- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடனை தீர்க்கும் ஐந்து ரூபாய் வழிபாடு

கடனை தீர்க்கும் ஐந்து ரூபாய் வழிபாடு

- Advertisement -

இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு விஷயம் என்றால் அது கடன் தான். தங்களுடைய பொருளாதாரத்திற்கு ஏற்றார் போல் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ கடனை வாங்கி வைத்திருப்பார்களே தவிர்த்து கடன் இல்லாமல் வாழ்பவர்களை நாம் விரல் விட்டு எண்ணிவிட முடியும். அந்த அளவிற்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட கடனிலிருந்து வெளியே வருவதற்கு எவ்வளவு முயற்சிகளை செய்தும் அந்த முயற்சிகள் வெற்றியடையவில்லை என்னும் பட்சத்தில் இந்த தேய்பிறை பஞ்சமி நாள் அன்று ஐந்து ரூபாயை வைத்து வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்வதன் மூலம் கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழியும் கிடைக்கும், நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளும் வெற்றி அடையும். அந்த ஐந்து ரூபாய் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஐந்து ரூபாய் வழிபாடு

இன்று பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி மாசி மாதத்தின் ஐந்தாம் நாள் தேய்பிறை பஞ்சமி திதி நாள் முழுவதும் இருக்கிறது. பொதுவாக வாராஹி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது இரவு நேரம் தான் என்பதால் இரவு நம்மால் எந்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்ய முடியுமோ அந்த நேரத்தில் செய்யலாம். முதலில் எப்பொழுதும் போல் வீட்டில் வாராஹி அம்மன் வழிபாட்டை எப்படி செய்வோமோ அதேபோல் செய்து கொள்ள வேண்டும். கண்டிப்பான முறையில் அகல் விளக்கில் வாராகி அம்மனுக்கு என்று ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். இது பஞ்சமுக தீபமாக இருப்பது மிகவும் சிறப்பு. ஒருவேளை பஞ்சமுக அகல் விளக்கு இல்லை என்பவர்கள் ஒரு அகல் விளக்கில் 5 திரிகளைப் போட்டு கூட தீபம் ஏற்றலாம்.

வாராகி அம்மனுக்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி வாராகி அம்மனுக்கு பிடித்தமான நெய்வேத்தியத்தை வைத்து வாராகி அம்மனை வழிபாடு செய்வதோடு இந்த ஐந்து ரூபாய் பரிகாரத்தையும் சேர்த்து செய்ய வேண்டும். இதற்கு ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நாணயத்தில் பச்சை கற்பூரத்தை மஞ்சளில் கலந்து பன்னீர் ஊற்றி குழைத்து பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை உங்களுடைய வலது கையில் வைத்துக்கொண்டு வாராகி அம்மனுக்கு முன்பாக அமர்ந்து எங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்ற வேண்டுதலை முழுமனதோடு முன்வைக்க வேண்டும். வீட்டில் யாருக்கு அதிகப்படியாக கடன் பிரச்சினை இருக்கிறதோ அவர்களின் பெயரைக் கூறி அவர்களுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு “ஓம் வாராஹி அம்மனே போற்றி” என்றோ அல்லது உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு வாராகி அம்மனின் மந்திரத்தை கூறியோ முழுமனதோடு வாராகி அம்மனை குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது வழிபாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு வழிபாடு செய்து முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை மஞ்சள் அல்லது பச்சை நிற துணியில் கட்டி நம் வீட்டில் இருக்கக்கூடிய அரிசி பாத்திரத்தில் இதை போட்டு வைத்து விட வேண்டும். ஐந்து நாட்கள் இது அந்த அரிசி பாத்திரத்திற்குள்ளாகவே இருக்கட்டும். பிறகு இதை எடுத்து ஏதாவது ஒரு சுப காரிய செலவிற்கோ அல்லது கோவிலுக்கு செலவு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:வியாபாரம் செழிக்க புதன் பரிகாரம்

இந்த முறையில் தேய்பிறை பஞ்சமி நாளன்று ஐந்து ரூபாயை வைத்து வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மனின் அருளால் நம்முடைய கடன் அனைத்தும் தேய்ந்து போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்