தீராத சங்கடங்களைத் தீர்த்து வைக்கும் விநாயகர், தீராத கடன் பிரச்சினைக்கும் உடனடி தீர்வை கொடுப்பார். விநாயகரை இப்படி மட்டும் வழிபாடு செய்தால் கைமேல் பலனை அடையலாம்.

cash

விக்னங்களை தீர்த்து வைப்பதில் விநாயகருக்கு எப்போதுமே முதலிடம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வை தரவேண்டும் என்று விநாயகர் வழிபாட்டை நாம் செய்வோம். அந்த பிரச்சினைக்கான தீர்வையும் உடனடியாக நமக்கு கொடுக்கும் சக்தியும் அந்த விநாயகப் பெருமானுக்கு உண்டு. உங்களுக்கு தீராத கடன் இருந்தாலும், நீங்கள் விநாயகரின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் போதும். அந்த கடனை தீர்ப்பதற்கான எளிமையான வழிமுறைகளை உங்கள் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் சக்தியும் பிள்ளையாருக்கு உண்டு என்பதிலும் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

vinayagar1

சங்கடஹர சதுர்த்தி அன்று இந்த பரிகாரத்தை தொடங்குங்கள். வீட்டு பூஜை அறையில் ஒரு பித்தளை சொம்பு அல்லது செம்பினால் செய்யப்பட்ட சொம்பு, வசதிபடைத்தவர்கள் வெள்ளி சொம்பை கூட இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்தலாம். வசதி படைத்தவர்களுக்கும் கடன் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அந்த சொம்பை சுத்தமாக கழுவி துடைத்து, அதற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, அதனுள்ளே கொஞ்சம் அருகம்புல்லை போட்டு, மேலே மஞ்சள் துணியை வைத்து கட்டி விடுங்கள்.

அதாவது வீட்டில் குலதெய்வத்திற்கு உண்டியல் கட்டுவோம் அல்லவா? மஞ்சள் துணியை கட்டி அதன் நடுவே ஒரு ஓட்டையைப் போட்டு, உண்டியலை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த உண்டியலில் ஒரு அருகம்புல், ஒரு ரூபாய் நாணயம், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி மூன்றையும், ‘விக்னங்களை தீர்க்கும் விநாயகா! என்னுடைய கடன் பிரச்சினையையும் தீர்த்து வை!’ என்று சொல்லி அதன் உள்ளே போட்டு விட வேண்டும்.

sombu

இந்த சங்கட சதுர்த்தி ஆரம்பித்தால் அடுத்த சங்கட சதுர்த்தி வரை நீங்கள் தொடர்ந்து இந்த பூஜையை உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்து வாருங்கள். அதாவது வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உண்டியலில் மேலே சொன்ன மூன்று பொருட்களையும் போட்டு விட்டு உங்களுக்கு தெரிந்த விநாயகர் மந்திரத்தை உச்சரிக்கலாம். ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயக போற்றி!’ என்ற மந்திரத்தை கூட சொல்லலாம்.

- Advertisement -

ஆண்களாக இருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. பெண்களாக இருந்தால் இடையில் இடையூறு ஏற்படும். பெண்களுக்கு பூஜை செய்ய முடியாத சமயத்தில், உங்கள் வீட்டில் இருக்கும் மற்றவர்களை இந்த பரிகாரத்தை செய்ய சொல்லலாம். மற்றவர்கள் செய்ய முடியாத பட்சத்தில் அந்த நாட்களை தவிர்த்து விட்டு நீங்கள் இந்த பரிகாரத்தை மீண்டும் தொடரலாம்.

one rupee

ஒரு சங்கடஹர சதுர்த்தி அன்று பரிகாரத்தை தொடங்கி விட்டீர்கள். அடுத்த சங்கட சதுர்த்தி அன்று பரிகாரத்தை எப்படி நிறைவு செய்ய வேண்டும்? விநாயகருக்காக முடிந்து வைத்திருக்கும் உண்டியலை அவிழ்த்து அதில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, 11 கொழுக்கட்டை செய்தால் கூட போதும். உங்கள் வசதிக்கு தகுந்தவாறு 108 கொழுக்கட்டை கூட செய்து கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான்.

kasthuri-manjal

கொழுக்கட்டைகளை நிவேதனமாக வைத்து விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி, உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் சங்கடங்கள், குறிப்பாக கடன் பிரச்சனை, படிப்படியாக தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, ஒரு சிதறு தேங்காய் உடைத்து விநாயகப் பெருமானுக்கு நிவேதனமாக வைத்து, கொழுக்கட்டையை பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். ஒரு ரூபாய் நாணயங்களை விநாயகரது உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

arugampul-vinayagar

நீங்கள் இந்த வழிப்பாட்டை உங்கள் வீட்டில் செய்ய தொடங்கிய முதல் நாளில் இருந்தே, உங்களுடைய கடன் பிரச்சனை தீர்வதற்கான வழிகளை, விநாயகப் பெருமான் உங்களுக்கு காட்டத் தொடங்கி விடுவார். கடன் சுமை படிப்படியாக குறைவதை உங்களாலேயே நிச்சயம் உணர முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பலனடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அஷ்டமி, நவமி அன்று ஒரு முடிவை எடுத்தால் இப்படி ஒரு ஆபத்து இருக்கிறதா? இதுநாள் வரை இது தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.