கை வலிக்காமல் பாத்ரூம் கதவில் ஒட்டி பிடித்திருக்கும் உப்பு கறையை நீக்க, சிம்பிளான சூப்பர் ஐடியா. இதை செய்தால், பல வருட கணக்கில், பாத்ரூம் கதவில் உப்பு கறை மீண்டும் பிடிக்கவே பிடிக்காது.

door
- Advertisement -

எவ்வளவு தான் பாத்ரூமை கழுவி சுத்தம் செய்தாலும் இந்த கதவுக்கு பின்னால் படிந்திருக்கும் உப்பு கறையை நீக்குவதில் ரொம்ப சிரமம் இருக்கும். பாத்ரூமில் குளிக்கும் போது அந்த தண்ணீர் எல்லாம் சிதறி கதவின் மேல் படும். அது அப்படியே வெள்ளை நிற கறையாக படிந்து விடும். இது லேசாக இருந்தால் சுலபமாக நீக்கிவிடலாம். வருடக்கணக்கில் சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால் இந்த கறையை நீக்குவதில் சிரமம் இருக்கும். இப்படி நீண்ட நாட்களாக படிந்து இருக்கும் உப்பு கறையை எப்படி நீக்குவது, மீண்டும் மீண்டும் உப்பு கறை படியாமல் பாத்ரூம் கதவு பின்னால் பாதுகாக்க என்ன வழி இருக்குது, பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

பாத்ரூம் கதவில் உப்பு கறை நீக்கவும், மீண்டும் உப்பு கறை படியாமல் இருக்கவும் ஐடியா:
முதலில் இந்த கறையை நீக்க ஒரு லிக்விட் தயார் செய்ய வேண்டும். சின்ன பிளாஸ்டிக் கப்பில் எலுமிச்சம்பழச் சாறு 4 டேபிள் ஸ்பூன், தூள் உப்பு 4 ஸ்பூன், நீல நிற ஹேர் பிக் 2 மூடி, ஊற்றி எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது நமக்கு தேவையான பேஸ்ட் தயார். ஒரு ஸ்பாஞ்ச் நாரில் இந்த லிக்விடை தொட்டு உப்பு கறை இருக்கக்கூடிய பாத்ரூம் கதவில் லேசாக தடவி விடுங்கள். இந்த ஸ்பான்ஞ் நாரை வைத்து தேய்க்கும் போதே உப்புக்கறை எல்லாம் அப்படியே நீங்கும் அதிசயத்தை பார்க்கலாம்.

- Advertisement -

ரொம்பவும் வருட கணக்கில் படிந்திருக்கும் உப்பு கறையாக இருந்தால் அதை கொஞ்சம் அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும். எப்படி தெரியுமா. ஸ்பாஞ்ச் நாரை கொண்டு இந்த லிக்விடை கதவு முழுவதும் தடவி விட்டுட்டீங்க. இதை 15 லிருந்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். தடவிய லிக்விடை அப்படியே விட்டுவிட்டால் காய்ந்து போகும்.

அதனால் ஒரு நியூஸ் பேப்பரை எடுத்து லிக்விட் பூசி இருக்கும் கதவின் மேல் ஒட்டிவிட்டு, மீண்டும் அந்த நியூஸ் பேப்பருக்கு மேல் இந்த லிக்விடை தடவி விட்டுடுங்க. 20 நிமிடம் கழித்து அந்த பேப்பரை எழுத்தால் உப்பு கறை படிந்த இடம் நன்றாக ஊறி இருக்கும்.

- Advertisement -

பிறகு லேசாக ஒரு ஸ்பாஞ்ச் நாரை கொண்டு தேய்த்தாலே கதவு பளிச் பளிச்சென மாறும். கதவின் அடிப்பகுதியில் இருக்கும் உப்புக்கறை ரொம்பவும் அடர்த்தியாக இருக்கிறதா? ஸ்டீல் நாரை வைத்து பாத்திரம் தேய்ப்பது போல லேசாக தேச்சு விடுங்க. அவ்வளவுதான். இப்போது கதவு முழுவதையும் தண்ணீரை ஊற்றி கழுவி விடுங்கள். காய்ந்த பிறகு மீண்டும் வெள்ளை நிற திட்டுக்கள் தெரிய தானே செய்யும். ஈரம் எல்லாம் காய்ந்த பிறகு, தேங்காய் எண்ணெயை ஒரு காட்டன் துணியில் தொட்டு கதவுக்கு பின்னால் முழுவதும் தடவி விட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெள்ளை சட்டை யூனிபார்ம் காலர் அழுக்கெல்லாம் போக கை வலிக்க தேய்க்கமா மெஷினில் இந்த கல்ல போடுங்க துணி எல்லாம் பளிச்சின்னு ஆயிடும். என்னது! மிஷின்ல கல்லை போடணுமா? ஆச்சரியமா இருக்கா வாங்க என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.

வெள்ளை திட்டுக்கள் தெரியாது. மீண்டும் இந்த இடத்தில் தண்ணீர் சேர்ந்து உப்பு கறையும் படியாது. வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு வாரத்துக்கு ஒரு முறையோ கதவுக்கு பின்னால் தேங்காய் எண்ணெய் தடவி வர பல வருடங்களுக்கு உங்கள் கதவு உப்பு கறை படியாமல் புது கதவு போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. (அதே சமயம் வாரத்திற்கு ஒரு நாள் கட்டாயமாக கதவுக்கு பின்னால் வெறும் துணி துவைக்கும் பவுடர் அல்லது லிக்விட் போட்டு தேய்த்து கழுவி விட வேண்டும்.) இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -