வெள்ளை சட்டை யூனிபார்ம் காலர் அழுக்கெல்லாம் போக கை வலிக்க தேய்க்கமா மெஷினில் இந்த கல்ல போடுங்க துணி எல்லாம் பளிச்சின்னு ஆயிடும். என்னது! மிஷின்ல கல்லை போடணுமா? ஆச்சரியமா இருக்கா வாங்க என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.

washing machine cloth washing tips
- Advertisement -

வீட்டில் துணி துவைக்கும் வேலை இருக்கிறது என்றாலே இப்போதெல்லாம் சொல்லும் ஒரே வார்த்தை அதான் மிஷின் இருக்கிறதே அப்புறம் என்ன என்று சொல்லி விடுவார்கள். ஆனால் வாஷிங் மெஷின் இருந்தால் மட்டும் என்ன அதிலே எல்லா துணியும் துவைத்து விட முடியாது அல்லவா? குழந்தைகளின் யூனிபார்ம், வெள்ளை துணி, காலர் அழுக்குகள் இதையெல்லாம் தனியாக ஊற வைத்து கை வலிக்க தேய்த்த பிறகு தான் மிஷினில் போட வேண்டும்.

இப்படி தேய்த்தால் தான் துணிகளும் அழுக்கு நீங்கி பளிச்சென்று இருக்கும். இதற்கு கைகளில் துணி துவைத்து விடலாம் என்று கூட சில நேரம் தோன்றும். அழுக்கு அதிகமாக உள்ள துணிகளை இப்படித் தான் தேய்க்க வேண்டியதாக இருக்கும். இதில் மற்ற துணிகளை நாம் சாதாரணமாக போட்டு எடுத்து விடலாம். அந்த நேரத்தில் வாஷிங் மெஷின் உதவியாக இருக்கும். இது போல அழுக்கு அதிகமாக இருக்கும் துணிகளை கூட சிரமமே இல்லாமல் மிஷினில் துவைக்க ஒரு அருமையான டிப்ஸ் பற்றி தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

வெள்ளை துணிகள் பளிச்சென்று மாற
இந்த முறையில் துணி துவைக்கும் போது நீங்கள் சாயம் போகும் துணிகளை தவிர மற்ற அனைத்து துணிகளையும் ஒன்றாகவே சேர்த்து போடலாம். இதில் அழுக்கு அதிகமாக இருக்கும் துணிகள் மற்ற துணிகள் என அனைத்தையும் ஒரே நேரத்தில் போட்டு துவைத்து எடுத்து விடலாம்.

இதற்கு முதலில் அழுக்கு துணிகளை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து வாஷிங்மெஷினில் பிரித்து போட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் ஊற்றும் லிக்விட், சோப்பு பவுடர் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் பொதுவாக வாஷிங்மெஷினில் பயன்படுத்தும் போது சோப்பு பவுடருக்கு பதிலாக லிக்விட் பயன்படுத்துவது துணிகளுக்கும் நல்லது. அதே நேரத்தில் மிஷினும் பழுதாகாமல் அதிக நாள் உழைக்கும்.

- Advertisement -

இப்போது இந்த துணிகளுடன் போட வேண்டிய அந்த கல் படிகார கல் தான். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விலை மிகவும் குறைவு. இதை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் கொஞ்சமாக பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மெஷினில் துணிகளை போட்ட பிறகு லிக்விட் ஒட்டும் இடத்தில் இந்த பவுடரை ஒரு ஸ்பூன் மட்டும் போட்ட பிறகு துணிகளை அரை மணி நேரம் ஊற விடுங்கள். வாஷிங்மெஷினிலே ஊற வைக்க ஆப்ஷன் இருக்கும்.

அப்படி இல்லாத பட்சத்தில் மட்டும் துணிகளை தனியாக ஊற வைத்து பிறகு வாஷிங் மெஷினில் போடுங்கள். அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் போல துவைத்து எடுத்துப் பாருங்கள் காலரில் உள்ள அழுக்கு கறைகள் வெள்ளைத் துணிகளில் இருக்கும் கறைகள் எல்லாம் பளிச்சென்று நீங்கி விடும். இதற்கென இனி நீங்கள் கைவலிக்க துவைக்க தேவையில்லை. விலை குறைவான இந்த ஒரு கல்லை வாங்கி தூள் செய்து போட்டாலே போதும் துணிகள் அனைத்தும் பளிச்சென்று மாறி விடும். இதை பெரும்பாலும் துணி துவைக்கும் சலவை தொழில் செய்பவர்கள் பயன்படுத்தும் ஒரு பழமையான முறை தான் இது.

இதையும் படிக்கலாமே: எலிகள் இனி நீங்க இருக்க திசைப்பக்கம் கூட வராம தலை தெறிக்க ஓட வைக்க ஒரு ரூபா ஷாம்பு பாக்கெட் இருந்தா இப்படி செஞ்சு வெச்சிருங்க. எலி தொல்லை இனி இல்ல.

இதே போல் துணிகளை துவைக்க லிக்விட்டை பாதி அளவு சேர்த்து பாதி அளவு நாம் பயன்படுத்தும் ஷாம்புவை அதில் சேர்த்தால் போதும் துணிகள் அல்ல நறுமணத்துடன் இருப்பதுடன், துணிகளில் சாயும் போவது, துணி பழுதடைவது போன்றவை அல்லாமல் துணிகள் நீண்ட நாட்கள் வரை நன்றாக உழைக்கும் இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் பயன்படுத்தி பாருங்கள் நிச்சயம் நல்ல பலனை தரும்.

- Advertisement -