கடன் பிரச்சனை உங்களை விடாமல் துரத்துகிறதா? விநாயகரை இப்படி வழிபட்டால் கழுத்தை நெறிக்கும் கடனும் காணாமல் போகும்!

vinayagar-rice-arisi

பொதுவாக கடன் பிரச்சினை என்பது எல்லோருக்குமே இருக்கும். கடன் தொல்லைகள் நீங்கவும், மீண்டும் கடன் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும் இறை வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. கடினமான உழைப்பை நீங்கள் கொடுத்தும் அது வீண் போகிறது என்றால்! அங்கு ஏதாவது ஒரு தெய்வ குற்றம் இருக்கும். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடு செய்வதன் மூலம் கடனற்ற நிம்மதியான வாழ்வை பெறலாம். இந்த எளிய பரிகாரத்தை செய்து கடன் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற தொடர்ந்து இந்த பதிவைப் படியுங்கள்.

kadan

தீராத கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே நொந்து போனவர்கள் விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பாகும். அதிலும் அரச மரத்திற்கு அடியில் இருக்கும் விநாயகரை வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம். அரச மர இலையில் விநாயகருடைய ஸ்வரூபம் இருப்பதாக ஆன்மிகம் கூறுகிறது. அரச மரத்தை சுற்றினால் குழந்தைபேறு உண்டாவது போல, அரச மர விநாயகரை வழிபட்டால் கடன் தொல்லையும் தீரும்.

அதுபோல் வீட்டில் வெள்ளெருக்கு விநாயகரை வைத்திருப்பது கடன் பிரச்சனைக்கு முற்றுக் கொடுக்கும். வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு செய்வது செல்வத்தை மேலும் பெருக்கும் என்பதால் கடன் தொல்லைகளும் நீங்கிவிடும். கடன் தொல்லைக்கு தோரண கணபதியை வழிபடலாம். அரச மர அடியில் இருக்கும் பிள்ளையாருக்கு இந்த சிறிய பரிகாரம் செய்து, அவருடைய அருளை பரிபூரணமாக பெற்று கொள்ளலாம். அதற்கு என்ன செய்யலாம்? என்பதை இனி பார்ப்போம்.

poovarasan-leaf

அரசமரப் பிள்ளையாரை அடைந்து, அங்கிருக்கும் அரச மர இலைகளில் நன்றாக இருக்கும் ஐந்து இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இலையிலும் ஒவ்வொரு பொருளை வைக்க வேண்டும். மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், அத்திக்காய் போன்றவற்றை முறையே ஒவ்வொரு இலைகளிலும் வைத்துக் கொள்ள வேண்டும். விநாயகருக்கு பிடித்த அருகம்புல் ஒரு தாம்பூலத்தில் வைத்து கொள்ளுங்கள். விநாயகருக்கு எருக்கம்பூ கொண்டு கோர்த்த மாலையை சாற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வியாழன் கிழமையில் செய்வது உத்தமம். விநாயகருக்கு நைவேத்தியமாக பச்சரிசியுடன் கலந்த வெல்லத்தை ஒரு சிறிய வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் ஆகிய மங்கள பொருட்களை அந்த தாம்பூல தட்டில் வைத்து தீப, தூப, ஆரத்தி காண்பிக்க வேண்டும். கற்பூர ஹாரத்தி காண்பிக்கும் பொழுது விநாயகருக்கு உரிய கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

arugampul-vinayagar

விநாயகர் மந்திரம்:
வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

praying-god1

இவ்வாறு தொடர்ந்து ஆறு கிழமைகள் செய்து வர தீராத எவ்வளவு கடன் பிரச்சினைகளும் சுலபமாக தீர்ந்துவிடும். நீங்கள் பச்சரிசி கலந்த வெல்லத்தை நிவேதனமாக கட்டாயம் வைக்க வேண்டும். இதனை இறுதியில் பசுமாட்டிற்கு தானமாக கொடுக்க வேண்டும். கோமாதாவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது, வாழைப்பழம் கொடுப்பது போன்ற செயல்களை அடிக்கடி செய்து வர தீராத கடன் பிரச்சினைகள் தீரும். கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று இந்த பரிகாரம் செய்யும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைத்து கொள்ளுங்கள். ஆறு வாரம் கழித்து அந்த காணிக்கையை உங்கள் அருகில் இருக்கும் விநாயகர் கோவில் உண்டியலில் சமர்ப்பித்து விடுங்கள் நல்லதே நடக்கும்.