கோவிலுக்கு இந்த தானத்தை மட்டும் நாம் செய்தால் எப்பேர்பட்ட கடன்கள் நமக்கு இருந்தாலும் 108 நாட்களில் காற்றில் கரைந்து காணாமலே போகும்!

temple-cash

ஒருவருக்கு கடன் தொல்லை இருக்கிறது என்றால் அவருடைய ஜாதகத்தை முதலில் கணிப்பது அவசியமாகும். சுய ஜாதகத்தில் ராகு, கேது, சனி பகவான் ஆகிய கிரகங்கள் வக்ரம் பெறும் பொழுது கடன் பிரச்சினைகளால் ஜாதகர் அவதிப்படுவார். தீராத நோய்களும், கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லைகளும் தீர்வதற்கு சனிபகவான் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. கோவில்களுக்கு சென்று இந்த தானத்தை செய்யும் பொழுது எப்பேர்ப்பட்ட கடன் தொல்லைகள் இருந்தாலும் உடனே நிவர்த்தி ஆகி விடும் என்பது ஐதீகம். அது என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

praying-god1

தீராத கடன் தொல்லை இருக்கும் பொழுது உங்கள் அருகில் இருக்கும் கோவில்களுக்கு அடிக்கடி சென்று வாருங்கள். ஆலயங்களுக்கு செல்வதை விட சிறந்த பரிகாரம் எதுவுமே இருக்க முடியாது. வீட்டிலேயே அமர்ந்து அழுது கொண்டிருந்தால் எதுவும் நடக்கப் போவதில்லை. உங்களுடைய கோரிக்கைகளை இறைவனிடத்தில் பிரார்த்தனையாக வையுங்கள். நிச்சயமாக எல்லா கடனும் தீரும்.

சனி பகவான் சன்னிதிக்குச் சென்று கருப்பு வஸ்திரம் சாற்றி, கருப்பு எள் கொண்டு தீபம் ஏற்றி வந்தால் எத்தகைய கடன்களும் உடனே தீரும். சனிதோஷம் நீங்க கால பைரவரையும், ஈசனையும் வணங்குவது கூடுதல் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். சிவன் கோவில்களுக்கு சென்று அங்கு நடக்கும் அன்னதானத்திற்கு தேவையான உதவிகள் செய்யலாம். உதாரணத்திற்கு அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

annathanam

அம்பாள் கோவிலுக்கு சென்று பொங்கல் நைவேத்தியம் வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம். அம்பாளுடைய சன்னிதியில் நின்று 108, 1008 திருநாமாவளிகளை உச்சரித்து வந்தால் எவ்வளவு கடன்கள் இருந்தாலும் எளிதாக தீர்ந்து விடுவதாக ஐதீகம் உள்ளது. புதிதாக கட்டும் கோவில்களுக்கு மணி வாங்கி கொடுப்பது, பூஜை பொருட்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற புண்ணிய காரியங்களை செய்வதன் மூலம் எத்தகைய கடனும் நீங்குவதாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது எனவே இதையெல்லாம் செய்யும் பொழுது நல்லதொரு தீர்வும் உங்களுக்கு கிடைக்கும்.

விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள அனுமனுக்கு வெண்ணெய், வடைமாலை சாற்றி வழிபட்டு வந்தால் எல்லா கஷ்டங்களும் நீங்கும். துன்பங்கள் நீங்க துயர் நீங்க பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, விளக்கு வைத்து வழிபடுங்கள். பைரவர் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள பைரவருக்கு அரகஜா, புனுகு போன்ற அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கும் பொழுது எத்தகைய கடன்களும் நிவர்த்தியாகும். ராகு, கேது தோஷம் இருப்பவர்கள், ராகு கேது நீசம் பெற்ற ஜாதகக்காரர்கள் நாகருக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்யலாம். புற்றுக்கு பால் ஊற்றி மனதார வேண்டிக் கொள்ளலாம். இதனால் எல்லா கடன்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

ghee

கடன் தொல்லையில் இருந்து மீளவே முடியாது என்று நினைப்பவர்கள் கோவில்களுக்கு சென்று மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவருக்கு ஏற்றப்படும் விளக்கிற்கு நெய் அல்லது நல்லெண்ணெய் வாங்கிக் கொடுங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு நீங்கள் கோவில்களுக்கு நெய் தானம் செய்யும் பொழுது உங்களை வாட்டி வதைக்கும் கடன் தொல்லைகள் வெகு விரைவாகவே காற்றில் கரைந்தது போல காணாமல் கரைந்து போய் விடும் என்கிறது சாஸ்திரம். ஆகவே கடன் தொல்லை தீர கோவில்களுக்கு இவற்றையெல்லாம் தானம் செய்யுங்கள் நல்லதே நடக்கும்.