இப்படி ஒரு சுவையில் ஆரோக்கியம் தரும் குருமாவை நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க. அசைவ குருமா, இந்த சைவ குருமாவுக்கு பக்கத்தில் கூட நிக்க முடியாது.

kuruma1_tamil
- Advertisement -

இப்படி ஒரு ஆரோக்கியம் தரக்கூடிய குருமாவை யாருமே செஞ்சிருக்க மாட்டீங்க. அப்படி இதில் என்ன ஆரோக்கியம். கொண்டை கடலை, பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு என்று சத்து நிறைந்த பொருட்களை சேர்த்து செய்யப் போகின்றோம். இவ்வளவு அருமையான இந்த குருமாவை கடப்பா குருமா என்று கூட சொல்லலாம். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த சுவை தரும் ரெசிபி என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

கடப்பா குருமா செய்ய ஸ்பெஷல் அரவை செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி, 2 – கைப்பிடி அளவு தேங்காய் போட்டு, பிரவுன் நிறம் வரும் வரை வறுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும். தேங்காய் கருகிவிட்டால் குருமாவின் சுவை மாறிவிடும். பிரவுன் நிறம் வந்தவுடன் இந்த தேங்காயை மிக்ஸி ஜாரில் கொட்டி விடுங்கள்.

- Advertisement -

அடுத்து அதே கடாயில் மீண்டும் எண்ணெய் – 1 ஸ்பூன், தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல், சோம்பு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், கசகசா – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, எல்லா பொருட்களையும் போட்டு வதக்கி இதையும் மிக்ஸி ஜாரில் போட்டு வைத்திருக்கும் வறுத்த தேங்காயோடு போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை

அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு – 1 ஸ்பூன், கல்பாசி – சிறிதளவு, பிரியாணி இலை – 2, மீடியம் சைஸில் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி, மிக்ஸி ஜாரில் அரைத்த தக்காளிப்பழம் – 2, சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளியின் பச்சை வாடை நீங்கட்டும்.

- Advertisement -

அதன் பின்பு ஊற வைத்த கொண்டைக்கடலை – 1 கை பிடி, ஊறவைத்த பச்சை பட்டாணி – 1 கைப்பிடி, தோல் உரித்து ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு – 2, இந்த மூன்று பொருட்களையும் போட்டு இரண்டு நிமிடம் போல வதக்கி விட்டு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், கிரேவிக்கு தேவையான அளவு – உப்பு, போட்டு வதக்கி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து குக்கரை மூடி 5 நிமிடங்கள் வேக வையுங்கள்.

உள்ளே இருக்கும் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை எல்லாம் கால் பாகம் வதங்கி வெந்து கிடைக்கும். (பச்சை பட்டாணி, கருப்பு கொண்டை கடலையை 6 மணி நேரத்திற்கு முன்பே தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.)

இதையும் படிக்கலாமே: இனி சப்பாத்தி பூரிக்கு மாவு பிசையும் போது, இதை சேர்த்து பிசைந்து பாருங்கள். சப்பாத்தி மூணு நாள் ஆனாலும் சாஃப்டா இருக்கும், பூரியும் நல்லா உப்பலா வரும். இது தெரியாம தான் இவ்வளவு நாள் இருந்துருக்கோம்மா.

அடுத்தபடியாக மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை குக்கரில் ஊற்றி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதன் மேலே கொத்தமல்லி தழைகளை தூவி குக்கரை மூடி மிதமான தீயில் 3 விசில் விட்டு எடுத்தால் அருமையான வாசத்தோடு அட்டகாசமான கிரேவி தயார். சுட சுட இட்லி தோசை சப்பாத்திக்கு மேல் வார்த்து சாப்பிட்டு பாருங்கள். வேறென்ன வேண்டும் உலகத்தில்.

- Advertisement -