காதலும் ஒருவகை போதைதானோ – காதல் கவிதை

Love kavithai

என் பேர் கேட்டால் உன் பேர்
சொன்னேன் பதட்டத்திலே..
கண்ணாடி முன்னே உன் முகம்
தேடினேன் குழப்பத்திலே…
காதல் கவிதை வாங்கிப்
படித்தேன் கிறக்கத்திலே…
என் கண்களை மூடியும்
உன்னை பார்த்தேன் உறக்கத்திலே..

Kadhal kavithai image
Kadhal kavithai image

காதலும் ஒருவகை போதைதானோ
உள்ளுக்குள் வெறி ஏற்றும் மாயை தானோ
தூக்கம் தொலைந்து, எடை குறைந்து
நான் என்னவோ ஆகிறேன்…
காதல் நோயால் கவிதை பாடி
நான் தினம் தினம் வாழ்கிறேன்.

Love kavithai image
Love kavithai image

காதல் வந்த காலம் முதல் பலரும் காதல் கிறுக்கர்கள் ஆகிவிடுவார்கள். அதிலே ஒரு பெண் ஆணிடம் தன் காதலை சொல்லிய பிறகும், ஒரு ஆண் தன் காதலை பெண்ணிடம் சொல்லிய பிறகும் அவர்கள் மனதிற்குள் இருந்த பாரம் நீங்கி மனம் லேசாகி ஒரு வித ஆனந்தம் பொங்கும். அந்த சூழலில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. அதை சொல்ல முயன்றதே இந்த கவிதை.

இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், காதல் தோல்வி கவிதை, அம்மா கவிதை மற்றும் பலவற்றை அறிய தெய்வீகம் பக்கத்தோடு இணைந்திருங்கள்.