கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை தீர செவ்வாய்க்கிழமையில் விநாயகருக்கு செய்ய வேண்டிய பரிகாரம்? 1 ரூபாய் கூட மிச்சம் இல்லாமல் கடனை அடைத்து விடலாம்.

- Advertisement -

எல்லோருக்குமே கடன் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஆனால் எதுவும் ‘அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு’ என்பது போல தான் கடனும் ஆகும். சிறுக சிறுக வாங்கிய கடன் பெரிய அளவில் வந்து நிற்கும் பொழுது தான் கடன் வாங்கியது எவ்வளவு பெரிய தவறு என்று நமக்கு புரிய வரும். அது போல கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் கடன்கள் தீர, செவ்வாய் கிழமையில் விநாயகருக்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? இதை செய்வதால் கிடைக்கக் கூடிய பலன்கள் என்னென்ன? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளை தான் இந்த பதிவில் இனி அறிந்து கொள்ள போகிறோம்.

ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடாத ஒன்று ‘கடன்’ ஆகும். கடன் இல்லாமல், இருப்பதை வைத்து சமாளிப்பவர்களே உண்மையில் மிகப் பெரிய பணக்காரர்கள் என்று கூறலாம். கடன் இல்லாமல் எப்படி சாதாரண குடும்பத்தினரால் குடும்பத்தை நடத்த முடியும்? என்று கேட்கலாம். நீங்கள் வாங்கிய கடனுக்கு வட்டியை சரியாக கட்டி, உங்களால் அந்த கடனை அடைக்க முடியும் என்றால் நீங்கள் தாராளமாக கடன் வாங்கலாம். ஆனால் நம் தகுதிக்கு மீறிய கடன் வாங்கினால் வட்டியுடன் சேர்த்து வட்டி போட்டு நம்முடைய உழைப்பு, ரத்தம் முழுவதையும் உரிந்து விடுவார்கள்.

- Advertisement -

முடியாது என்று தெரியும் பொழுதும் வழி இல்லாமல், அந்த கடனை வாங்குவது நம்முடைய தவறு தான். இதனால் மற்றவர்களை குறை சொல்லக்கூடாது. சரி, இப்பொழுது கடன் பாரம் அதிகமாகிற்று! அதை தீர்ப்பதற்கு கடவுள் வழி காட்ட மாட்டாரா? என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். உங்களுடைய பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது? வருமானத்தை எப்படி பெருக்குவது? என்று சிந்திக்கலாம். இத்தகையவர்கள் விநாயகருக்கு எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

தீராத கடன்களையும் தீர்த்து வைக்கக்கூடிய விநாயக பெருமானுக்கு செவ்வாய்க் கிழமை தோறும் வெற்றிலை மாலை சாற்றி வழிபட வேண்டும். வீட்டிலேயோ அல்லது நீங்கள் கோவிலுக்கு சென்றோ கூட இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம். செவ்வாய்க் கிழமையில் வெற்றிலை மாலை சாற்றுவது, கடன் தொல்லையை போக்க வல்லது என்று ஆன்மீக பரிகாரங்கள் குறிப்பிடுகிறது.

- Advertisement -

எனவே செவ்வாய்க் கிழமையில் சீக்கிரம் எழுந்து குளித்து முடித்துவிட்டு கோவிலுக்கு அல்லது வீட்டில் இருக்கும் விநாயகருக்கு அபிஷேகங்கள் செய்து, அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். விக்ரஹமாக இருந்தால் அபிஷேகம் செய்யுங்கள். படமாக இருந்தால் அலங்காரம் மட்டும் செய்யுங்கள். வாசனை மிகுந்த முல்லை அல்லது மல்லி பூக்களை விநாயகருக்கு சாற்றி கொள்ளுங்கள். பின்னர் வெற்றிலையை நெருக்க நெருக்கமாக கட்டி மாலை போல அழகாக கோர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வெளியில் வேறு யாரிடமும் சொல்ல முடியாத, தீர்க்கவே முடியாத பிரச்சனையை இந்த பேப்பரில் எழுதி வையுங்க. தீர்க்க முடியாத அந்தப் பிரச்சினை, உடனே தீரும்.

வெற்றிலை மாலை ஆனது ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ரெட்டை படை எண்ணிக்கையில் இருக்கக் கூடாது. இப்படி ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் விநாயகருக்கு வெற்றிலை மாலை போட்டு, உங்களுடைய கடன் தீர பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இதை செய்து வந்தால் தீராத கடன் தொல்லையும் நிச்சயம் தீரும். உங்களுடைய பொருளாதாரம் முன்னேற ஆரம்பிக்கும், வருமானம் பெருகும், இதனால் கடனும் அடையும் என்பது நம்பிக்கை.

- Advertisement -