காகத்திற்கு எப்படி சாப்பாடு வைக்கணும்?

kagam
- Advertisement -

பொதுவாக நம்முடைய எல்லோர் வீடுகளிலும் காகத்திற்கு சாப்பாடு வைக்க கூடிய வழக்கம் இருக்கும். ஒவ்வொரு வீடுகளில் ஒவ்வொரு மாதிரி காக்கைக்கு சாப்பாடு வைப்பீங்க. நீங்கள் எப்படி வைத்தாலும் சரி, ஒரு வாயில்லா ஜீவனின் பசியை ஆற்றினால் அது உங்களுக்கு புண்ணியத்தை தான் கொடுக்கும்.

இருந்தாலும் நம்முடைய இந்து சாஸ்திரப்படி காக்கைக்கு சாதம் வைப்பது பற்றிய சில வழிமுறைகளை நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள், நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். அதையெல்லாம் பின்பற்றும்போது நம் குடும்பத்திற்கு இன்னும் நல்லது நடக்கும். இன்னும் புண்ணியம் சேரும். காகத்திற்கு சாப்பாடு வைப்பதில் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் என்ன. அதை எப்படி திருத்திக் கொள்ளலாம் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

காகத்திற்கு சாப்பாடு வைக்கும் முறை

கணக்கு பாக்காதீங்க. தினம் தினம் காகத்திற்கு சாப்பாடு வையுங்க. எந்த நேரத்தில் எப்படி வைத்தாலும் அது தவறு கிடையாது. ஆனால் காலையில் நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பாக காகத்திற்கு சாப்பாடு வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. சாதத்தில் எச்சில் படுவதற்கு முன்பாகவே உங்க வீட்டில் சமைத்த சாதத்தை காகத்திற்கு வைத்து விடுங்கள்.

தினமும் வைக்க முடியாதவர்களாக இருந்தாலும், மாதம் தோறும் வரக்கூடிய அமாவாசை திதி, பௌர்ணமி திதி, அஷ்டமி திதி, நீங்கள் பிறந்த கிழமை இருக்கும் அல்லவா அந்தக் கிழமை, இந்த நாட்களில் எல்லாம் காகத்திற்கு சாப்பாடு வைப்பது உங்களுக்கு நற்பலன்களை தேடி கொடுக்கும்.

- Advertisement -

காகம் எச்சில் இலையில் இருந்தும் எடுத்து சாப்பிடும். அசைவ எச்சில் சாப்பிடும். இப்படி எல்லாவற்றையும் காகம் தானாக தேடிப்போய் சாப்பிடும் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் நீங்கள் சாப்பிட்டு முடித்த பிறகு உங்கள் தட்டில் மீதம் இருக்கும் எச்சிலை கொண்டு போய் உங்கள் கையால் காகத்திற்கு வைக்காதீங்க. அது பாவம்.

நாம் சாப்பிட்ட மீத உணவை நாய்களுக்கு வைக்கலாம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நாம் சாப்பிட்ட மீதத்தை காகத்திற்கு வைக்கக் கூடாது. நாய்களை பைரவர்களாக நாம் பார்த்தாலும், நாம் சாப்பிட்ட மீதம் உணவை நாய்களுக்கு வைக்கலாம். இதை தான் நம்முடைய முன்னோர்களும் பின்பற்றி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

காகத்திற்கு நாம் சமைத்த உணவை தான் வைக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. பிஸ்கட், மிக்சர், அல்லது வேறு ஏதாவது ஒரு உணவுப் பொருட்களை கூட நீங்கள் வாங்கி வைத்து தினம் தினம் காலையில் எழுந்தவுடன் அந்த பொருளை காகத்திற்கு போடும் வழக்கத்தை வைத்துக் கொள்ளலாம்.

காகம் தவிர மற்ற பறவைகளும் அந்த சாப்பாடை சாப்பிடும்போது நம் குடும்பத்திற்கு கோடான கோடி நன்மையும் புண்ணியமும் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். அதுவும் பறவைகள் அதிகாலை ஆறு மணிக்கு முன்பு எழுந்து இறை தேடும் அந்த சமயத்தில், அதன் பசியாற்ற உங்கள் கையால் இறைபோட்டால் கோடி புண்ணியமுங்க.

அதேபோல காகத்திற்கு தாலிக்காத தயிர் சாதம் வைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. அந்த தயிர் சாதத்தில் கொஞ்சம் எள் சேர்த்து அமாவாசை தினத்தில் வைத்தால் நம்முடைய பித்துருக்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். அமாவாசை நாளில் இந்த ஒரு விஷயத்தையும் நீங்க மறக்காதீங்க.

இதையும் படிக்கலாமே: சொந்த நிலம் வாங்க பரிகாரம்

சாஸ்திரங்கள் நமக்கு சொல்லக்கூடிய விஷயங்கள் எல்லாமே நன்மைக்காகத்தான். குதர்க்கமாக பேசுபவர்களுக்கு ஆன்மீகமும் இல்லை, சாஸ்திரமும் இல்லை. ஆகவே நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் மேல் சொன்ன இந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -