வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது. மேலும் அன்றைய நாள் சுக்கிரனுக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று யாரொருவர் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி தாயாரையும் சுக்கிர பகவானையும் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இருக்கக்கூடிய பணத்தடைகள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெள்ளிக்கிழமை வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமை அன்று எந்த முறையில் பரிகாரம் செய்தால் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொருளாதார வளர்ச்சி உண்டாக வெள்ளி பரிகாரம்
ஒருவருக்கு வரக்கூடிய பணம் ஏதோ ஒரு ரூபத்தில் தடைப்பட்டு நிற்கின்றது என்றால் அவர்களுடைய பொருளாதாரத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது. பொருளாதாரத்தில் எந்த அளவிற்கு நாம் முன்னேறிக்கொண்டே செல்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் நல்ல சுப நிகழ்வுகள் நடைபெறும். மேலும் கடன் பிரச்சினை போன்ற பல பிரச்சனைகள் தீர்வதற்கும் இது ஒரு அடித்தளமாகவே அமைகிறது. அப்படிப்பட்ட பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதற்கு சுக்கிர பகவானின் அருளை நாம் பெறவேண்டும். அப்படி சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பரிகாரத்தை அமாவாசை முடிந்த பிறகு வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய முக்கியமான ஒரு பொருள் வெள்ளி. இது சுக்கிரனின் அருளை பெற்றது.வெள்ளியைசெங்கல் வடிவத்தில் வாங்க வேண்டும். நம்மிடம் இருக்கக்கூடிய வெள்ளி நகைகளை உருக்கி செங்கல் வடிவத்தில் சிறிய அளவில் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு இரண்டு வெள்ளி செங்கல்கள் வேண்டும். அடுத்ததாக இந்த பரிகாரத்தை எலுமிச்சம் மரத்தின் அடியில் தான் செய்ய வேண்டும்.
நம்முடைய வீட்டிலேயே எலுமிச்சம் மரம் இருக்கும் பட்சத்தில் இந்த பரிகாரத்தை அங்கு செய்துவிடலாம் அல்லது நமக்கு மிகவும் நம்பகமாக இருக்கக்கூடியவர்கள் வீட்டில் இருந்தாலும் இதை நாம் செய்யலாம். அப்படி எந்த இடத்திலும் எலுமிச்சை மரம் இல்லை என்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய நர்சரிக்கு சென்று எலுமிச்சம் மர கன்றை வாங்கி ஒரு தொட்டியில் வைத்து இந்த பரிகாரத்தை செய்யலாம்.
எலுமிச்சை மரம் என்பது துர்க்கை அம்மனுக்குரிய மரமாக திகழ்கிறது என்பதால் வெள்ளிக்கிழமை அன்று துர்க்கை அம்மனிடம் இந்த வெள்ளியை வைத்து நாம் பூஜை செய்ய போகிறோம். இதன் மூலம் நம்முடைய பணம் தொடர்பாக நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது. எலுமிச்சம் மரம் இருக்கும் இடத்தில் முதலில் தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள். பிறகு எலுமிச்சம் மரத்திற்கு மஞ்சள் தடவி குங்குமம் வைத்து பூக்களை சூட வேண்டும். பிறகு அதன் அடியில் ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து ஊதுபத்தி காட்டி கற்பூரமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
இப்படி வைத்து விட்டு முழு மனதோடு துர்க்கை அம்மனை மனதார நினைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த எலுமிச்சை மரத்திற்கு அடியில் சிறிது பள்ளத்தை நோண்டி நாம் வாங்கி வைத்திருக்கும் வெள்ளி செங்கற்கள் இரண்டையும் உள்ளே வைத்து புதைத்து விடுங்கள். ஒரு மாத காலம் இது அப்படியே இருக்கட்டும். அடுத்து வரக்கூடிய அமாவாசை முடிந்து வரும் முதல் வெள்ளிக்கிழமை அன்று எலுமிச்சம் மரத்திற்கு அடியில் புதைத்து வைத்திருந்த வெள்ளி செங்கல் கற்களை எடுத்து விடுங்கள்.
இதில் ஒரு செங்கல் கல்லை எடுத்து சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பட்டு துணியில் வைத்து மூட்டையாக கட்டி பணம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். மீதம் இருக்கக்கூடிய ஒரு வெள்ளி செங்கலை கடையில் கொடுத்து உருக்கி மோதிரமாக செய்து வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் இந்த பரிகாரத்தை செய்தால் போதும் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை பணவரவில் இருந்த தடைகள் விலகி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:வேண்டுதலை நிறைவேற்றும் தேவதை நாள்
முழுமனதோடு துர்க்கை அம்மனை நினைத்து இந்த முறையில் வெள்ளிக்கிழமை அன்று வெள்ளியை வைத்து பரிகாரம் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களுடைய பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.