தினமும் கடவுளிடம் இந்த 1 வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால், உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும்.

pray
- Advertisement -

மனிதர்கள் அறிந்தே கெட்டதை செய்தாலும் அதை மன்னிக்கக் கூடிய குணம் கொண்டவர் கடவுள். ஒருவர் செய்யக்கூடிய கெட்டதை உணர்ந்து, திருந்த வேண்டும் என்று தான் தெய்வம் நினைக்கும். தவிர, ஒரு உயிரை தண்டிக்க வேண்டும் என்று தெய்வங்கள் என்றைக்குமே நினைக்காது. நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் நாம் செய்த தவறை உணர்த்துவதற்காக தான். நம்மை தண்டிப்பதற்காக அல்ல. அப்படிப்பட்ட அந்த கடவுளை தினம் தினம் நாம் கும்பிடும்போது என்ன வார்த்தையை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றியும், நமக்கு ஒரு நல்லது நடக்கின்றது என்றால், அதை முதலில் நாம் யாரிடம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இன்றைக்கு ஒரு நல்லது நமக்கு நடக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்த பிரபஞ்சமும், அந்த கடவுளும் தான். இதைத் தாண்டி நாம் நினைப்பதால், இந்த உலகில் ஒரு அணுவும் அசைந்தது கிடையாது. உங்களுக்கு வெற்றியை கொடுத்த, உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கும், இந்த கடவுளுக்கும் முதலில் நீங்கள் சொல்ல வேண்டிய வார்த்தை நன்றி! நன்றி! இந்த வார்த்தைக்கு ஈடு இணை வேறு எதுவுமே கிடையாது என்று கூட சொல்லலாம். கடவுளுக்கு மட்டுமல்ல உங்களுக்கு யாராவது உதவி செய்தாலும் அவர்களை நீங்கள் நன்றி மறவாமல் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுக்கு உதவி செய்த அந்த நல்ல உள்ளத்துக்கு நன்றி என்ற வார்த்தையை மனதார தெரிவிக்க வேண்டும்.

- Advertisement -

நாளைக்கு உங்களுக்கு ஒரு நல்லது நடக்கப்போகுது. அந்த நல்ல செய்தி இன்றைக்கு உங்கள் செவிகளுக்கு எட்டிவிட்டது. முதலில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன. உங்கள் பூஜை அறைக்கு சென்று அந்த செய்தியை முதலில் உங்கள் குல தெய்வத்திடம் சொல்ல வேண்டும். எந்த குலதெய்வமாக இருக்கட்டும். அந்த குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து உதாரணத்திற்கு ‘நான் நினைத்த மாதிரியே எனக்கு நல்ல வேலை கிடைத்து விட்டது. அந்த வேலைக்கு நான் நாளையிலிருந்து செல்லவிருக்கின்றேன். எனக்கு நடக்கவிருக்கும் நல்லது கெட்டதை கூடவே இருந்து என் குலதெய்வம் தான் காக்க வேண்டும்.’ என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த நல்ல சந்தர்ப்பத்தை எனக்கு கொடுத்த குலதெய்வத்திற்கும், மற்ற தெய்வங்களுக்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி என்று சொல்லிவிட்டு பிறகு உங்களுடைய வேலையை செய்யுங்கள்.

இப்படி நன்றி என்று சொல்லக்கூடிய ஒரு வார்த்தை உங்களுடைய வாழ்க்கையில் பல நன்மைகளைத் தேடித் தரும். இது முன்னேற்றத்தை அடைவதற்கு ஒரு சுலபமான சூட்சம முறை என்று கூட வைத்துக் கொள்ளலாம். நமக்கு பிடிக்காதவர்களை கூட நம் எதிரியை கூட, நம் நண்பன் ஆக்கிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை இந்த நன்றி என்ற ஒரு வார்த்தை நமக்கு தேடித் தரும். உங்களுடைய வாழ்க்கையில் உதவி செய்யக்கூடிய மனிதர்களுக்கும், கடவுளுக்கும் இன்றிலிருந்து நன்றி சொல்லி பழகுங்கள். வாழ்வில் வரக்கூடிய வித்தியாசத்தை நீங்களே நிச்சயம் உணர்வீர்கள்.

- Advertisement -

அதேபோல உங்களுக்கு நடக்கக்கூடிய நல்ல விஷயங்களாக இருந்தாலும் சரி கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி அனாவசியமாக உங்களுக்கு தெரிந்த அத்தனை நபரிடமும் அந்த விஷயத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ள கூடாது. அது உங்களுக்கு என்றைக்குமே நல்ல பலனை கொடுக்காது. உங்களுக்கு நல்லது நடந்தாலும், கெடுதல் நடந்தாலும் அதை பகிர்ந்து கொள்ள உங்கள் மனதிற்கு பிடித்த நம்பிக்கை உடைய ஒரு நபரிடம் மட்டும் தான் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவசரப்பட்டு நமக்கு நன்மை நடப்பதற்குள் எல்லா விஷயத்தையும் எல்லோரிடமும் சொல்லும் போது அந்த நன்மை நமக்கு நடக்காமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. இது நிதர்சனமான உண்மை.

ஒரு நல்லது நடப்பதற்கு முன்பு அந்த நல்லதைப் பற்றி அனாவசியமாக அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளவே வேண்டாம். ஜெயித்த பின்பு தான் நாம் வெற்றியை கொண்டாட வேண்டும். வரக்கூடிய வெற்றியை நினைத்து முன்கூட்டியே சந்தோஷப்படுவது அவ்வளவு நல்லது கிடையாது என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -