மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ பல பாவங்களை செய்கிறார்கள். இந்த பாவங்கள் தான் கர்ம வினைகளாக மாறி நம்முடைய வாழ்க்கையில் நன்மைகள் நடைபெறுவதற்கும் தீமைகள் நடைபெறுவதற்கும் காரணமாக அமைகிறது. இப்படிப்பட்ட பாவங்களை நீக்குவதற்குரிய அற்புதமான ஸ்தலமாக தான் சிவபெருமானின் ஆலயம் ஒன்று திகழ்கிறது. அந்த ஆலயத்தின் சிறப்புகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மனிதர்கள் மட்டுமல்லாமல் தெய்வங்களே தங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ சில பாவங்களை செய்து அதன் பலனால் பூலோகத்திற்கு வந்து தவமிருந்து பாவம் விமோசனமடைந்து மறுபடியும் தேவலோகம் சென்று இருக்கிறார்கள். அப்படி பாவங்கள் நீங்குவதற்காக பார்வதி தேவி ஒற்றை காலில் தவமிருந்து சிவன் திருவடியை சரணாகதி அடைந்த ஆலயமாக திகழ்வதுதான் ஆலந்துரையார் ஆலயம். இந்த ஆலயத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம்.
விளையாட்டாக பார்வதி அம்மன் சிவபெருமானின் கண்களை மூடியதால் பூலோகமே இருண்டது என்ற கதை நம் அனைவருக்கும் தெரியும். அந்த பாவத்திலிருந்து நீங்குவதற்கு இந்த ஸ்தலத்தில் தான் பார்வதி அம்மன் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தார் என்று கூறப்படுகிறது. மேலும் பரசுராமன் தன்னுடைய தாயை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த தோஷம் விலக பரசுராமன் இந்த ஆலயத்தில் வந்து பரசுராம தீர்த்தத்தை உற்பத்தி செய்து அபிஷேகம் செய்துதான் பாவ விமோசனம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய அம்மனுக்கு அருந்தவ செல்வி என்று பெயர். இந்த அம்மனுக்கு விரலி மஞ்சள் அரைத்து மஞ்சள் விழுதாக எடுத்துக்கொண்டு அபிஷேகத்திற்கு தரும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டிய வரத்தை இந்த அம்மன் தருகிறார் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆலயத்திலும் கர்ப்ப கிரகத்திற்குள் நுழைவதற்கு முன்பாக கஜலட்சுமியின் பீடம் என்பது நிலைவாசலின் மேலே இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் கஜலட்சுமிக்கு பதிலாக பரசுராமர் இருப்பது ஒரு விசேஷமான ஒன்றாக திகழ்கிறது.
மேலும் இந்த ஆலயத்தின் பிரகாரத்தில் வலம் வரும் பொழுது உமையுருபாகனாக சிவபெருமான் காட்சியளிக்கிறார் என்பதும் விசேஷமான ஒன்று. இதோடு மட்டுமல்லாமல் இந்த ஆலயத்தில் சப்த ரிஷிகளும் காட்சியளிக்கிறார்கள். அதேபோல் சப்த மாதர்களும் காட்சியளிக்கிறார்கள். பஞ்சலிங்கங்களும், கமல விநாயகரும் காட்சியளிக்கிறார் என்று இந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தெய்வங்களுக்கும் சிறப்புகள் அதிகமாகவே இருக்கிறது.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை ஆலந்துறையார் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களுக்கு குலதெய்வ தோஷம், பித்ரு தோஷம், பூர புண்ணிய பலன் குறைவாக இருப்பது போன்ற அனைத்திற்கும் நல்ல விமோசனம் கிடைக்கும். மேலும் ஜோதிடர்கள் தங்களுடைய ஜோதிடத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சப்தரிஷிகளை வழிபாடு செய்வது என்பதும் சிறப்பு. குலதெய்வமே தெரியாது என்று நினைப்பவர்களும் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
இந்த ஆலயம் அரியலூரில் இருந்து கீழப்பழுவூர் என்னும் ஊருக்கு செல்ல வேண்டும். அங்குதான் இந்த ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக ஆலமரம் இருக்கிறது. அதனால் தான் இந்த சிவபெருமானுக்கு ஆலந்துறையார் என்ற பெயரும் ஏற்பட்டதாம். தேவார பாடல் பெற்ற ஸ்தலமாக இந்த ஸ்தலம் திகழ்கிறது. திங்கட்கிழமை அன்று இங்கு சென்று சிவபெருமானுக்கு உரிய மலரான பிச்சிப்பூவை வாங்கி கொடுக்க வேண்டும். பிச்சிப்பூ கிடைக்காத பட்சத்தில் வில்வ இலையை வாங்கி கொடுத்த அர்ச்சனை செய்து 21 முறை அவரை வலம் வர 90 நாட்களில் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: எதிரிகளும் தீய சக்திகளும் விலகி ஓட பரிகாரம்
தேவார பாடல் பெற்ற ஸ்தலமாக திகழக்கூடிய இந்த ஸ்தலத்திற்கு ஒரு முறையாவது சென்று வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.