நீங்கள் கைமாத்தாக கொடுத்த பணத்திலிருந்து, கடனாக கொடுத்த பணம் வரைக்கும், ஒரு ரூபாய் மிச்சம் இல்லாமல் வசூலாகிவிடும்! வாராக் கடனை வசூல் செய்யும் சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு.

money

கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த நம் வீட்டு பணத்தை, அடுத்தவர்களுக்கு கடனாக கொடுத்துவிட்டு, அதை வசூல் செய்ய முடியாமல் தவித்து வருபவர்கள் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவசர தேவைக்காக பணத்தை கடனாக வாங்கி செல்வார்கள். ஆனால், அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே கடன் வாங்கியவர்களுக்கு இருக்காது. சில சமயங்களில் கடன் வாங்கியவர்களின் கை மேலோங்கி இருக்கும். கடன் கொடுத்தவர்களின் நிலைமை கீழ்நோக்கி செல்லும். என்ன செய்வது?

kadan

எல்லாம் கர்மவினை தான். சரி, உங்க பணத்தை கடனாக நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுத்துவிட்டு, ஏமாந்து விட்டீர்களா? அல்லது உங்களுடைய சொந்த பந்தங்களுக்கிடையே கூட, கைமாத்தாக பெரிய தொகையை கொடுத்துவிட்டு, ஏமாந்தவர்களாக இருந்தால் கூட உங்களுக்காகவும் சொல்லப்பட்டுள்ள சுலபமான பரிகாரம் தான் இது.

வாராக் கடனை வசூல் செய்ய என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருப்பவர்களுக்காக இந்த பதிவின் மூலம் ஒரு சிறிய பரிகாரத்தை தெரிந்து கொள்ளலாமா? அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பாரம்பரியமாக செய்து வந்த தாந்த்ரீக பரிகாரங்களில் இதுவும் ஒன்று. இந்த பரிகாரத்திற்க்கு நாம் பயன்படுத்தப் போகும் இலை பூவரச இலை. இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை எதுவுமே பார்க்க தேவையில்லை. உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்குமோ, அப்போது இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

முதலில் பூவரச இலை ஒன்றை எடுத்து கொள்ள வேண்டும். அந்த இலையின் மேல், உங்களுக்கு யார் பணம் கொடுக்க வேண்டுமோ அந்த நபரின் பெயரை எழுத வேண்டும். நிறைய பேருக்கு கடன் கொடுத்து இருப்பீர்கள், இருப்பினும் பெரிய தொகை வசூலாக வேண்டியிருக்கும் அல்லவா? அந்த ஒரு நபரின் பெயரை மட்டும் அந்த பூவரச இலையின் மேல் எழுதி, அதை அப்படியே சுருட்டி ஒரு டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பாட்டில் முழுவதும் கல்லுப்பு நிரப்பிக் கொள்ளுங்கள். அந்த கல்லுப்பு நடுவே நீங்கள் பெயர் எழுதி வைத்திருக்கும் இந்த பூவரச இலையை புதைத்து வைத்து விடுங்கள் அவ்வளவு தான். எண்ணி 15 நாட்களுக்குள், நீங்கள் கடன் கொடுத்தவரது நிலைமையும் மாறும். உங்களது நிலைமையும் மாறும்.

cash

நம்மிடம் கடனாக பணத்தை பெற்றவராக இருந்தாலும் அவர்களுக்கு, எந்த பிரச்சனையும் வரக்கூடாது. பணத்தை கொடுத்த உங்களுக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது. அந்த அளவில் சொல்லப்பட்டுள்ள பரிகாரம் தான் இது. உங்களிடம் கடன் பெற்றவருக்கு நேரம் சரியாக இல்லை என்றாலும், அவருடைய நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றி, அவருக்கும் பணவரவை, வரச் செய்து அந்த பணத்தை கொண்டு வந்து உங்கள் கையில் தரக்கூடிய தருணத்தை ஏற்படுத்தி தரக்கூடிய பரிகாரம் என்று கூட, இந்த பரிகாரத்தை சொல்லலாம். நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நிச்சயம் பலன் உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
மணி பிளான்ட் உங்க வீட்ல இருக்குதா? இந்த ரகசியத்தை, அந்த செடி கிட்ட சொல்லி பாருங்களே! அந்த செடியும் சூப்பரா வளரும். உங்க கைல இருக்க பணம் காசும் வளர்ந்துகிட்டே போகும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.