மாடி வீடு கட்டினால் உயிர் பலி நடக்கும் வினோத கிராமம் – வீடியோ

Village
- Advertisement -

மனிதன் ஆதிமனிதனாக இருந்த காலத்திலேயே தன்னை விட வலிமையான ஒரு சக்தி எங்கும் நிறைந்திருப்பதை உணர்ந்திருந்தான். பின்பு சிறிது சிறிதாக அவன் நாகரிகம் அடைந்த போது “யோகம், தியானம்” போன்ற கலைகளின் மூலம் இறைவனின் ஆற்றலை உணர்ந்து கொண்டான். அப்படியான ஆற்றலை உணர்ந்த அக்கால மனிதர்கள், அந்த சக்தியை தங்கள் “குலதெய்வமாகவும், கிராம தெய்வமாகவும்” நிறுவி அவற்றிக்கு பல வகையான வழிபாட்டு முறைகளையும், சடங்குகளையும் செய்கின்றனர். அப்படி ஒரு வித்யாசமான சடங்கை கடைபிடிக்கும் ஒரு கிராமத்தை பற்றிய காணொளி தான் இது.

- Advertisement -

சிவகங்கை மாவட்டத்திலுள்ளது எஸ் கோவில்பட்டி கிராமம். இக்கிராம காவல் தெய்வமாகவும் இவ்வூர் மக்கள் பலருக்கும் குல தெய்வமாக இருப்பது இவ்வூரில் கோவில் கொண்டிருக்கும் “செவிட்டு அய்யனார்” என்கிற கிராம தெய்வம் முன்னொரு காலத்தில் இவ்வூர்மக்கள் இவ்வூரின் காட்டுப்பகுதியில் வேட்டையாடிய போது, அவர்களில் ஒருவர் வீசிய ஆயுதம் ஒன்று இங்கு தவித்திலிருந்த “காவல் தெய்வமான” அய்யனாரின் காதை தாக்கி காயப்படுத்தியதைக் கண்டு பயந்த அவ்வூர் மக்கள், இனி தங்களுக்கு பிறக்கும் ஆண்குழந்தைகளுக்கு காதுகுத்தி, அந்த காதுத்துளையை பெரிதாக்கி, இரும்பு வளையம் அணிவித்து
பிராயச்சித்தம் செய்வதாக அய்யனாரிடம் வேண்டிக்கொண்டதால் இவ்வழக்கத்தை தொன்று தொட்டு கடைப்பிடிப்பதாகவும்,மேலும் இவ்வூரின் காவல் தெய்வம் தரையில் நிலைகொண்டிருப்பதால், அவரை விட உயர்ந்த நிலையில் யாரும் இருக்கூடாது என இந்த ஊரில் யாரும் மாடி கொண்ட வீடுகளை கட்டுவதில்லை என்றும், அப்படி கட்டியவர்கள் அத்தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி, பல வித கஷ்டங்கள் அனுபவித்ததாக இவ்வூர்ப்பெரியோர்கள் கூறுகிறார்கள்.

இந்த செவிட்டு அய்யனாருக்கு காது குத்தியிருக்கும் குழந்தையின் குடும்பத்தினர் சில காலம் கடும் விரதமிருக்க வேண்டும், என்றும் அப்படி அந்த விரதத்தை மீறும் பட்சத்தில் அய்யனாரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், அப்படி அய்யனாரின் கோபத்திற்காளான ஒருவரின் சம்பவத்தை பற்றி கூறுகிறார் இவ்வூர் பெரியவர் ஒருவர்.

மேலும் இவ்வூர் மக்களுக்கு நவீன மருத்துவ முறையில் காது குத்திவிடும் டாக்டர் ஒருவர், சிங்கப்பூரில் வேலை செய்து இங்கு திரும்பிய இளைஞன் ஒருவன், தன்னுடைய காதின் துளையை அறுவை சிகிச்சை மூலம் மூடிவிடுமாறு டாக்டரிடம் கூற அவரும் அவ்வாறே செய்தார். சில நாட்களுக்கு பின் மீண்டும் இந்த டாக்டரிடம் திரும்பிய அந்த இளைஞன் தன் காது துளை அடைக்கப்பட்ட பின், தன்னால் என்ன காரணத்தாலோ மனநிம்மதியுடன் இருக்க முடியவில்லை என்றும், அதனால் மீண்டும் தன் காதில் துளை ஏற்படுத்துமாறு கூறி, அதன்படியே செய்து கொண்ட அந்த இளைஞன், தற்போது தான் மிகவும் மன அமைதியுடன் இருப்பதாக கூறியதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்ததாக கூறுகிறார் அந்த டாக்டர். மேலும் நமக்கு மீறிய ஒரு சக்தி இப்பூமியில் இருப்பதை இந்நிகழ்வின் மூலம் தான் நம்புவதாக கூறுகிறார் அந்த டாக்டர்.

- Advertisement -