- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க சிவன் வழிபாடு

கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க சிவன் வழிபாடு

- Advertisement -

தீராத கடன் சுமையால் அவதிப்பட்டு வருபவர்கள், வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்கு வழியில்லாமல் கஷ்டப்படுபவர்கள், மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள், வறுமையில் சிக்கித் தவிப்பவர்கள் எல்லாம், ஆவணி மாதம் வரவிருக்கும் சோமவார அமாவாசை தினத்தில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகார முறையைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கடன் தீர சோமவார அமாவாசை பரிகாரம்

நாளை 2-9-2024 திங்கட்கிழமை தினத்தில் இந்த ஆவணி மாத சோமவார அமாவாசை திதியானது வரவிருக்கின்றது. நாளைய தினம் காலையில் முன்னோர்கள் வழிபாட்டை எல்லாம் தவறாமல் செய்து விடுங்கள். நாளை மாலை சிவன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நாளைய தினம் துவரம் பருப்பால் செய்யப்பட்ட சுண்டல் பிரசாதம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

துவரம் பருப்பை ஊற வைத்து, வேக வைத்து தாளித்து, தேங்காய் பூ சேர்த்து சுண்டல் மணக்க மணக்க தயார் செய்து சிவன் கோவிலில் கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். சிவன் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய கர்ம வினை, கடன் பிரச்சனையெல்லாம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நாளைய தினம் சிவன் கோவிலை 21 முறை வளம் வர வேண்டும்.

கடன் தீர வேண்டும் என்ற வேண்டுதல் மட்டும் உங்கள் ஆழ் மனதில் இருக்கட்டும். வழிபாட்டை நிறைவாக செய்து விட்டு, அந்த துவரம் பருப்பு சுண்டலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் கையாலேயே பிரசாதமாக கொடுத்து விடுங்கள். நாளைய தினம் துவரம் பருப்பு சுண்டலை சிவன் கோவிலில் நின்று தானம் செய்பவர்களுக்கு கடன் சுமை குறையும் என்பது நம்பிக்கை. அதிசக்தி வாய்ந்த திங்கட்கிழமை வந்திருக்கக்கூடிய இந்த அமாவாசை நாளை யாரும் தவற விடாதிங்க. கடன் சுமை உள்ளவர்கள் இதை செய்யுங்கள்.

- Advertisement -

நாளை மாலை 8:00 மணிக்கு மேலாக ஒரு மஞ்சள் நிறத்தில் இருக்கும் சதுர வடிவில் துணி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி கல்லுப்பு, 1 கைப்பிடி மிளகு வைக்க வேண்டும். என்னுடைய மொத்த கடனும் சீக்கிரம் அடைய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இந்த இரண்டு பொருளையும் வைத்து முடிச்சாக கட்டி நிலை வாசலில் மாட்டி விடுங்கள்.

உங்களுடைய கடன் தொகை எவ்வளவோ, அதுக்கு ஏற்றது போல பிரார்த்தனை வைக்க வேண்டும். 20000 கடன், 30000 கடன் என்றால் அடுத்த அமாவாசைக்குள் என்னுடைய கடன் தீர வேண்டும் என்று வேண்டுதல் வைத்து, அந்த கடன் அடைந்த பிறகு தான் இந்த முடிச்சை எடுத்து தண்ணீரில் போடுவேன் என்று ஒரு நிபந்தனையும் வைத்துக் கொள்ளுங்கள். மனதில் ‘சிவ சிவ’ என்ற மந்திரத்தை சொல்லி இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இலட்சக்கணக்கில் கடன் இருந்தால் மூன்று மாதத்திற்குள் அந்த கடன் அடைய வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து முடிச்சை கட்டலாம். உங்களுடைய கடன் அடைந்த பிறகுதான், இந்த முடிச்சை எடுத்து அதன் உள்ளே இருக்கும் கல் உப்பை தண்ணீரில் கரைக்க வேண்டும். கடன் அடைந்த பிறகு உப்பை மிளகுடன் சேர்த்து தண்ணீரில் கொட்டி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: செப்டம்பர் மாதம் பணம் சேர சொல்ல வேண்டிய வார்த்தை

உப்பு கரைந்தவுடன் மிளகை வடிகட்டி எடுத்து கால் படாத இடத்தில் போடலாம். கடன் அடையும் வரை முடிச்சு அப்படியே இருக்கட்டும். நிலை வாசலில் இருந்து கழட்ட வேண்டாம். குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக உங்கள் கடன் பிரச்சனை தீர இந்த இரண்டு பரிகாரங்களும் கை கொடுக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்