கோடி கோடியாக கடன் இருந்தாலும் விரைவில் அடைபட இந்த சக்தி வாய்ந்த நேரங்களை தவற விட்டுவிடாதீர்கள்! கடன் தீர ஜோதிட நேரங்கள்!

time-sevvai-kadan

ஜோதிடத்தைப் பொருத்தவரை அனைத்திற்கும் பரிகாரம் மூலம் தீர்வு காண முடியும் என்கிறது. எத்தகைய பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றிற்கு குறிப்பிட்ட பரிகாரம் செய்வதன் மூலம் அதிலிருந்து விமோசனம் பெறலாம் என்பது நம்பிக்கை. அந்த வகையில் கோடி கோடியாக கடன் இருந்தாலும் முழு கடனும் விரைவில் அடைய குறிப்பிட்ட காலம் உண்டு என்கிறது ஜோதிடம். அக்காலத்தில் கடன் தொகையில் இருந்து சிறு தொகையைக் கொடுத்தால் கூட முழு கடனும் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. அப்படியான காலங்கள் என்ன? எந்த நேரத்தில் கடன் தொகையைக் கொடுத்தால் முழு கடனும் அடையும்? என்னும் ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kadan

பொதுவாக கடன் தொகை எவ்வளவு இருந்தாலும் குறிப்பிட்ட இந்த ஹோரையில் கடன் தொகையில் இருந்து சிறு தொகையைக் கொடுத்தால் கூட விரைவாக முழு கடனும் நீங்கி விடும் என்கிற ஐதீகம் உண்டு. அப்படியானதொரு ஓரை நேரம் என்ன தெரியுமா? செவ்வாய் ஓரை தான் அது. செவ்வாய் கிழமையில் வரும் செவ்வாய் ஓரையில் கடனை திருப்பி செலுத்த எவ்வளவு கடன்கள் இருந்தாலும் எளிதில் நீங்கும்.

முதலில் இதற்கு செவ்வாய்க் கிழமையில் வரும் சூரிய உதயத்தை நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். சூரிய உதயம் காலை 6 மணிக்கு என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் அதிலிருந்து மதியம் ஒரு மணிக்கு மேல் 8 நிமிடம் 57 வினாடிக்குள் உங்களுடைய கடன் தொகையில் இருந்து சிறு தொகையை கடன் வாங்கியவரிடம் கொடுத்தால் முழு கடனும் விரைவாக அடையும் என்பது நியதி. இந்த நேரத்திற்கு கடனை தீர்க்க கூடிய அதீத சக்தி உண்டு என்பது ஜோதிடக் கூற்று.

surya-grahanam

சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் பொழுது நாம் மிகுந்த பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருப்போம். அந்நேரத்தில் இறை வழிபாடு செய்ய நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கப் பெறும் என்பது நியதி. அத்தகைய சமயத்தில் கிரகணம் விலகும் பொழுது கடனிலிருந்து ஒரு தொகையை கொடுத்து பாருங்கள். நீங்காத எத்தகைய கடனும் விரைவில் நீங்கும். செவ்வாய்க்கிழமையில் பிரதோஷம் வரும் பொழுது நமக்கு கடனை திருப்பி செலுத்த வேண்டிய நல்ல நாளாக அமைந்து இருக்கும். செவ்வாய் பிரதோஷத்தில் சூரியன் மறைவதற்கு முன்னர் உள்ள 90 நிமிடங்களுக்குள் கடன் தொகையிலிருந்து சிறு தொகையை கொடுக்க மொத்த கடன் அடையும்.

குறிப்பிட்ட திதியில் கடனை அடைக்கும் பொழுது முழு கடன் தீரும் என்கிறது ஜோதிடம். அவ்வகையில் நவமி திதியுடன் கூடிய செவ்வாய்க் கிழமை, சதுர்த்தி திதியுடன் கூடிய ஞாயிறு மற்றும் சனிக் கிழமைகள் கடனை அடைக்க கூடிய நல்ல நேரமாக அமையும். இவைகள் ஒன்றாக இருக்கும் நேரத்தில் குளிகை காலத்தை கணிக்க வேண்டும். குளிகையில் கடனை கொடுக்க வெகு விரைவாகவே முழு கடனும் நீங்கும்.

Astrology

லக்னத்திலும் இது போன்ற கடனை அடைக்க கூடிய நேரம் உண்டு. மேஷ லக்னத்தில் பொழுது வரும் அஸ்வினி நட்சத்திரம், விருச்சிக லக்னத்தில் வரும் அனுஷ நட்சத்திரம் ஆகிய காலங்களில் கடனை கொடுக்க எத்தகைய கடனும் தீரும் என்பது ஜோதிட நம்பிக்கை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரகசிய நேரங்களில் நீங்கள் வாங்கிய கடன் தொகையில் இருந்து 100 ரூபாய் கொடுத்தால் கூட லட்சம் கடனும் விரைவாக அடையும்.