இந்த சில பொருட்களை கடனாக வாங்கினால் தரித்திரம் பிடிக்கும்! தீராத கஷ்டம் வராமல் இருக்க இவைகளை தவறியும் கடனாக வாங்காதீர்கள்!

kuberan-cash-gold

ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு குணாதிசயங்களை கொண்டிருக்கும். ஒருவரிடமிருந்து நாம் வாங்கும் ஒரு பொருள் நமக்கு ராசியாக இருக்கிறதா? இல்லை தரித்திரத்தை உண்டாக்குகிறதா? என்பதை பார்க்க வேண்டும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஒரு சிலரிடம் இருந்து நாம் வாங்கும் நாணயம் அல்லது பணம் ராசியாக அமைந்து விடும். அதன் பிறகு நமக்கு மென்மேலும் பணம் பெருகும். அதுபோல் ஒரு விஷயம் தான் இதுவும்! இந்த வரிசையில் எந்த பொருட்களையெல்லாம் நாம் மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கினால் நமக்கு தரித்திரம் ஏற்படும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kadan

குறிப்பாக முதல் விஷயமாக நாம் வாங்கவே கூடாது ஒரு விஷயம் கடன் தான். அதாவது பணத்தை கடனாக வாங்குவது என்பது கூடாது. எந்த வகையிலும் பணத்தை நீங்கள் கடனாக வட்டிக்கு வாங்கினால் நிச்சயம் உங்களுக்கு தரித்திரம் பிடித்த மாறி தான். வட்டியால் நொந்து போனவர்கள் இந்த உலகத்தில் ஏராளமானோர் இருக்கின்றனர். அதை நாமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். பணத்தை கடன் வாங்குவது என்பதே தரித்திரமான ஒரு செயல் தான். கூடுமானவரை அதனை தவிர்த்து பாருங்கள், வாழ்க்கை இனிமையாக இருக்கும். நல்ல விஷயத்திற்காகவும், வேறு வழியே இல்லை எனும் சமயத்திலும் வாங்கலாம் அதுவும் நம் தகுதிக்கு மீறி வாங்குவது ஆபத்தை தான் உண்டாக்கும்.

இரண்டாவதாக ஒருவர் அணிந்திருக்கும் உடையை இன்னொருவர் கடனாக வாங்கி அணிந்து கொள்ளக் கூடாது. வஸ்திரத்தில் தரித்திரம் உண்டு. அதனால் தான் புது வஸ்திரத்தை ஒருவருக்கு தானம் கொடுத்தாலும், அதனை மஞ்சள், குங்குமம் தடவி கொடுக்கப்படுகிறது. அதுவே பழைய வஸ்திரம் ஆக இருந்தால் அதனை ஒரு முறை உப்பு தண்ணீரில் அலசி காய போட்டு அதன் பிறகு தானம் கொடுக்கலாம். ஒருவரிடமிருந்து இன்னொருவர் வஸ்திரத்தை தானமாக வாங்கினால் அவர்களுக்கு அவர்களிடமிருந்த பாவங்களிலிருந்து பாதி பங்கு வந்து விடுமாம். எனவே தெரியாமல் கூட எவரிடமும் வஸ்திரத்தை கடனாக வாங்காதீர்கள்.

settu-gold

ஒருவர் அணிந்திருக்கும் தங்க நகைகளை இன்னொருவர் கடனாக வாங்கி அணிந்தாலும் தரித்திரம் ஏற்படும். சகோதர, சகோதரிகளுக்கு இடையே அல்லது தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று யாரிடமாவது நம்மிடம் இல்லை என்றால் அவர்களுடைய நகையை வாங்கி அணிந்துக் கொண்டு விசேஷங்களுக்கு செல்வது உண்டு. எந்த வகையிலும் ஒருவர் உடலில் பட்ட பொன் நகை இன்னொருவர் உடலில் அப்படியே அணிந்து கொண்டால் அவர்களுக்கு தரித்திரம் உண்டாகிவிடும்.

இது போன்று வேறு வழியே இல்லாமல் வாங்கி கொண்டால் அதனை ஒரு முறை மஞ்சள் தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் அணிந்து கொள்ளுங்கள். இதனால் தோஷம் நிவர்த்தியாகும். உங்களிடமிருந்து மீண்டும் அவர்கள் வாங்கும் பொழுதும் இதே போல பரிகாரம் செய்து பின்னர் போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் சொர்ண தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

hand-kerchief

சிறுவயதிலிருந்தே நமக்கு நண்பர்களிடமிருந்து கைக்குட்டை, பேனா, புகைப்படம் போன்றவற்றை வாங்கினால் பிரிந்து விடுவோம் என்கிற நம்பிக்கை இருந்து வந்தது. இது எந்த அளவிற்கு உண்மையோ! இல்லையோ! தெரியாது ஆனால் மேற்கூறிய சில விஷயங்களில் ஆன்மீக ரீதியாக உள்ளார்த்தம் இருக்கின்றது எனவே தோஷங்கள் ஏற்படாமல் இருக்க, தரித்திரம் நீங்க இது போன்ற விஷயங்களை கடன் வாங்குவதை தவிர்க்கவும்.