபாடு

murugan sivalingam
- Advertisement -

மார்கழி மாதம் என்றாலே விசேஷமானது தான். இந்த மார்கழி மாதத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடுகளும் மிகவும் சக்தி வாய்ந்தது. அதே போல் இந்த மார்கழி மாதத்தில் நாம் வேண்டும் எந்த வேண்டுதலும் உடனடியாக நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இந்த மாதத்தில் நம் வாழ்க்கைக்கு தேவையான கல்வி, செல்வம், தொழில், உத்தியோகம் என அனைத்தையும் பெற மனமுருகி வேண்டினால் நிச்சயம் அது நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்

அத்தகைய மார்கழி மாதத்தில் வரக்கூடிய அனைத்து நாளுமே சக்தி வாய்ந்த நாட்கள் தான். அதிலும் இன்றைய தினம் வந்திருக்கக் கூடிய மார்கழி சஷ்டி திதியில் முருகப்பெருமானை வழிபட்டால் நம்முடைய கடன் தீர்ந்து நிம்மதியாக வாழலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர மார்கழி சஷ்டி வழிபாடு

இந்த மார்கழி மாதத்தில் வரக் கூடிய சஷ்டி தினத்தை சதைய சஷ்டி, சுப்பிரமணியர் சஷ்டி, சம்பாக சஷ்டி என்றெல்லாம் இந்த சஷ்டி தினத்திற்கு பேருண்டு. இந்த சஷ்டியானது வருடத்திற்கு ஒரு முறை தான் வரும். அதுவும் இன்று சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமை நாளில் வந்திருக்கிறது. இன்றைய நாளை தவற விடாமல் முருகப்பெருமானை வழிபட்டால் நம்முடைய கடன்கள் கண்டிப்பாக தீரும்.

இன்றைய நாளில் வீட்டில் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் படத்தை வைத்து வணங்க வேண்டும். இந்த முருகர் படத்திற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து அவருக்கு பிடித்த செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நெய்வேத்தியமாக உங்களால் முடிந்த ஏதேனும் எளிய உணவை படைத்தால் கூட போதும்.

- Advertisement -

அடுத்து முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக 9 அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தின் முன் அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். முடியாதவர்கள் youtubeல்போட்டு கேட்கவும் செய்யலாம். இந்த நேரத்தில் உங்களுடைய கடன் தொல்லைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று முருகனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இத்துடன் இன்றைய நாளில் பழமை வாய்ந்த சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சென்று சிவபெருமானுக்கு ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து வணங்க வேண்டும். பெரும்பாலும் அனைத்து சிவாலயத்திலே முருகர் சன்னதி நிச்சயம் இருக்கும். அங்கேயும் சென்று முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொண்டு இந்த இருவரிடமும் உங்கள் கடன் தொல்லை முற்றிலுமாக நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டை இன்றைய நாள் முழுவதிலும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் கோவிலுக்கு செல்லும் நேரமும் வீட்டில் பூஜை செய்யும் நேரம் ராகு காலம் எமகண்டம் மட்டும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் போதும். இந்த வழிபாடு செய்ய அசைவத்தை மட்டும் தவித்தால் போதும். வேறு எந்த விதிமுறைகளையும் பின்பற்ற தேவையில்லை.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாதம் ஏற்ற வேண்டிய ஜோதி விளக்கு.

முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி தினமும் சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமையும் ஒன்றாக அமைந்த இந்த தினத்தில் இவர்கள் இருவரையும் ஒன்றாக தரிசிப்பதே பெரும் பாக்கியம். அத்துடன் சேர்த்து உங்கள் கடன் தொல்லையும் தீர வேண்டும் என வேண்டும் உங்கள் கோரிக்கையை நிச்சயம் இவர்கள் நிறைவேற்றுவார்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பலனடையுங்கள்.

- Advertisement -