இந்த சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகள் செய்ய பயன்படுத்துவது என்னவோ அதிக பட்சம் கோதுமை மாவு அல்லது மைதா மாவு வைத்து தான் செய்வோம். ஆனால் ஒவ்வொருவர் செய்வது ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சிலர் எப்படி செய்தாலும் சப்பாத்தி ஓடு போல தான் வரும். பூரி எழும்பவே எழும்பாது. ஒரு சிலர் சாதாரணமாக செய்வது போல் தான் இருக்கும். சப்பாத்தி அவ்வளவு சாப்டா இருக்கும்,பூரி புசுபுசுவென்று இருக்கும். இதற்கு காரணம் அதில் சேர்க்கும் பொருட்களின் அளவு தான். இப்போது நாம் வீட்டில் செய்யும் சப்பாத்தியும், பூரியும் நல்ல சாப்டாகவும், பூரி புசுபுசுன்னு வரவும் இது வரை நாம் வீணாக கீழே ஊற்றும் ஒரு பொருளை வைத்து தான் செய்யப் போகிறோம். அது என்னவென்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
முதலில் சப்பாத்தி சாப்ட்டாக செய்வது செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் ரேஷன் கோதுமையில் அரைத்த மாவை பயன்படுத்தினால் கூட நன்றாகத் தான் வரும்.
செய்முறை
இந்த சப்பாத்தி செய்வதற்கு முன்பே இதில் சேர்க்க பயன்படுத்தும் அந்த பொருளை தயார் செய்ய வேண்டும். நமக்கு அதற்கு இரண்டு வெண்டைக்காய் காம்பு நீக்கி சுத்தம் செய்து இரண்டாக நறுக்கி அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு அரை மணி நேரம் வைத்து விடுங்கள். அப்போது அந்த தண்ணீர் நல்ல ஜல்லி பதத்திற்கு மாறி விடும். அடுத்ததாக ஒரு கப் கோதுமை மாவு, கால் ஸ்பூன் உப்பு ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் மூன்றையும் ஊற்றி தண்ணீருக்கு பதிலாக இந்த வெண்டைக்காய் ஊறிய தண்ணீரை லேசாக தெளித்து மாவை பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.
நாம் சாதாரணமாக சப்பாத்தி செய்யும் போது மாவை பிசைந்து கொஞ்ச நேரம் ஊற விடுவோம். அப்படி எல்லாம் கூட இந்த தண்ணீர் ஊற்றி பிசையும் போது ஊற வைக்க வேண்டாம். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் திரட்டி எடுத்த பிறகு சப்பாத்தி செய்து பாருங்கள். இது மிகவும் சாப்டாவும், ருசியாகவும் இருக்கும். இதில் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை சேர்த்திருப்பதால் அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இந்த வெண்டைக்காய் சேர்த்த தண்ணீர் நல்ல மருந்து. நீங்களும் இனி சப்பாத்தி செய்யும் போது இந்த டிப்ஸை பயன்படுத்திப் பாருங்கள். ஆனால் இந்த தண்ணீரை சப்பாத்தி செய்ய மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் பூரி செய்யும் போது இதை பயன் படுத்த கூடாது.
அடுத்து பூரி உப்பலாக வர என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
இதற்கு ஒரு கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கும் ரேஷன் கோதுமை மாவை பயன்படுத்தினால் கூட நன்றாக வரும். கால் டீஸ்பூன் உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிய பிறகு தண்ணீருக்கு பதிலாக சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை பயன்படுத்தி பிசைந்து கொள்ளுங்கள். இதையும் பிசைந்த பிறகு அப்படியே மாவை திரட்டி எண்ணையில் போட்டு எடுத்து விடலாம். இந்த முறையில் செய்தால் பூரி முசுபுசு வென்று இருக்கும். அதே நேரத்தில் சாப்பிடும் போது நல்ல ருசியாகவும் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல்! ரொம்ப சுலபமாக இப்படி அரைச்சு பாருங்க 10 இட்லி கூட அசராம சாப்பிடலாம்.
இனி சப்பாத்தி பூரி செய்யும் போது இந்த முறைகளில் செய்து பாருங்கள். நீங்களும் இனி சாப்ட் சப்பாத்தியும் புசுபுசுவென்று பூரியும் ஈசியாக செய்து விடலாம்.