வெளிநாடு சென்று கோடிகளில் சம்பாதிக்கும் யோகம் உங்கள் கைரேகையில் உண்டா ?

kairegai palan

இன்றைய இளைஞர்கள் பலருக்கு மிக விரைவாக வாழ்வில் முன்னேறிவிட வேண்டும் என்றொரு ஆர்வம் உள்ளது. அந்த ஆர்வம் ஆர்வக்கோளாறாக இல்லாமல் அவர்கள் கடினமாக உழைக்கவும் செய்கின்றனர். இதில் பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாட்டிற்கு சென்றால் மிக எளிதாக சம்பாதிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகம் உண்டு என்று சொல்கிறது கைரேகை சாஸ்திரம். அந்த வகையில் உங்கள் கை ரேகை எப்படி இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் உங்களுக்கு உண்டு என்பதை பார்ப்போம் வாருங்கள்.

kairegai

1 . மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் எண் ஒன்றை கவனியுங்கள். இந்த எண் இருக்கும் பகுதிக்கு பெயர் தான் சந்திரமேடு. செவ்வாய் மேட்டுக்குக் கீழே கங்கண ரேகைக்கு மேலே உள்ள இந்த சந்திரமேடானது நன்றாக உருண்டு இருக்க வேண்டும்.

2 . மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் எண் இரண்டை கவனியுங்கள். அதில் உள்ளது போல புத்தி ரேகை சந்திரமேட்டை தொட வேண்டும்.

3 . மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் எண் மூன்றை கவனியுங்கள். படத்தில் இருப்பது போல பயண ரேகையானது சந்திரமேட்டில் தெளிவாக அமைந்திருக்க வேண்டும்.

kairegai

- Advertisement -

4 . மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் எண் நான்கை கவனியுங்கள். அந்த படத்தில் இருப்பதை போல விதி ரேகையானது சந்திர மேட்டில் தொடங்கி எவ்வித இடையூறும் இல்லாமல் புத்தி ரேகை மற்றும் இருதய ரேகையைக் கடந்து செல்ல வேண்டும்.

5. கையில் உள்ள கட்டை விறல் நன்றாக நீண்டு இருக்க வேண்டும்.

aeroplane

இதையும் படிக்கலாமே:
உங்கள் லக்னபடி என்ன செய்தால் வாழ்வில் வளர்ச்சி காணலாம் தெரியுமா ?

மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்கள் உங்கள் கையில் இருக்குமாயின் உங்களுக்கு கடல்மாதாவின் ஆசி உள்ளது என்று பொருள். ஆகையால் உங்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் நிச்சயம் உள்ளது. அதோடு உங்களுக்கு கலையை ரசிக்கும் தன்மையும் இருக்கும். ஆகையால் பல நாடுகளுக்கு சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இயல்பாகவே இருக்கும்.